வாழ்க நலமுடன்

வாழ்க நலமுடன், செ.சரவணன், ஜெயலஷ்மி எண்டர்பிரைஸஸ், பக். 160, விலை 130ரூ.

இந்நூலாசிரியர் மருத்துவரோ, மருத்துவ ஆராய்ச்சியாளரோ அல்ல. ஆனால், உடல் நலம், மனநலம் காக்கும் வழிமுறைகளையும், அதற்கான பயிற்சிகளையும், உணவு முறைகளையும் இந்நூலில் விளக்கியுள்ளார். அதற்காக, பல கருத்தரங்குகள், நூல்கள், பத்திரிகைகள், இயற்கை மருத்துவர்கள், இணைய தளங்கள் என்று பலவற்றிலும் தகவல்களைத் திரட்டி இந்நூலை உருவாக்கியுள்ளார். தவிர, படிப்பவர்களுக்கு எளிதில் புரியவும், மனதில் பதியவும் தன் நண்பர்களோடு கலந்துரையாடல் செய்வது போன்று, இந்நூலை இயற்றியுள்ளது புதுமையானது.

ஆரோக்கியம் என்றால் என்ன என்பதற்கு முதல் அத்தியாயத்தில் விளக்கம் தரும் ஆசிரியர் மூன்று வேளையும் உணவுகளை உண்ணுவது, உறங்குவது எழுதுவது எப்படி என்பனவற்றை விளக்குகிறார். இரண்டாவது அத்தியாயத்தில், அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவதோடு மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம், நடைப்பயிற்சி போன்றவற்றை எப்படி செய்ய வேண்டும் என்பதையும், இந்தப்பயிற்சிகளினால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் விளக்குகிறார். அதேபோல் கண்களில் பார்வைக் கோளாறு வராமல் பாதுகாக்கும் முறைகளைப் பயிற்சியுடன் விளக்குகிறார். அடுத்து குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீரை எப்படி பயன்படுத்துவது, பாலை எப்படி காய்ச்சி பருகுவது, டீ காபி குடிப்பது சரியா, எந்த உணவை எப்படி சமைக்க வேண்டும், உணவில் சேர்க்கக் கூடிய சமையலறைப் பொருட்களில் உள்ள நன்மைகள் என்னென்ன, காய்கறிகளில் என்னென்ன, உணவு தானியங்களில் என்ன வகையான விட்டமின்கள் உள்ளன. அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன… இப்படி பல்வேறு விபரங்கள் 16 அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. படிப்பவர்களுக்கு பயனளிக்கக் கூடியது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 21/11/18.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027593.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *