இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம். பல நூற்றாண்டுகளாக கற்பதற்கு கடினமானதாக கருதப்பட்ட, இந்திய தத்துவ நூல்களை எளிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய புரிதலை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இந்த நூலிலுள்ள 28 தொடர் கட்டுரைகள், இந்திய மண்ணில் வேர்விட்டு வளர்ந்துள்ள தத்துவங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், பண்டைய மத்திய கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிட்டு, தத்துவங்களின் உண்மையான மதிப்பையும், தேவையையும் நமக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த நூல் சென்னை தரமணியில் செயல்படும் உலகத் […]

Read more

அபிராமி

அபிராமி, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 17ரூ. கிருபானந்தவாரியார் எழுதிய நாவல் பக்தி இலக்கியங்களை ஏராளமாக எழுதிக் குவித்துள்ள கிருபானந்த வாரியார் நாவலும் எழுதியிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத செய்தி. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய நாவல் அபிராமி. புராணத்தில் இடம் பெற்றுள்ள சாரங்கதரா கதையை நவீனப்படுத்தி இந்த நாவலை படைத்துள்ளார் வாரியார். அவருக்கே உரித்தான தூய தமிழ்நடை. 60 பக்கங்களே கொண்ட இந்த சிறு நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். அவ்வளவு […]

Read more