நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம்

நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம், மோகன் சுந்தரராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.240, விலை ரூ.150. மரபணு பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இப்போது பெரிய அளவில் வளர்ந்துவிட்டன. பாக்டீரியாவின் மரபணுவில் வேறுபாடுகள் தோன்றி மருந்துகளைச் செயலிழக்கக் செய்துவிடுகிறது. ஆர்டெமிசினின் மருந்து, பென்சிலின் ஆகியவை ஒரு நோயாளியின் உடலில் செயல்படாமல் போவது இதனால்தான். நமது உடலில் வலி தோன்றுவதற்குக் காரணமான மரபணு எஸ்என்பி -9 ஏ. இது உடலில் சோடியம் செல்லும் பாதைகளில் ஒன்றான என்ஏவி 1.7 என்பதை ஒழுங்குபடுத்துகிறது. இந்தப் பாதையைச் செயலிழக்கச் செய்துவிட்டால், கொதிக்கும் […]

Read more

திருவருட்குறள்

திருவருட்குறள் (மூலமும் உரையும்), ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன், மணிவாசகர் பதிப்பகம், பக்.799, விலை ரூ.750. கால வகையினான் புதியன புகுதல் என்பது இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றியும், அடித்தளமாகவும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முப்பால்களையும், 366 அதிகாரங்களையும் கொண்டு, இயலுக்கு பத்து குறள்களாக, அதிகாரப் பெயர்களில் சில மாற்றங்களுடன் அமைந்துள்ளது. கற்புடைமை (13) அதிகாரத்தில், கற்புடைய பொற்புடையார் நல்லுருச் செய்துலகு/ கற்கோட்டம் கட்டித் தொழும்என்றும்; கணவன்-மனைவி கடன் எனக் கூறும் (22) அதிகாரத்தில், படிப்பும் பதவியும் பட்டமும் வாசல்/ படியிலே […]

Read more

தமிழ் சினிமா உலகம் தொகுதி 1

தமிழ் சினிமா உலகம், தொகுதி 1, திருப்பூர் அகிலா விஜயகுமார், மணிவாசகர் பதிப்பகம், விலை 600ரூ. தமிழ் சினிமா உலகில் 1930-ம் ஆண்டு மவுன மொழிப் படங்களின் சகாப்தம் முடிவடைந்து, 1931-ல் ‘காளிதாஸ்’ படம் மூலம் பேசும் மொழிப்படங்களின் வருகை தொடங்கியது என்ற தகவலைத் தரும் இந்த நூல், 1931 முதல் 1940 வரை வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வரலாறு, அந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஆகிய விவரங்கள், சினிமா ரசிகர்கள் படித்து சுவைக்கும் வகையிலும், மாணவர்களுக்கு உதவும் ஆய்வு தகல் […]

Read more

திருவருட்குறள் (மூலமும் உரையும்)

திருவருட்குறள் (மூலமும் உரையும்),  ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன், மணிவாசகர் பதிப்பகம், பக்.799, விலை ரூ.750. கால வகையினான் புதியன புகுதல்என்பது இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றியும், அடித்தளமாகவும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முப்பால்களையும், 366 அதிகாரங்களையும் கொண்டு, இயலுக்கு பத்து குறள்களாக, அதிகாரப் பெயர்களில் சில மாற்றங்களுடன் அமைந்துள்ளது. கற்புடைமை (13) அதிகாரத்தில், கற்புடைய பொற்புடையார் நல்லுருச் செய்துலகு/ கற்கோட்டம் கட்டித் தொழும் என்றும், கணவன்-மனைவி கடன் எனக் கூறும் (22) அதிகாரத்தில், படிப்பும் பதவியும் பட்டமும் வாசல்/ படியிலே விட்டுள்வரல் […]

Read more

முகத்தில் முகம் பதித்தோர்

முகத்தில் முகம் பதித்தோர், இளமாறன், மணிவாசகர் பதிப்பகம், பக்.192, விலை ரூ.150. முகம் சிற்றிதழில் வாழ்வில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. அவை பல தொகுப்புகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் சாதனை புரிந்த ஆற்றலாளர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியுள்ளன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் க.அன்பழகன் போன்ற அரசியல் தொடர்புள்ளவர்கள், பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன், ஒளிப்படக் கலைஞர் இரா.மணி, கல்வெட்டாய்வாளர் கோ.கிருட்டிணமூர்த்தி, தொல்லியலறிஞர் ச.கிருட்டிணமூர்த்தி, மருத்துவர் க.கோபால் போன்ற பல்வேறு துறை சார்ந்தவர்களின் […]

Read more

திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி

திரையெனும் கடலில்பாடலெனும் படகோட்டி, பொன் செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. தமிழ்த் திரைப்பட உலகில் பாடலாசிரியராக இருந்து கோலோச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் வாலி, கன்னட நடிகரும் இயக்குனருமான டி.கெம்பராஜ் அர்ஸ் மூலமாக திரைப்பட உலகுக்கு அறிமுகம் ஆனவர் என்ற தகவல் உள்பட, கவிஞர் வாலி தொடர்பான பல ருசிகர செய்திகளை இந்த நூல் தருகிறது. கவிஞர் வாலி, 1959ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் 297 படங்களுக்கு திரைப்படப் பாடல்கள் எழுதினார் என்று கூறி அந்தப் பாடல்கள் அனைத்தையும் […]

Read more

சொல்லாய்வுகள்

சொல்லாய்வுகள்,  வய் .மு. கும்பலிங்கன்,  மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. ஓரெழுத்து ஒரு மொழி, ஒரு பொருள் பன்மொழி, பல்பொருள் ஒரு மொழி என்பது தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும். ஒரு சொல்லில் ஓர் ஒற்று இல்லையென்றால் அதன் பொருளே மாறிப் போய்விடும் அபாயம் தமிழில் உண்டு. அதேபோல, பொருள் மாறுபாடான- வேறுபாடான பல சொற்கள் தமிழில் உண்டு. அத்தகைய சொற்களின் பொருளை அறியாமலேயே அவற்றை நாம் அன்றாடம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பது இந்நூலைப் படிக்கும்போது நன்கு விளங்குகிறது. அத்தகைய சொற்களை […]

Read more

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்)

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்),  ஈச நேசன் மகஸ்ரீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.96, விலை ரூ.75. ஓர் ஆன்மிக மாத இதழில் மாதம்தோறும் வெளியான கேள்வி – பதில்கள் (200) இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சிவன் கோயிலில் சண்டீஸ்வரர் சந்நிதியில் கை தட்டுவது ஏன்? எலும்பிச்சை விளக்கு ஏற்றுவதன் ஐதீகம் என்ன? தெய்வத்தை தினமும் பூஜை செய்தாலும் சோதனை ஏற்படுவது ஏன்? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா? பூஜைக்குரிய பாத்திரங்களை எந்தெந்த நாள்களில் துலக்க வேண்டும்? ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து […]

Read more

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலைரூ.125. சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மணிவாசகரின் திருக்கோவையாரில் இடம் பெற்ற மீண்டாரென உவந்தேன் என்ற பாடலையும், அதன் பொருளையும் விளக்கும் தூண்டா விளக்கனையாய் என்ற கட்டுரையில் தொடங்கி, இறைவனின் இன்பமான இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் பெருமையைக் கூறும் இன்ப ஊர்தி என்ற கட்டுரை ஈறாக இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியர் மேடையில் பேசியவை, தினமணியிலும் வேறு சிறப்பு மலர்களிலும் எழுதியவைகட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சைவத்தின் […]

Read more

ஏ.எம்.ராஜா ஜிக்கி திரையிசை பாடல்கள்

ஏ.எம்.ராஜா ஜிக்கி திரையிசை பாடல்கள், தொகுப்பு ஜே,விஜயராகவன், மணிவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. தன்னுடைய குரல் வளத்தாலும், இசையாலும் 35 ஆண்டுகள் மக்கள் மனதில் கொடி கட்டிப்பறந்த பாடகரும், இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜா, மற்றும் அவருடைய காதல் மனைவி ஜிக்கி என்கிற கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் தமிழ் திரையிசையில் எண்ணற்ற வெற்றி பாடல்களை தந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றையும், திரையிசையில் அவர்களின் பயணத்தையும் விரிவாக இந்த நூல் அலசுகிறது. இருவர் பற்றியும் அறிந்திடாத அரிய தகவல்களும், புகைப்படங்களும் இடம் பெற்றிருப்பது நூலின் தனி சிறப்பு. […]

Read more
1 2 3 10