ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் நூலகம், சென்னை, பக். 176, விலை 100ரூ. அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு இதழியல் கோட்டையாக விளங்கிய புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தாலும் அச்சக அதிபர் ஒருவருக்கு மகனாகப் பிறந்ததாலும் இந்நூலாசிரியருக்கு பத்திரிகைத் துறையில் சிறுவயது முதலே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தனது வாழ்வின் சில முக்கிய அனுபவங்கள் குறித்தும், தான் சந்தித்த சில பிரமுகர்கள் குறித்தும் கட்டுரையாகவும், துணுக்காகவும், கவிதையாகவும் சில இதழ்களிலும், சில சிறப்பு மலர்களிலும் அவர் எழுதியிருப்பதன் தொகுப்பு இந்நூல். ஆழமான விஷயங்கள் எதுவுமில்லாததாலும், […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html சுஜாதா, அம்பலம் மின்னிதழிலும் கல்கி வார இதழிலும் எழுதிய பாசுர அறிமுகங்களின் தொகுப்பு இந்த நூல். தமிழ் அழகும் பக்தி ரசமும் சொட்டும் அழகிய பாசுரங்களுக்கு நவீன பாணியில், மொழியில் உரை எழுதியுள்ள சுஜாதா, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல அரிய தமிழ்ச் சொற்களையும் அறிமுகப்படுத்துகிறார். அவருக்கு விருப்பமான பாசுரங்களை எடுத்துக்கொண்டு அதன் இலக்கிய தன்மையை மையப்படுத்தி, ஆழ்வார்களின் பக்திப் பெருக்கை உயர்த்திப் பிடித்து, […]

Read more

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள் (பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு), தொகுப்பாசிரியர்-கவிஞர் சுரதா கல்லாடன், மணிவாசகர் நூலகம், சென்னை 108, பக். 804, விலை 600ரூ. 1920 முதல் 1978 வரை வெளியான பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்து நூல்களும் அடங்கிய முழுத்தொகுப்பு. அவரது முழு ஆளுமையை விவரிக்கிறது. கற்பகத்தின் நற்குளிர் கிடப்பதென்று உளத்து எழுந்த சுப்புரத்தினம் உரைத்த நற்பதத்தை உச்சரிப்பீர் என்று தன்கவியை வியக்கும் ஆன்மிகக் கவிஞராக இருந்தவர் (மயிலம் ஸ்ரீசிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்) முற்றிலும் நாத்திகராக மாறி, சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து தமிழுக்காக தமிழருக்காகப் பாடிய பாடல்கள் […]

Read more

சட்டமும் சாமானியனும்

சட்டமும் சாமானியனும், வக்கீல் ராபர்ட் சந்திரகுமார், இனியன் அதிதி பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 100ரூ. ஆசிரியர் மதுரை ஐகோர் கிளை வக்கீல். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகன், கல்வி, குழந்தை, பெண், திருநங்கை, பழங்குடியினர், தொழிலாளர், காவல்துறை அத்துமீறல், மரண தண்டனை, சட்டம், தண்ணீர், தமிழ் தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். கருத்தாழமிக்கதாக உள்ளது. சம்பந்தப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்கிறது. பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டத்தில் இளம் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் பற்றி ஒரு கட்டுரை, 1992ல் மோகினி ஜெயின், 1993ல் […]

Read more