எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வாலி எழுதிய பாடல்கள்

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வாலி எழுதிய பாடல்கள், வாலி பதிப்பகம், 12/28, சவுந்தர்ராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 150+150ரூ. எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், திரை உலகில் புகழின் உச்சியில் இருந்தபோது, இருவருக்கும் பாடல்கள் எழுதிய பெருமைக்கு உரியவர் வாலி. எம்.ஜி.ஆருக்கு அதிக பாடல்கள் எழுதியவர். எம்.ஜி.ஆரின் கொள்கை விளக்கப் பாடல்களில் பெரும்பாலானவற்றை எழுதியவர். நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்(எங்க வீட்டு பிள்ளை), மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (தெய்வத்தாய்), வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் (தேடி வந்த மாப்பிள்ளை), நல்ல நல்ல […]

Read more

அனுபவச் சுவடுகள்

அனுபவச் சுவடுகள், டாக்டர், கு. எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை ரூ.125. வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களையும் அவர்களால் ஏற்பட்ட அனுபவங்களையும் பற்றியும் நினைவு கூர்தலே இந்நூல். கல்லூரி படிப்புக்கு வழிகாட்டும் ரங்க ஐயங்கார், ஆங்கிலம் தெரியாத கண்ணுச்சாமி, வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளும் கந்தசாமி, சந்துருவின் மனைவி, மகள் எனப் பலவகையான மகத்தான மனிதர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன். அத்துடன் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு குட்டி சிறுகதைபோல் […]

Read more

விஸ்வபிரம புராணம்

விஸ்வபிரம புராணம், வி. சுப்பிரமணியன் ஆச்சாரி, நிர்வாக டிரஸ்டி, பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஆசாரியர் பவுண்டேஷன், 70, முதல்தளம், 1, பி, கிராஸ், இரண்டாவது மெயின்ரோடு, 5வது பிளாக், கிருஷ்ணா லே அவுட், பானசங்கரி, 3வது ஸ்டேஜ், பெங்களூரு 560085, விலை 650ரூ. வடமொழியில் புகழ் பெற்ற நூல் விஸ்வபிரம புராணம். இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 1894ம் ஆண்டில் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது. இப்போது 119 ஆண்டுகளுககுப் பிறகு மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வைதீகர்களுக்கும், புரோகிதர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது. நன்றி: தினத்தந்தி, 9/10/13.   […]

Read more