இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம், முனைவர் மா.ராமச்சந்திரன், மணிமேகலை பிரசுரம், பக். 118, விலை 130ரூ. ‘சீர் சுமக்கும் சிறகுகள்’ என்ற தலைப்பில், மாத இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது புத்தகம். மனம் பண்படுவதற்கு வழிவகை செய்யும் முறையில், 48 உள்தலைப்புகளில் அடுக்கப்பட்டிருக்கிறது கட்டுரைகள். ‘வாழ்க்கை நெறிக் கல்வி’ என்ற தலைப்பில், வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி, தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான உயர் எண்ணங்களைப் பேசுவதற்காக சேகரித்த சிறு சிறு குறிப்புகளை சற்று விரிவாக்கி, கட்டுரையாக்கிய […]

Read more

குழந்தைப் பருவத்து நினைவுகள்

குழந்தைப் பருவத்து நினைவுகள், தெ.வி.விஜயகுமார், சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை, பக். 113. மனிதனின் வாழ்நாளில் குழந்தைப் பருவம் பலருக்கு வரமாகவும், பலருக்கு சாபமாகவும் அமைந்து விடுகிறது. இந்த வேறுபாட்டிற்கு பெரும்பாலும் முதன்மையான காரணம் பொருளாதார பலமும், பலவீனமுமே. பொருளில்லார்க்கு இவ்வுலகு முற்றிலுமாக இல்லை என்பதை உணர்ந்து உழைத்து மீண்டெழுந்தவர் பலர்; எழாது வீழ்ந்தோரும் பலர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மீண்டெழும் ஒரு சாமானியரின் அல்லல் மிக்க இளமைக் காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நுால். போதுமான வருவாய் இல்லாத நோயாளித் […]

Read more

யார் தமிழர்?

யார் தமிழர்?, ஆர்.பி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், விலை 140ரூ. ஆர்யமாம் திராவிடமாம் அத்தனையும் புளுகே’ என துவங்கி, ‘பாரதி பார்வையில் பிராமணர்கள்’ ஈறாக, 13 கட்டுரைகள் பெரும்பாலும் திராவிட இயக்க எதிர்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கியவையாகும். கடந்த, 1965ல் காங்கிரசை வீழ்த்த ராஜாஜி தான் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் ஆடினார் -– பக்., 56. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியை, ராஜ்யோத்சவ நாளாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கொண்டாடவில்லை – பக்., 60. இப்படி […]

Read more

ஓட்டைக் குடிசை

ஓட்டைக் குடிசை, வித்யாசாகர், முகில் பதிப்பகம், விலை 120ரூ. தமிழ் வாசக உள்ளங்களை தன் பேனா முனையால் தன்வசப்படுத்திக் கொண்ட வித்யாசாகர், சிறுகதை மூலம் அழகிய அனுபவப் பகிர்வை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஓட்டைக் குடிசை சிறுகதை தொகுப்பில் காட்டாற்று வெள்ளம் போல மடமடவென வரும் வார்த்தைகள், நுாலாசிரியரின் எழுத்தாற்றலுக்கு கிடைத்திருக்கும் பெரும் பலம். புதிய அனுபவத்தை மாறுபட்ட களத்தில் அளித்திருக்கும் வித்யாசாகருக்கு பாராட்டுகள். – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

விபரீத ஆட்டம்

விபரீத ஆட்டம், சுப்ரஜா, வாதினி, விலை 120ரூ. நாவல் பேசியிருப்பது சுப்ரஜாவின் திக் திக் திகில் நடனமல்ல, விளையாட்டு; அதுவும் மரண விளையாட்டு. இரட்டை பெண்களில் ஒருத்தி காணாமல் போகிறாள். அவள் தலை மறைந்ததன் ரகசியம் என்ன என்பதை அறிய வரும் அவளின் குடும்பத்தினரை, அடுத்தடுத்து விபரீதங்கள் துரத்துகின்றன. இறுதியில் மர்மம் விடுபடுகிறது. மரணத்திற்கும், மர்ம சம்பவங்களுக்கும் காரணமானதே ஆட்டந்தான் என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. அடுத்தடுத்த சம்பவங்களின் துரத்தலாக கதை அமைந்திருப்பது, இந்நுாலை படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதாக உள்ளது. திரைப்படத்தை மிஞ்சும் திகில் […]

Read more

சிற்றில்

சிற்றில், பா.வெ. அருணா பதிப்பகம், விலை 50ரூ. இந்நுாலை படிக்கும் அனைவரும், தங்களது குழந்தைப் பருவத்திலிருந்து தற்போதைய நிலை வரை பயணப்பட்டதை வார்த்தைகளில் வடித்துள்ளார், ஆசிரியர் பா.வெ.பெற்றோரால் வரமாக வழங்கப்பட்ட, ‘பால்யம்’ எனும் சுதந்திரக் காற்று, நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அக்கறை எனும் பெயரில் சாபமாக நம்மால் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விதையாய் விதைக்கிறது, ‘பால்யம் எனும் வரம்!’ இந்த குற்ற உணர்ச்சி நம்மை சற்றே உறுத்திக் கொண்டிருக்க அதற்கு தீர்வாய் அமைகிறது, ‘சில புரிதல்கள்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நுாலின் கடைசி அத்தியாயம். […]

Read more

எளிய வடிவில் கம்பராமாயணம்

எளிய வடிவில் கம்பராமாயணம், கே.மாரியப்பன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.260 கம்பரின் ராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும், கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு.‘ராமன் தன் கதை அடைவுடன் கேட்பவர் அமர் ஆவரே’ ராமாயணம் இந்த மண்ணின் கதை, இதைப் படிப்பவர்கள் மனத்தில் ராமன் கூறிய நெறிகள் வேர்விட இறையருள் கிட்டும். எளிய வடிவில் கம்பராமாயணம் என்ற நுாலில் பூமியின் அழகுக் காட்சி என்ற பகுதியில் பூமியின் அழகை மிகவும் சிறப்பாக வர்ணனை செய்துள்ளார். இந்த இன்பமயமான பூமியின் காட்சியே கடவுளின் தோற்றம், துன்பத்தை நீக்கி இன்பத்தை […]

Read more

தாய்

தாய், தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. இருநுாறு முறைக்கு மேல் மறு பதிப்பும், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான மாக்சீம் கார்க்கியின், ‘தாய்’ உலகின் மிகச் சிறந்த செல்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஷ்யக் கலைஞன் கார்க்கி. ரஷ்ய இலக்கியத்தின் ‘பொற்கால’த்தின் கடைசிப் பிரதிநிதி கார்க்கி. ‘அலக்வி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்’ என்னும் பெயர் பூண்ட கார்க்கி பிறந்தது, 1869ல்; இறந்தது, 1936ல். கார்க்கியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1892 முதல், 1899 வரை அவன் எழுதிய […]

Read more

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 12 தொகுதிகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 12 தொகுதிகள்,  பள்ளத்துார் பழ.பழனியப்பன், திருவரசு புத்தக நிலையம், விலைரூ.3880 மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் கூறப்பட்ட நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதுவது என்பது மிகப்பெரிய சாதனையாகும். இன்றைய மக்கள் எளிதில் படித்து மகிழும் வண்ணம், பழகு தமிழில் உரை எழுதியுள்ளார் பழனியப்பன். பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத்திற்கு முன்பு உரை எழுதியிருந்தாலும், அவை மணிப்பிரவாள நடையில் (வடமொழியுடன்கூடிய தமிழ்ச்சொற்கள்) இருப்பதால், இக்காலத்தவர் படிக்கையில், அயர்ச்சியே ஏற்படும். அதைத் தவிர்க்க இப்பெரும் முயற்சி எனலாம். ‘சொட்டுச்சொட்டென்ன’ என்ற சொல்லுக்கு, ‘வியர்வைத்துளி’ […]

Read more

தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ்,  கிழக்கு பதிப்பகம்,  விலைரூ.500 உயர்தனிச் செம்மொழிகள் ஆறினுள், தமிழ் முதன்மையானது எனலாம். தொல்காப்பியமே, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனில், தமிழ் மொழியின் தொன்மைக் கால வரையறைக்குள் கொண்டு வருவது கடினமாகும். தமிழின் எழுத்து வடிவமும் பல மாற்றம் பெற்று வந்துள்ளது.ல இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சிடப்பட்டு, பலரும் படிக்கும் நிலையில் இருக்கிறது. இத்தகு பல முன்னேற்றங்களை தமிழ் மொழி பெற, தமிழ் அறிஞர்கள் பலர், தம் வாழ்நாள் முழுவதும் ஓடி உழைத்துள்ளனர். அவர்களில் சிலரின் வரலாறு கூறுவதே இந்நுாலின் […]

Read more
1 2 3 4 5 182