அகத்திய ரகசியம்!

அகத்திய ரகசியம்!, ஸ்ரீஜா வெங்கடேஷ், ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ், பக். 674, விலை 400ரூ. நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று தோன்றும். ஆனால், கற்பனை கலந்த ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய நாவல் தான் அகத்திய ரகசியம். போகிற போக்கில் இந்த நாவலில் பல அறிவியல் உண்மைகளையும், மருத்துவ உண்மைகளையும் எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர் ஸ்ரீஜா வெங்கடேஷ். தற்கால தமிழ் நாவல் இலக்கியம் புதிய பரப்புகளில் தடம் பதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நாவலின் நிறைவு பகுதியில், 24ம் […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 372, விலை 400ரூ. முக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீரம், காவல் உரிமை, மான உணர்வு, கொள்கை போன்றவற்றால் முதன்மையாகி தெய்வமாகிய முன்னோரை, கதை வடிவில் பாடப்படும் நுாலைப் படைத்துள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். – த.பாலாஜி நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030004.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும், சுந்தர் பாலா, அழகு பதிப்பகம், பக். 224, விலை 210ரூ. வேண்டியதைவாரி வழங்கும் ஸ்ரீவாராகி அம்மனைவழிபடும் முறை, தோத்திரங்கள், பரிகாரங்கள், வரலாற்று புராண பின்னணி ஆகியவை இதில் உள்ள சிறப்புகள் அனைத்தையும் ஆசிரியர் அழகாக தொகுத்து உள்ளார். அம்மனுக்கு நைவேத்யம், மலர்கள், தொழும் பொழுது, உபாசனை முறை, அதற்கான மந்திரங்கள், பண்டாசுரன் என்ற அரக்கனின், தவறான விருப்பங்கள், அதை பராசக்தி முடித்த விதம் ஆகியவை இதன் மையக் கருவாகும். இதற்கு தேவி மகாத்மியம் கூறும் மையக் கருத்துக்களை […]

Read more

மகாத்மா 150

மகாத்மா 150, உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், பக். 276, விலை 250ரூ. காலத்தால் அழியாத பொக்கிஷமான மகாத்மாவை பற்றிய சுவையான, 150 தகவல்களை ஆசிரியர் உமாதேவி ரத்தினச் சுருக்கமாக வழங்கியுள்ளார். எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நுாலை படிக்கையில், தேசப்பிதாவின் வரலாறு மற்றும் வாழ்க்கையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆங்கிலத்தில் ஆனந்தகிரிதாஸ், தமிழில் அருட்செல்வர் நா.மகாலிங்கம், மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 360, விலை 300ரூ. அமெரிக்க இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆசிரியர். தாய் பஞ்சாபி; தந்தை தமிழர். அவ்வப்போது பெற்றோரோடு இந்தியா வந்தவருக்கு, இந்திய மண் மணம் ஆசிரியரின் நெஞ்சை ஈர்க்கிறது. படிப்பு அமெரிக்காவிலும், பிழைப்பு இந்தியாவிலும் பரிணமிக்கிறது. ஆசிரியரின் ஆதங்கங்கள், ஆசைகள், கொதிப்புகள், வார்த்தைக்கு வார்த்தை என மொழி பெயர்க்காமல் ஆசிரியரின் உணர்வுகளை ஊர்வலமாக்கியுள்ளார் மொழிபெயர்ப்பாளர். எத்தனை பாராட்டினாலும் தகும். தம் தாய் – தந்தையர், பாட்டி – […]

Read more

கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன்

கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், காரிகைக் குட்டி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் கவிதைகள் எதார்த்தங்களின் வெளிப்பாடாகவே விளங்குகின்றன. இவரின் கவிதைகள் எளிய நடையில் அமைந்திருந்தாலும் கனமான கருவுடன் உணர்வுகளின் தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பொழுதுகளும் துாசி பறக்க விடுவது, பெண்களின் வாழ்வில் சுமை மற்றும் சடங்காகவே விளங்குவதை புலப்படுத்துகிறார் கவிஞர். கன்னி கழியவில்லை, கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், சுட்டுவிரல், சாட்சியங்கள் போன்ற கவிதைகள் கவிஞரின் ஆவேசத்தை வெளிப்படுத்துகின்றன. கஸல்களைப் பாடும் யாரோ […]

Read more

தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2

தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2, கோமல் அன்பரசன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 132, விலை 120ரூ. இரண்டாம் பாகமாக இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச் சுட வந்துள்ளது, ‘தமிழ்நாட்டு கொலை வழக்குகள்!’ பல நேரங்களில் செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என ஆசிரியர் கோமல் அன்பரசன் தன், ‘என்னுரை’யில் குறிப்பிட்டு, உண்மை தன்மை மாறாத கதை படிக்கலாம் என நம்பிக்கை தருகிறார். ஆட்டோ சங்கர், நாவரசு, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் என முக்கிய வழக்குகளின் […]

Read more

நினைத்ததை நிறைவேற்றலாம்

நினைத்ததை நிறைவேற்றலாம், அ.கருணாகரன், சாகரி பதிப்பகம், பக். 246, விலை 235ரூ. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற தொடருக்கு ஏற்ப, நுாலாசிரியர் அ.கருணாகரன், அவரது துணைவியார் ச.ஞானசேகரி விளங்கினார் என்பதற்கு இந்நுால் ஓர் எடுத்துக்காட்டு. இவருடைய இரண்டு பெண் குழந்தைகளையும் ஐ.பி.எஸ்., ஆகவும், சிவில் ஜட்ஜாகவும் பதவியில் அமர வைத்து பெருமை கொண்டனர். நுாலில் உள்ள பெற்றோர் கடமைகள், நுாலகப் பயன்பாடு அவசியம், நல்லவர் உறவு நலம் தரும் வரவு, வீட்டின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என, 25 தலைப்புகளில் சிறந்த கருத்துகளை இந்நுால் […]

Read more

நல்கிராமம்

நல்கிராமம், கோ.கமலக்கண்ணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 416, விலை 250ரூ. இருபத்தோராம் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே வெகு வேகமாக செல்கிறது. புத்தகத்தை எடுத்துவிட்டால், 74ம் அத்தியாயம் வரைக்கும் படிக்க கதையோட்டம் நீரோட்டமாய் அமைந்துள்ளது. ‘பேஸ்புக், சாட்டிங்’ என்று தற்கால மொழியில் தற்காலப் பிரச்னைகளைச் சாதுர்யமாக அணுகுவதுடன், மெல்லிய காதலையும் படம் பிடித்துக் காட்டுகிறது. நாவலாசிரியர் கோ.கமலக்கண்ணனுக்கு இந்த கால பேச்சு மொழி, மிகவும் எளிமையாக வந்திருக்கிறது. கொஞ்சமும் சிரமப்படாமல், கதையை நகர்த்தும் துல்லியத்தை இந்த […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக். 248, விலை 200ரூ. பொற்கால சங்கத் தமிழ் எழுச்சியும், தற்கால சமுதாய வீழ்ச்சியும், எதிர்கால சீர்திருத்த முயற்சியும் கொண்டு தொண்டாற்றும் பேச்சாளர், எழுத்தாளர் பேராசிரியர் தி.இராசகோபாலன். இவரது சிறகடித்த சிந்தனைப் பறவைகள் தடம் பதித்த இதழ்களின் கட்டுரைகள் இந்நுாலில் வலம் வருகின்றன. மாலனின் அணிந்துரை மந்திரச் சாவியாய் நம் மனங்களைத் திறந்து ஆர்வமாய் படிக்க அழைத்துச் செல்கிறது. வாக்களாரின் கடமைகள், பேரிடர் மேலாண்மை, சித்தர்கள், திருமழிசை ஆழ்வார், கபீர்தாசர், அத்திகரி வரதர், பசவேசர், குல்தீப் […]

Read more
1 2 3 191