தமிழ் நாவல்கள்

தமிழ் நாவல்கள், பொன்னீலன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.232, விலை ரூ.220. உலகில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மக்களின் மனநிலை, பண்பாடு, ஆதிக்கத்தன்மை, அடிமைத்தளை, பொருளாதாரநிலை, உணர்ச்சிகள், ரசனைகள், பழக்க, வழக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாவல்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், பன்முகத்தன்மைகளுக்கும் கூட இந்த மாற்றங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த அடிப்படையில் தமிழில் தோன்றிய முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கி, சமகாலத் தமிழ் நாவல்கள் வரை இந்நூல் அறிமுகம் செய்வதுடன், நாவல்களின் உள்ளடக்கம், அவை […]

Read more

வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது

வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது, பவித்ரா நந்தகுமார், மணிமேகலைப் பிரசுரம், பக்.150, விலை ரூ.100. நூலாசிரியரின் 17 சிறுகதைகளின் தொகுப்பு. நிகழ்கால வாழ்வில் ஏற்படும் யதார்த்தமான பிரச்னைகளைக் கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. சிறுவயதில் செய்யாத தவறுக்குத் தன் தோழியின் வீட்டினர் தந்த தண்டனையும், அவமானமும் நடுத்தர வயதை எட்டியும் கதையின் நாயகியை வேதனைப்படுத்தி விடுகிறது. ஒரு ரயில் பயணத்தில் அவளது மன உளைச்சலுக்குத் தீர்வு கிடைக்கிறது. இதுதான் மைசூர் எக்ஸ்பிரஸின் மூன்றாவது கம்பார்ட்மென்ட் சிறுகதை. நான்கு மனித மிருகங்களால் ஓர் ஏழைப் பெண் பாலியல் […]

Read more

தொல்காப்பிய ஆய்வடங்கல்

தொல்காப்பிய ஆய்வடங்கல், மு.சங்கர், காவ்யா, பக்.336, விலை ரூ.340. தொல்காப்பியம் குறித்து பல்வேறு பொருண்மைகளில் 2000 முதல் 2019 வரை வெளியான 333 ஆய்வுக் கட்டுரைகள், 40 ஆய்வு நூல்கள், ஆய்வியல் நிறைஞர்(எம்.ஃபில்), முனைவர்பட்ட (பிஎச்.டி.) ஆய்வேடுகள் 58 ஆகியவை மூன்று பகுதிகளாக இந்நூலில் ஆய்வடங்கலாகியிருக்கின்றன. கட்டுரையின் தலைப்பு, எழுதியவர் பெயர், பதிப்பித்த ஆண்டு, வெளியீட்டாளர் பெயர், கட்டுரையின்-நூலின் பக்கங்கள் முதலியவற்றுடன், ஒவ்வொரு கட்டுரையும் சொல்லும் ஆய்வு முடிவை கருத்து என்கிற பெயரில் சுருக்கமாகவும்; அதனுடன் ஆய்வேட்டின் உள்ளடக்கத்தையும் தந்திருப்பது சிறப்பு. உலகத் தமிழ் […]

Read more

மதிஒளி என்றொரு மந்திரம்

மதிஒளி என்றொரு மந்திரம், ராணிமைந்தன், வானதி பதிப்பகம், பக்.272, விலை ரூ.400. ஒரு சகோதரியாக, அம்மாவாக, தெய்வத்தன்மை மிக்கவராக, தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து உதவி செய்பவராக, கவிஞராக, எழுத்தாளராக, இளம்தளிர்களின் வளர்ச்சியில் ஆர்வமிக்கவராக, சமூக அக்கறை கொண்டவராக நடமாடி வந்த மதிஒளி சரஸ்வதியின் வரலாற்றை இந்நூல் தாங்கி வந்துள்ளது. மதிஒளி சரஸ்வதி, நம்பிக்கையோடு தன்னை நாடி வந்தவர்களின் வாழ்க்கையில் சந்தோஷப் பூக்களை மலரச் செய்தது, அவருடன் பழகியவர்கள் தங்களுடைய அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துள்ளதன் மூலம் தெரிய வருகிறது. காஞ்சி மகா […]

Read more

ஆழி பெரிது

ஆழி பெரிது, வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல், அரவிந்தன் நீலகண்டன், பக்.367, விலை ரூ.330. இன்று வேத பாரம்பரியம் குறித்து அரசியல் சாயத்துடன் பல விவாதங்கள் நடைபெறுகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றன; வேத காலம் என்பது எப்படி இருந்திருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் ஓரளவுக்கு விளக்கம் அளிக்கிறது. வேத கால அக்னி வளர்ப்பு, அஸ்வமேத யாகம், சரஸ்வதி நதி பற்றிய சர்ச்சை போன்றவற்றை விரிவாக அலசுகிறார் நூலாசிரியர். அதுபோலவே இந்திய பாரம்பரியத்தில் பெண்களுக்கு சமத்துவம் அளிக்கவில்லை […]

Read more

பெண் எனும் பேராளுமைகள்

பெண் எனும் பேராளுமைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கிருஷாங்கினி, பாரதி புத்தகாலயம், பக்.128, விலை ரூ.120. நூலில் உள்ள 7 கட்டுரைகளில் “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” என்ற கட்டுரையும், பரதநாட்டியம் பற்றி என்ற கட்டுரையும் தவிர, பிற கட்டுரைகள் பெண் ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளாக அமைந்துள்ளன. “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” கட்டுரை பெண் விடுதலை தொடர்பான அம்பேத்கரின் பார்வையையும், பணிகளையும் விளக்குகிறது. பெண் விடுதலைக்கு அதையும் தாண்டி செய்ய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. “பரதநாட்டியம் பற்றி“ கட்டுரை பரதநாட்டியம் தொடர்பான அனைத்து […]

Read more

திருவாசகப் பயணம்

திருவாசகப் பயணம்: முதல் சுற்று (சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல் விளக்கவுரை)- அ.நாகலிங்கம், திரு.வி.க. பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திருவாசக விளக்கவுரை வகுப்புகள் நடத்தியதன் தொடர்ச்சியாக நூலாசிரியர், திருவாசகத்தில் உள்ள சிவபுராணம், கீர்த்தித் திருவகவல் ஆகிய இரு அகவல்களுக்கு மட்டுமான விளக்கவுரையை முதல் சுற்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். சிவபுராணம் 62-ஆவது வரியில் இடம்பெறும் “மாசு அற்ற சோதி” என்பதற்கு, “பெளதிக ஒளிகள் மலர்வதற்கு விறகு, எண்ணெய், திரி, கம்பிகள், கண்ணாடிக் குமிழ் (பல்ப்) முதலிய ஏதேனும் ஒரு மாசு பற்றுக்கோடாக […]

Read more

அறம் வளர்த்த அருந்தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும்

அறம் வளர்த்த அருந்தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும், அரங்க பரமேஸ்வரி, மங்கை வெளியீடு, பக்.320, விலை ரூ.240. அக்காலத்தில் வாழ்ந்த கல்வியிற் சிறந்த புலவர்கள் மட்டுமல்லாமல், அரசரர்கள், சிற்றரசர்கள், பல்வேறு நிலையில் வாழ்ந்த குடிமக்கள், கலைஞர்கள், வணிகர்கள் எனப் பலரும் தமிழில் புலமைப் பெற்றிருந்ததுடன், பாடல்கள் புனையும் ஆற்றலும் கைவரப் பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றில் மிக சிறந்ததாகக் கூறப்படும் கொடைப் பண்பு உடையவர்களையே அக்காலச் சமுதாயம் புரவலர்கள் என்று போற்றியுள்ளது. தமது ‘பா’த் திறத்தால், புலவர்கள் பலர் அறப்பாடல்களைப் பாடியதுடன், […]

Read more

பூக்கூடை

பூக்கூடை,   படம் ஒன்று, கதைகள் முப்பத்தெட்டு, தொகுப்பாசிரியர்: பாலகணேஷ் , வாதினி, பக். 160, விலை: 160. ஓர் ஓவியத்துக்குப் பொருத்தமான சிறுகதை எழுதும் போட்டியில் பரிசு பெற்ற 38 கதைகளின் தொகுப்பு. 38 எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை வளத்தால் இந்நூலை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். நகரின் பரபரப்பான சாலையில் காரை ஓட்டும் இளம்பெண், காரின் மேற்கூரையில் கயிறால் கட்டப்பட்டிருக்கும் இளைஞன், இந்த விசித்திரக் காட்சியை வேடிக்கை பார்க்கும் பேருந்து பயணிகள், இருசக்கர வாகனத்தில் அமர்ந்த நிலையில் பார்வையிடும் தம்பதி ஆகியோர் மட்டுமே அடங்கிய ஓர் ஓவியம். […]

Read more

குறள் விருந்து கதை விருந்து

குறள் விருந்து கதை விருந்து, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் படிக்கும் அனைவரின் மனதிலும் அது பதிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மருந்தின் கசப்பை நாக்கு ஏற்றுக் கொள்ள தேனைக் கலப்பது போல், நல்ல கருத்துகளை விதைக்க தேனான கதைகள் அவசியம் என நினைத்த நூலாசிரியர், திருக்குறளை ஒரு கதையுரையில் தந்தால் அது சிறக்கும் என்பதால், ஒரு குறளுக்கு ஒரு கதையை எழுதி விளக்கியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 108 திருக்குறள்களுக்கு 108 கதைகளை எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். […]

Read more
1 2 3 149