சுகப்பிரசவம் இனி ஈஸி

சுகப்பிரசவம் இனி ஈஸி,  டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.150 சுகப்பிரசவம் இனி ஈஸி என்று நூலின் தலைப்பு சொன்னாலும், சுகப்பிரசவம் எளிதாக அமைய எவ்வளவு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்கிறதைப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. ஒரு பெண் கருவுறுதலுக்கு முன்பிருந்து எவ்வாறு தனது உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி, குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுப்பது வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நூல் விளக்குகிறது. தொற்றுநோய்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்; பயணங்களைத் […]

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன்,  டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம்,  பக்.304, விலை ரூ.200. மருத்துவம் சார்ந்த நூல்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நூலாக இது விளங்குகிறது.கண்ணுக்குப் புலப்படாத உள்ளுறுப்புகள் எப்படி உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத வலிமையுடன் விளங்குகின்றன என்பதை ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன சிகிச்சைகள் வரை அலசப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமன்றி, உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள், அதற்கான காரணங்கள், அதன் விளைவுகள் என அனைத்து விஷயங்களும் […]

Read more

ஒல்லி பெல்லி

ஒல்லி பெல்லி, டாக்டர் கு.கணேசன் , கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. உடல் பருமன் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள அதே நேரம், அதிலிருந்து விடுபடுவதற்கு ஆபத்து நிறைந்த வழிகளை நாடும் போக்கும் அதிகரித்துள்ளது. தொப்பையைக் குறைப்பது, உடல் பருமனால் விளையும் நோய்கள்குறித்த விழிப்புணர்வைப் பெறுவது, அதற்கான சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, எடையைக் குறைப்பதற்கான சுயமுயற்சிகள் ஆகியவற்றை உரையாடலைப் போன்ற சுவாரஸ்யமான பாணியில் விளக்கும் நூல். அலோபதி மருத்துவத்தில் 30 ஆண்டு அனுபவம் பெற்ற டாக்டர் கு.கணேசன் ‘கல்கி’, வார இதழில் எழுதிய கட்டுரைகளின் […]

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை 200ரூ. எதை நம்புவது என்று தெரியாமல் எல்லா தரப்பையும் நம்பி, அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து சகல மருந்துகளையும் உட்கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இந்த அறியாமையை இந்நூல் போக்குகிறது. நன்றி: குங்குமம், 12/1/2018.  

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், பக்கம் 304, விலை ரூ.200. நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஒரு மருத்துவர் கூறும் நோய் குறித்தோ, பரிந்துரைக்கும் சிகிச்சை குறித்தோ நோயாளிக்கு சந்தேகம் வரும்போது, வேறு மருத்துவரிடம் மறுஆலோசனை கேட்கத் தயங்குவோருக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்துவது , நோய் வரும் முன்னர் காக்கும் வழிகளை எடுத்துச் சொல்வது ஆகியவையே இந்த நூலின் முக்கிய சாராம்சமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் முக்கியமான நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள், சிகிச்சையளிக்கும் […]

Read more

மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா பதிப்பகம். மருத்தவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள். நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா, விலை 400ரூ. இந்த நூற்றாண்டின் மலைக்க வைக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை முறைகளை எளிய தமிழில் தெளிவாக விளக்கும் நூல். சாதாரண மக்களின் மருத்துவ சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் எளிய தமிழில் எழுதி, எண்ணற்ற வாசகர் கூட்டத்தை உருவாக்கி இருப்பவர், மருத்துவ இதழியலாளர் டாக்டர் கு.கணேசன். தினமலர், ‘என் பார்வை’ பகுதியில் இவரது கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இதுவரை, 38 மருத்துவ புத்தகங்கள் எழுதி உள்ளார். அவற்றில் இருந்து […]

Read more

ஒரு பூ ஒரு பூதம்

ஒரு பூ ஒரு பூதம், மருதன், கல்கி பதிப்பகம், விலை 40ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-340-2.html உங்கள் குழந்தைகளுக்கு சுவாரசியமான, ஜாலியான, அட்டகாசமான கதைகளைச் சொல்ல வேண்டும் என்றால், அவசியம் இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டும். இந்தக் கதைகளைக் கேட்டால் குழந்தைகளே ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நன்றி: கல்கி, 7/9/2014.   —- முதலுதவி, டாக்டர் கு. கணேசன், கல்கி பதிப்பகம், விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-318-7.html நமக்கு முதலுதவி […]

Read more

ஸந்தேக நிவாரணீ (பாகம் 7)

ஸந்தேக நிவாரணீ (பாகம் 7), நன்னிலம் வை. ராஜகோபால கனபாடிகள், வைதிகஸ்ரீ, சென்னை, பக். 232, விலை 150ரூ. ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களுக்கு மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கும் விதமாக, சென்னையில் ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்களில் அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் நூலாசிரியர் வை. ராஜகோபால கனபாடிகள். ஆறு பாகங்களில் 500 கேள்விகளுக்கு விடையளித்துள்ள அவர், இந்த ஏழாவது பாகத்தில் 157 சந்தேகங்களுக்கு விடையளித்துள்ளார். தெய்வ வழிபாடு, பூஜை, ஹோமம், விளக்கேற்றுதல், மந்திரம், ஜபம், பாராயணம், வாஸ்து, மங்கல நிகழ்ச்சிகள், கனவு, ஜோதிடம், பஞ்சாங்கம், பரிகாரங்களில், […]

Read more

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள், டாக்டர் கு. கணேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 85ரூ. வயிறு பற்றிய விவரங்களை, குறிப்பாக செரிமான மண்டல உறுப்புகள் பற்றிய விவரங்களை எளிமையாகக் கூறும் நூல். உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குறித்த விவரங்கள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள், உணவு முறைகள் ஆகிய அனைத்தையும் விளக்கமாக கூறுகிறது இந்நூல். வயிறு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு இன்றைய நடைமுறையில் இருக்கும் அத்தனை நவீன மருத்துவ முன்னேற்றங்களை விளக்கமாகக் கூறுவது பயமுறுத்துவதற்காக […]

Read more