செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக். 172, விலை 120ரூ. தமிழ்மொழி செம்மொழி மதிப்பை அடைந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த உயரிய அடைதலுக்காக மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகள் என்ன, அதற்காக சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றிய வரலாற்று விபரங்களைத் தருகிறது இந்நூல். நம் பண்டைய புலவர்கள் தமிழைச் செவ்வியல் நிலையிலேயே வளர்த்து அதைச் செந்தமிழ் என்று அழைத்து வந்தனர். செவ்வியல் எனும் சொல்லை, ரோமானியர்கள் பெரும்பாலும் உயர்தரமான இலக்கியப் படைப்புகளை சுட்டப் பயன்படுத்தியிருக்க, கிரேக்க இலத்தீன் […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக்.172, விலை ரூ.120. தொன்மை, தனித்தன்மை, பலமொழிகளுக்கும் தாயாக அமைந்த தன்மை, நாகரிகம் மேம்பாடு அடைந்த ஓர் இனத்தின் பண்பாடு, கலை, அனுபவ உணர்வுகளின் முழுவெளிப்பாடாக அமைந்த இலக்கியங்களைப் பெற்றிருத்தல், தனித்து இயங்கும் ஆற்றல், தனித்தன்மை வாய்ந்த உயர்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகள், தனிச்சிறப்பான மொழிக் கோட்பாடுகள் கொண்டிருக்கும் ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படும். தமிழுக்கு அந்தத் தன்மைகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது. வெறும் இலக்கியமொழியாக மட்டுமல்லாமல், நாட்டுப்புற இலக்கிய […]

Read more

பொதிகையில் பிறந்த செந்தமிழ்

பொதிகையில் பிறந்த செந்தமிழ், ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 140, விலை 100ரூ. பொதிகை மலைக்கு அந்த பெயர் வந்தது ஏன் எனும் கேள்வியை எழுப்பி நம்மை சிந்திக்க வைக்கிறார், நூலாசிரியர், பொதியப்பட்ட இடம் போல் தோற்றம் அளிப்பதால், அதை பொதிகை மலை என்று, கால்டுவெல் கூறுகிறார். பவுத்த இலக்கியங்களில் பொதிகை மலை, ‘போதல கிரி’ எனப்படுகிறது என்று குறிப்பிட்டு, பொதிகை மலைக்கும், பவுத்தத்திற்கும் உள்ள தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொதிகை மலையில் தமிழ் பிறந்ததாகப் போற்றுகிறோம். அதன் அர்த்தம் என்ன? மலை, உயர்வின் […]

Read more

தமிழும் நானும் (பகுதி 5)

தமிழும் நானும் (பகுதி 5), ஜி. ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல், சமயம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகிய நான்கு ஆய்வுக் களங்களின் வழி, பல மாநாடுகளையும் நூல்களையும் வெளியிட்டவர் ஆசிரியர். ஒப்பீட்டு சமய ஆய்வில் அதிக ஈடுபாடு கொண்டவர். மலேசியிவில் மூன்றாவது முருகன் மாநாடு, தாய்லாந்து பாங்காக் நகரில் மகாசூரி பல்கலைக்கழகத்தில் தேரவாத பவுத்தர் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்ற அனுபவம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பிறப்பால், வளர்ப்பால், வாழ்வால் நான் கிறித்தவன். […]

Read more