புகழ் மணக்கும் அத்தி வரதர்

புகழ் மணக்கும் அத்தி வரதர், க.ஸ்ரீதரன், நர்மதா வெளியீடு, விலை: ரூ.60 முக்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதனில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்தசரஸ் என்ற திருக்குளத்திலிருந்து எழுந்தருளும் அத்திமர வரதர் வைபவத்தையொட்டி நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். காஞ்சிபுரத்தின் பெருமை, அவதார வரலாறு, சரஸ்வதி வேகவதியாக வந்த கதை, கோயிலின் அமைப்பு, உற்சவங்கள், காஞ்சியுடன் தொடர்புள்ள ஆசார்யர்கள், திவ்யப் பிரபந்தத்தில் காஞ்சி தொடர்பான பாசுரங்கள், திருக்கச்சி நம்பிகள் அருளிய தேவராஜ அஷ்டகம், கூரத்தாழ்வானின் வரதராஜ ஸ்தவம், மஹா தேசிகன் அருளிய மெய்விரத மான்மியம், […]

Read more

முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 110ரூ. நூலாசிரியர் வெ. இறையன்பு, டில்லியில் தன் பயிற்சிக் காலத்தில் இந்தி மொழியின் எதேச்சதிகாரத்தையும், பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டதையும் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக, குறைந்த எல்லையில் தேர்ச்சி பெற்றதை இந்திக்கார்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சாடுகிறார். உச்சத்தில் இருந்த சோழ சாம்ராஜ்யம் பின்னடைவு கண்ட காலத்தில், கம்பன் வாழ்ந்ததால், சோழநாட்டு இளைஞர்களின் இதயத்தில் மறுபடியும் போர்க்குணத்தைப் பாய்ச்ச, யுத்த காண்டத்தில் மட்டும் 4000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்துள்ளார் என்பதும், ‘முதலில் […]

Read more