இராகவம் 2

இராகவம் 2, முனைவர் கா. அய்யப்பன், காவ்யா பதிப்பகம், விலை 900ரூ. இராகவம் – 2 ரா.இராகவையங்காரின் சங்க இலக்கிய உரைகள்’ என்ற இந்த நுால், தமிழறிஞர்களுக்கு அரிய கருவூலமாய் விளங்குகிற நுால். மகாவித்வான், ரா.இரா., மிகப் பெரிய ஆராய்ச்சி அறிஞர், கவிஞர், ஆசுகவி. நுால்கள் பல யாத்தவர். அவருடைய பெரும் புலமை இந்த நுாலில் வெளிப்படுவதை, நுாலைப் படிப்போர் உணர்வர். நுண்ணறிவால் பாட வேறுபாடுகளை குறிப்பிட்டு, மிகப் பொருத்தமான பாட பேதத்தை ஏற்று, விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தமிழறிஞரின் புலமைத் திறம் கண்டு, […]

Read more

ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல், முனைவர் இரா.சர்மிளா, காவ்யா பதிப்பகம், பக்.115, விலை 120ரூ. மனித உடல், 200க்கும் மேற்பட்ட செல்களால் வடிவமைக்கப்பட்டது. இவை அனைத்தும் முதன்மைச் செல்களிலிருந்து உற்பத்தியாகின்றன. இந்த முதன்மைச் செல்களே ஸ்டெம் செல் எனும் குருத்தணு. ஸ்டெம் செல் தொப்புள் கொடியினுள் இருப்பது. இது தசை, நரம்பு, ரத்தம் போன்ற பல்வேறு விதமான செல்களுக்கும் முதன்மையான செல். இது, ஒரு செல்லிலிருந்து மற்றொரு வகை செல்களை உற்பத்தி செய்யும் திறனும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் […]

Read more

இராகவம் 2

இராகவம் 2, முனைவர் கா.அய்யப்பன், காவ்யா பதிப்பகம், பக். 912, விலை 900ரூ. இராகவம் – 2 ரா.இராகவையங்காரின் சங்க இலக்கிய உரைகள்’ என்ற இந்த நுால், தமிழறிஞர்களுக்கு அரிய கருவூலமாய் விளங்குகிற நுால். மகாவித்வான், ரா.இரா., மிகப் பெரிய ஆராய்ச்சி அறிஞர், கவிஞர், ஆசுகவி. நுால்கள் பல யாத்தவர். அவருடைய பெரும் புலமை இந்த நுாலில் வெளிப்படுவதை, நுாலைப் படிப்போர் உணர்வர். நுண்ணறிவால் பாட வேறுபாடுகளை குறிப்பிட்டு, மிகப் பொருத்தமான பாட பேதத்தை ஏற்று, விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தமிழறிஞரின் புலமைத் திறம் […]

Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம், ஜெயராம் சேவியர், காவ்யா பதிப்பகம், விலை: ரூ.260 சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் இயல், மருத்துவம், உணவு, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் நூல். நீரிழிவைச் சந்திப்பவர்கள் உணவின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர வழிகாட்டும் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும்

இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும், டி.ஆர்.கள்ளபிரான், காவ்யா பதிப்பகம், வலை 150ரூ. காந்தி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் துக்கத்தில் ஆழ்ந்த இராமாநுசக் கவிராயருக்கு அத்துயரத்தோடே சில வரிகள் தோன்றின. “அறக்கனியே, அன்பரசே, அருந்துணையே, அறிவாற்றல் சிறந்தொளிரும் செந்நலமே, செய்வினையின் பயன்அறவே, துறந்தாற்றும் பெருந்துறவே, பேயுலகம் புலம்பிவிழ, மறைந்தனையே நிரந்தரமாய் மதியிழந்தார் செய்கையினால்!” அன்று எழுதத் தொடங்கி 27 ஆண்டுகள் கழித்து ‘காந்தி காவியம்’ என்ற நூலை வெளியிட்டார். ‘காந்தி காவியம்’ எழுதிக்கொண்டிருக்கும்போதே காந்தி பற்றிய நாடக நூல் ஒன்றையும் முடித்திருந்தார். இவர் எழுதிய பூகந்த […]

Read more

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை, மு.ஏழுமலை, காவ்யா பதிப்பகம், விலை 120ரூ. நகைச்சுவை உணர்வு என்பது பிற உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மை வாய்ந்த பண்பாகும். இலக்கிய படைப்புகளிலும் இவ்வுணர்வு கலைத்தன்மையோடு வெளிப்படுவதை காணமுடிகிறது. அப்படி பாரதியாரின் கவிதைகளில் பொதிந்திருககும் நகைச்சுவையை எடுத்துரைக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027187.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், காவ்யா பதிப்பகம், பக். 340, விலை 330ரூ. திருநெல்வேலியில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புதுவையில் நாடகத் தமிழ் வளர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவரின் எழுத்து, இயக்கம், பேச்சு, மூச்சு என அனைத்து செயல்களும் நாடகத்தமிழில்தான் இருந்தன. அவரால், நாடகத்தமிழ் புத்துயிர் பெற்றது. அவரை தற்கால தலைமுறை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 10/1/2018.

Read more

மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா பதிப்பகம். மருத்தவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள். நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் – 2

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் – 2, தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 922, விலை 900ரூ. எழுதி எழுதிக் குவித்த ஒரு மாபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். 1920ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தாலுகா, திசையன்விளையில் பிறந்தவர். 2006, நவ., 9ல் தன், 86வது வயதில் மறைந்தார். இவரது இயற்பெயர் கிருஷ்ணசுவாமி. புனைப்பெயர் வல்லிக்கண்ணன். ராசவல்லிபுரத்தில் உள்ள வல்லியும், கிருஷ்ணனின் தமிழ்ப் பெயரான கண்ணனும் சேர்ந்து வல்லிக்கண்ணன் ஆயிற்று. இத்துடன் நையாண்டி பாரதி, சொனாமுனா, சொக்கலிங்கம், கெண்டையன்பிள்ளை, கோரநாதன், மிவாங்கி, வேதாந்தி, பிள்ளையார், […]

Read more

நனைந்த நதிகள்

நனைந்த நதிகள், கவிஞர் தமிழ்தாசன், காவ்யா பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. நனைந்த நதிகள் புத்தகம் முழுவதும் கவிதை துளிகளை தெளித்திருக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். ரத்தத் துளிகளால் எழுதப்பட்டது நம் சுதந்திர இந்திய வரலாறு தூசி படர்ந்து கிடக்கிறது என இது எங்கள் தேசம் என்ற தலைப்பில்(பக். 57) அவர் எழுதியுள்ள கவிதைகள் நடந்தவற்றை படம் பிடிக்கின்றன. சொல்லவந்த கருத்தை சுருங்கச் சொல்லி இருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more
1 2 3