மீனும் பண் பாடும்

மீனும் பண் பாடும், ஹால்டார் லேக்ஸ்நஸ், தமிழில் எத்திராஜ் அகிலன், காலச்சுவடு பதிப்பகம், விலை 375ரூ. மாறுவேடமிட்டிருக்கும் நம் முகங்கள் நோபல் பரிசு பெற்ற ஹால்டார் லேக்ஸ்நஸை ‘மீனும் பண் பாடும்’ நாவல் மூலமாகத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் எத்திராஜ் அகிலன். இந்த நாவலில் இழையோடும் பகடிக்காகவே ஆர்வத்தோடு வாசித்தார்கள். இன்றைய சமூகத்தில் உலகமயமாக்கல் விளைவித்திருக்கும் இடர்ப்பாடுகளை நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே யூகிக்கத் தொடங்கியிருக்கிறார் லேக்ஸ்நஸ். அயல்தேச கிராமவாசிகளின் நாட்டார் வழக்குகளும், அவர்களது வாழ்வுமுறையும், மனவோட்டங்களும் ஆச்சர்யத்தக்க வகையில் நமது சூழலுக்கு மிக […]

Read more

காச்சர் கோச்சர்

காச்சர் கோச்சர்,  கன்னட மூலம்: விவேக் ஷான்பாக், தமிழில்: கே.நல்லதம்பி, காலச்சுவடு பதிப்பகம், பக்.104, விலை ரூ.125. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் வெவ்வேறு உலகங்களைச் சித்திரிக்கும் நாவல். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இருந்த சிந்தனை, வாழ்க்கைமுறை, மனோபாவம், பழக்க, வழக்கங்கள் எல்லாம், அவர்களுக்கு வசதி வந்த பிறகு மாறிப் போய்விடுகிறது. வேலைக்குப் போய் தனது முதல் சம்பளத்தில் அம்மாவுக்குப் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மகன், வசதி வந்த பிறகு சொந்தத் தொழிலைக் கூட […]

Read more

உடைந்த குடை

உடைந்த குடை, தாக் ஸூல்ஸ்தாத், காலச்சுவடு பதிப்பகம், விலை 140ரூ. உலகின் மிக முன்னேறிய, அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலம் தனது அடையாளத்தை தேடித் தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதை இந்நூல் சித்தரிக்கிறது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026629.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, ஜெ. பாலசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 195ரூ. தலித் இலக்கிய வரலாற்றை, தமிழ் இதழில் ஆய்வு மூலம், ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கைந்து தலித் பத்திரிகைகள் மட்டுமே கிடைக்கும் இன்றைய சூழலில், 40க்கும் மேற்பட்ட, தலித் இதழ்கள் பற்றி, செய்திகள் திரட்டி, பகுத்தாய்ந்திருக்கிறார் ஆசிரியர். 1869 – 1943 வரையிலான தலித் பத்திரிகைகள் குறித்து, சிறந்த ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பதை, நுால் வெளிகாட்டுகிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

குடியேற்றம்

குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக். 237, விலை 275ரூ. ஆசிரியரின், ஆறாவது நாவல் இது. கிழக்கு – மேற்கு கடற்கரைகளில், பறங்கியர்களுக்கும், கடலோர மரைக்காயர்களுக்கும் இடையே, 150 ஆண்டுகள் கடும்போர் நடைபெற்றது. இந்தப் பின்னணியில், ‘குடியேற்றம்’ எழுதப்பட்டுள்ளது. தோப்பிலாரின் நாவல்களுக்கேயுரிய வரலாற்றுத் தரவுகள், மொழிநடை, காட்சி ரூப உருவாக்கம் ஆகியவை, இந்நாவலிலும் உள்ளன. நாவலின் பலமாக இவை இருந்து குன்றாத வாசிப்புச் சுவையை ஊட்டுகின்றன. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

பனை மரமே பனை மரமே

பனை மரமே பனை மரமே, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை 425ரூ. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள் வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

புரட்சியாளன்

புரட்சியாளன், ஆல்பர்ட் காம்யூ, ப்ரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா, காலச்சுவடு பதிப்பகம், விலை 475ரூ. ஆல்பர்ட் காம்யூவின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நாம் வாழும் காலத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இன்று வரைக்கும் இந்த நூல் உதவிக் கொண்டே வருகிறது. நிச்சயமற்ற உலகில் வாழக்கூடிய அனைத்து சூழலையும் காம்யூ அவரின் வார்த்தைகளில் பிரத்யேகமாக எழுதிச் செல்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அடுத்தடுத்த கணத்தில் ஒருமை கூடி நிற்கிறது. மிகவும் கவனம் தேவைப்படுகிற நினைவையும் உணர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்து படிக்க வேண்டிய கட்டுரைகள். நம் வாழ்க்கையின் சாத்தியமின்மைகளை […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், பக்.392, விலை ரூ.575. இந்நூலை ‘நாவல் 39‘ என்று கூறி பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நாவலுக்குஉரிய எந்தவிதமான இலக்கணமும் இதில் இல்லை. தெளிவான கதை இல்லை; தொடர்ச்சியாகச் செல்லும் சம்பவங்கள் இல்லை; பல கதைகளின், சம்பவங்களின், தகவல்களின் தொகுப்பாக உள்ள இந்நூலில், எதுவுமே முழுமையான கதையாகப் பதிவு செய்யப்படவில்லை. பல காலங்களில், பல இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், பல மனிதர்களின் மனக் குரல்களையே இது எதிரொலிக்கிறது. அதனால், இந்நாவலை வாசிப்போர்க்கு முதலில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவை. […]

Read more

நகலிசைக் கலைஞன்

நகலிசைக் கலைஞன், ஜான் சுந்தர், காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ. அனுபவக் கட்டுரைகளின் உண்மையும், ஆழமும் எப்போதும் சுவாரஸ்யமானவை. கற்பனையின் எல்லைக் கோட்டைக்கூட தொட்டுவிடாத அழகில் ஜான் சுந்தர் நகலிசைக் கலைஞர்களின் அனுபவங்களை, உடனிருப்பை ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார். மெய் மறப்பதும், கவலை துறப்பதும் அனேகமாக திரைப் பாடல்களை கேட்கும் போது மட்டுமே நடக்கிறது. நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கையின் சில பக்கங்களை துளி மிகையில்லாமல் செங்கல் சூளையின் வரிசை போல் கச்சிதமான அடுக்கில் கட்டுரைகள். இசையைப் புரிந்து கொள்வதும், அனுபவிப்பதும் ஜானின் எழுத்துகளில் தங்கு […]

Read more

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில் அருமை செல்வம், அசதா, காலச்சுவடு பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் கொலம்பியாவைச் சேர்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இந்நாவல் சந்தியாகோ நாஸார் என்பவனின் கொலையுடன் தொடங்குகிறது. அக் கொலையுடனேயே நிறைவும் பெறுகிறது. இடையில் அவன் கொல்லப்படுவதற்கான காரணத்தை நாவல் விரட்டிச் செல்கிறது. பயார்தோ சான் ரோமான் என்பவரின் புது மனைவி ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு சந்தியாகோ நாஸார்தான் காரணம்; அதனால்தான் அவன் கொல்லப்பட்டான் என்பதாக […]

Read more
1 2 3 4 11