ஜென் பாடங்கள்

ஜென் பாடங்கள், தமிழாக்கம் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து அதன் இன்பங்களை அனுபவித்திட வேண்டுமானால், அதன் மெய்ம்மையை உணர்ந்து கொள்வது அவசியம். அதற்கான எளிய சூத்திரத்தை பல்வேறு குட்டிக் கதைகள் மூலம் சொல்லித் தருவதே ஜென் துறவிகள் சொன்ன பாடங்கள். ஆங்கிலத்தில் யோமே.எம்.குபோஸ் தொகுத்து எழுதிய அத்தகைய பாடங்களின் எளிமைத் தமிழாக்கம் இந்த நூல். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026624.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

வாழநினைப்போம், வாழுவோம்

  வாழநினைப்போம், வாழுவோம், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. “எல்லா மாணவர்களுக்கும் சிறந்த வாழ்க்கை சாத்தியம் என்பதை நிச்சயப்படுத்தும்வகையில் நான் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தை பெற்றோரும் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களையும் குழந்தைகளையும் படிக்க ஊக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. இந்த நூல்குறித்து அப்துல் கலாம் அவர்களே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. இலட்சிய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஆங்கிலத்தை அழகுத் தமிழாக்கியிருக்கிறார் சிவதர்ஷினி. நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்,  ஓஷோ, தமிழில்: சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.414, விலைரூ.300. சமூகத்தையோ உலகத்தையோ மாற்றும் அபிப்ராயம் கிடையாது. காரணம் சமூகம் என்பது மாயை என்ற அடிப்படையில் தனிமனிதனை மையமாக வைத்து அவனை மாற்றுவதற்கான ஓஷோவின் கருத்துகளின் தொகுப்பே இந்நூல். தனிமனிதர்கள் இந்து, முகமதியர், கிறிஸ்தவர், பொதுவுடைமைவாதி என எந்தச் சார்புடனும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் மனிதர்கள் முன் கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாதையில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவார்கள். எங்கெங்கும் தவறான அபிப்ராயங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. சமூகம், அரசியல், […]

Read more

தம்மபதம் – 8

தம்மபதம் – 8, டாக்டர் என்.ரமணி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.445, விலை 280ரூ. இது, தம்மபதம் நுாலின், எட்டாவது பாகம். புத்தர், ‘உன்னைத் தெரிந்து கொள்’ என்கிறார்; அதன் அர்த்தம், ‘நீ இல்லாததைத் தெரிந்து கொள்’ என்பதாகும் என்கிறார் ஓஷோ. புத்தரின் வழியில் ஆன்மிகம் உரையை, தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். கேள்வி – பதில் பாணியில், அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், பக். 366, விலை 200ரூ. இந்த உலகில், இரண்டு வகையான துன்பப்படுகிற மக்கள் உள்ளனர். ஒரு வகை, மத தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவோர்; மறு வகை, அவர்களைப் பின்பற்றி நடக்காதோர். ஆனால், கொஞ்சம் கூட கவலைப்படாத, என்னைப் போன்ற ஒரு மூன்றாவது வகையைச் சேர்ந்த ஒரு மனிதனைக் காண்பது மிகவும் கடினம்’ (பக். 15). இப்படி சுயதரிசனம் தரும், ஓஷோவின், ‘போலியான மதம்’ என்னும் முதல் கட்டுரை துவங்கி, ‘கடவுள் நம் எல்லாருக்கும் தெரிந்த யாருமாகவும் இல்லாதவர்’ முடிய, […]

Read more

பிசி டாக்டர்

பிசி டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.130. கணினி இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது. இந்நூல் கணினியின் வரலாறு, அவற்றில் உள்ள பல வகைகள், கணினியின் இன்றைய வளர்ச்சி நிலை பற்றி கூறுகிறது. நாம் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் கணினி சார்ந்த பல சொற்களைப் பற்றிய விளக்கங்கள் இந்நூலில் கிடைக்கின்றன. மதர்போர்ட், சிப்செட், போர்ட்ஸ், புராசெசர், ஹார்ட் டிஸ்ஸ் டிரைவ், சிடி, டிவிடி, ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ், RAM, இன்புட் டிவைஸஸ், யுபிஎஸ், லைட் பென் என கணினியில் உள்ள பல பாகங்களைப் […]

Read more

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 50ரூ. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி வளர்த்தால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று இந்த நூலில் விளக்கியுள்ளார், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், அப்துல்கலாம், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அதுபோலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்கிறார் நூலாசிரியர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்களின் மனதிலுள்ள நுட்பமான பிரச்னைகளை கேள்வி – பதில் வடிவில் அலசி ஆராயும் நூல். நன்றி: குமுதம்

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் நலமாக இருக்க, விழிப்பு உணர்வுடன் வாழ எளிய முறையில் உங்கள் மனநிலைக்குப் பொருத்தமான தியானத்தை விளையாட்டாகவே தேர்வு செய்வது எப்படி? சூட்சுமத்தை சொல்லித் தந்திருக்கிறார் ஓஷோ. தியானத்தைக் கைக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி. அதைத் தெரிந்து கொள்ள வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம்

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம், பெரில் கிரேன், கண்மணிசுப்பு, கண்ணதாசன் பதிப்பகம், பக்.128, விலை 80ரூ. நோய்கள் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நோய்கள் வந்து முற்றிடும் வரை பலர் அதற்கு முக்கியத்துவம் தந்துவிடுவதில்லை. இன்றைய அறிவியல் யுகத்திலும், உலகளாவிய பலவற்றை அறிந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களில் பலர் தங்கள் உடல் உறுப்புகளையோ, அவற்றின் இயக்கத்தையோ, பலவீனத்தையோ அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மருத்துவத்தின் மீதான அச்சமும் செலவினங்களும் அச்சம் தருவதாகவும் அமைகின்றன. ஆனால், கி.மு., காலத்திலேயே நம்மவர்கள் உடல் தகுதியில் நாட்டமுள்ளவர்களாக இருந்து, ஒவ்வொரு உறுப்புக்கும் உகந்த மூலிகை மருத்துவத்தில் வல்லுனர்களாக […]

Read more
1 2 3 4 5 15