தொட்ட அலை தொடாத அலை

தொட்ட அலை தொடாத அலை, எஸ். சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாம்சங்களை அழகாக விவரிக்கிறது. அழகான எழுத்து நடையில் நாவலில் வரும் மனிதர்களை காலத்தை ஒட்டிச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சொற்றொடர்கள் பொங்கிப் பிரகாசிக்கின்றன என்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள் என்பது நிச்சயம். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

நன்றி ஓ ஹென்றி

நன்றி ஓ ஹென்றி, எஸ். சங்கரநாராயணன், பொக்கிஷம் புத்தக அங்காடி, பக். 208, விலை 150ரூ. உலகப்புகழ் கதை சொல்லி ஓ. ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். இது சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை நகர்த்திக்கொண்டே சென்று, இறுதியில் நெகிழ்ச்சியை ஒரு நெற்றிப் பொட்டாக வைப்பதிலாகட்டும், ஒரு கதையில் கலைஞன் தன் வாழ்க்கையில் சலனம் விலக்குவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும், சமரசமாகி விடுவதைச் சொல்லி இறுதி ஆணி அடிபப்திலாகட்டும், வயது ஒன்றாத திருமணத்தின் முரண்பட்ட உலர்ந்து உணர்வுகளைச் சொல்லி விரக்தி […]

Read more