மனச்சோர்வு

மனச்சோர்வு, சிவபாலன் இளங்கோவன், உயிர்மை பதிப்பகம், விலை 70ரூ. கற்பிதங்களும் உண்மைகளும் மாணவர்கள் மத்தியில் அதிகம் புழங்கும் வார்த்தைகளில் ஒன்றாகிவிட்டது ‘மனச்சோர்வு’. ஆனால் அன்றாடக் கவலைகளும் மனச்சோர்வும் ஒன்றல்ல என்கிறது இப்புத்தகம். இதில், உண்மையில் மனச்சோர்வு என்பது என்ன? நம் மனத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பதைச் சொல்வதன் வழியே, அதற்கான தீர்வும் முன்வைக்கப்படுகிறது. நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027820.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவண கார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. ஏவாளான காந்தியின் கதை கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல். இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், பக்.168, விலை ரூ.170, பிரம்மச்சரியம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. காந்தி தனது பிரம்மச்சரியத்தைப் பரிசோதிப்பதற்காக இரவில் தூங்கும்போது பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்திருந்தார் என்பதன் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. காந்தியின் இறுதிக் காலத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் பேத்தி முறையுள்ள மநு என்கிற இளம் பெண். காந்தி தனது பிரம்மச்சரியப் பரிசோதனையை அவரை வைத்துத் தொடர்ந்தபோது, காந்தியின் ஆசிரமத்தில் இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. காந்தியின் […]

Read more

அவரும் நானும்

அவரும் நானும், துர்கா ஸ்டாலின், உயிர்மை பதிப்பகம், விலை800ரூ. ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அதேபோன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு பின்னால் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருப்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது. மனைவி சிறப்பாக இருந்தால் வீடு சிறப்பு பெறும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்து வரும் நூலாசிரியரின் மறக்க முடியாத மனப்பதிவுகளை அபூர்வ புகைப்படங்களுடன் இந்த நூல் சித்தரிக்கிறது. ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடிகள், சவால்கள், சோதனையான […]

Read more

தமிழ்மகள் சிறுகதைகள்

தமிழ்மகள் சிறுகதைகள், தமிழ்மகள், உயிர்மை பதிப்பகம், விலை 550ரூ. பல நாவல்களும் ஏராளமான சிறுகதைகளும் எழுதியுள்ள தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன், ஜுனியர் விகடனில் பணியாற்றுகிறார். அவருடைய பல நாவல்கள், பரிசுகளும், விருதுகளும் பெற்றவை. இவர் எழுதிய சிறுகதைகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 80 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. 3 பக்கக் கதைகளும் உண்டு. 10 பக்க கதைகளும் உண்டு. கதைகளை வீணாக வளர்க்காமல், வார்த்தைகளை சிக்கனமாகக் கையாண்டு, விறுவிறுப்பாக எழுதியுள்ளார். பரிசு பெற்ற கதைகளும் பாராட்டுப் பெற்ற கதைகளும் நிறைய […]

Read more

காதல் வழியும் கோப்பை

காதல் வழியும் கோப்பை, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், விலை 120ரூ. அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும், கனவுகளுக்காவும், உருவாக்கிகொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடன், சுவாரஸ்யத்துடனும் சொல்கின்றன இந்தக் கதைகள். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 96, விலை 85ரூ. மெட்ராஸ்காரர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடிகளை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த, 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கின்றனர்’ என, சித்திரை வெயிலாய் வறுத்தெடுக்கிறார், சென்னைவாசியான தமிழ்மகன். தமிழன் பெயரோடு, ‘துரை’ சேர்ந்த வரலாற்றிற்கு, வள்ளிமலை சுவாமிகளே காரணமாம். ஆம்… ஆங்கில புத்தாண்டில், […]

Read more

இடக்கை

இடக்கை, எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், பக். 358, விலை 375ரூ. பேரரசர் அவுரங்கசீப் மரணம் அடைவதை சொல்லி, இந்த நாவல் துவங்குகிறது. டில்லி அரியணை ரத்தக்கறை படிந்தது. எளிய மனிதன் ஒருவனும் அதில் அமர்ந்ததேயில்லை. இந்த நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமான்ய மனிதர்களின் கதையை சொல்ல முயல்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் சிறையில் அடைக்க இடம் இல்லாமல் போய் விட்டதால், அவர்களுக்கென ஒரு சிறு நகரை உருவாக்கி இருந்தனர். அந்த நகரை காலா என அழைத்தனர். சில குற்றவாளிகள் […]

Read more

தாரகை

தாரகை, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. இந்நூல் சினிமா உலகத்தை கழுகுப் பார்வையில் பார்த்துப் பதிவு செய்கிறது. சினிமாவின் புல்லரிப்புகள், பரவசங்கள், பாசாங்குகள், பயங்காட்டல்கள், சவால்கள், சறுக்கல்கள், கலைவதற்காகவே அடுக்கப்படும் கனவுகள், பொறாமைகள், காய் நகர்த்துதல்கள், பகட்டுத்தனங்கள் என எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் தமிழ் மகன். ஒரு தேர்ந்த வில் வித்தைக்காரனின் அம்புகளைப்போல இவரது சொற்களும், சொற்களின் வழி விரிந்து செல்லும் கதை உலகமும் இந்த யதார்த்தத்துக்கு துணை புரிகின்றன. தீபிகா என்ற நடிகை, திடீர் புகழ் பெற்று சிலரை […]

Read more
1 2 3 5