டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு, இரா.நடராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 130ரூ. அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும், வாழ்க்கை வரலாற்றையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்த நூல் படம் பிடித்து காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

யுரேகா கோர்ட்

யுரேகா கோர்ட், இரா. நடராசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 158, விலை 150ரூ. 2014ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இரா. நடராசனின் சிறந்த படைப்பு. தொழில்நுட்ப வசதிகள் பெருகியதால் குழந்தைகளுக்கும் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், அவர்களைப் படிக்க வைப்பதற்காக அறிவியலையும், செயல்விளக்கங்களையும் பயன்படுத்தியிருக்கும் உத்தி மிகவும் பிரமாதம். அவர்களைப் புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாக அமைந்துள்ள எழுத்து நடை, இந்நூலின் தனிச்சிறப்பு. கதைகளின் ஊடே அறிவியல் தகவல்களைப் […]

Read more

தமிழன் தொடுத்த போர்

தமிழன் தொடுத்த போர், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை, விலை 80ரூ. 1965-ம் ஆண்டில், பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். அதை இளைய தலைமுறையினர் நன்கு அறிவார்கள். இதற்கு முன், 1938ல் நடந்ததுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டம். இதற்கு ஈ.வெ.ரா. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைமை தாங்கினார்கள். தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போராட்டத்தின் முழு விவரங்களையும் பேராசிரியர் மா. இளஞ்செழியன் எழுதியுள்ளார். அந்த நூலை, […]

Read more