ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும்

ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 180ரூ. துர்க்கையின் அவதாரம், துர்க்கையின் வடிவங்கள், துர்க்கா பூஜை மற்றும் நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள் ஆகியவை எளிய முறையில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. ராகு காலம் என்றால் என்ன? வாரத்தில் ஒவ்வொரு நாளும் ராகு காலம் எப்போது என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளும் வழி என்ன? ராகு கால பூஜை செய்வது எப்படி என்பவையும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. சூரிய ஒளியை இரண்டு விதமாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஒளி மின் அழுத்தம் என்பது நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதாகும். சூரியக் கதிரை மின்சாரமாக மாற்றும் ஒளிமின் கலங்களைப் பற்றியும், அவற்றை இணைத்து மின் ஆற்றலை வழங்கும் ஆய்வு மற்றும் தொழிலைப் பற்றியும் குறிப்பதாகும். தினமும் தவறாமல் சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருப்பதால், இது வற்றாத ஆற்றலாக விளங்குகிறது என்கிறார் நுாலாசிரியர். இறைவன் நமக்கு அளித்த […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலை 100ரூ. தண்ணீர், நிலக்கரி, அணுசக்தி ஆகியவற்றால் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் மாற்று முறையாக சூரிய மின் சக்தி கண்டுபிடிக்கப்பட்டது பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. சூரிய மின்சக்தி என்றால் என்ன, அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, வீடு மற்றும் விவசாயத்துக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பயனுள்ள அனைத்து தகவல்களையும் ஆசிரியர் தந்து இருக்கிறார். சூரியமின் சக்தி பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல கையேடாக இந்தப் புத்தகம் விளங்குகிறது. நன்றி: […]

Read more

வெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்

வெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 145ரூ. தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் சிறந்தவர் என்று போற்றப் பெறும் திருமூலர், 3,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், திருமந்திரப் பாடல்கள், 3,000 இயற்றினார் என்றும் கூறுவர். திருமந்திரப் பாடல்களில் கூறப் பெற்றுள்ள கருத்துக்கள் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவன. முயலும் செயல்களில் வெற்றி பெற திருமந்திரம் துணை செய்யும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் பலவும் திருமந்திரத்தில் உள்ளன என்பதை நுாலாசிரியர் எளிய முறையில் விளக்கியுள்ளார். ‘அன்பும் சிவமும் இரண்டல்ல. […]

Read more

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. துளசியைப் பற்றிப் பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது. இதை ஆன்மிகமும், அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்நுாலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். முதல் பகுதி – இலக்கியம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள துளசியின் பெருமையை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி – துளசி வழிபாடு, ஸ்தோத்திரங்கள், வழிபட வேண்டிய முறை, அதனால் பெறப்படும் பலன்கள் […]

Read more

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்)

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்), டாக்டர் மா. ஷிவகுமார், அழகு பதிப்பகம், பக். 224, விலை 180ரூ. தென்னக ரயில்வேயில் இன்ஜீனியராக 33 ஆண்டுகள் பணியாற்றிய இந்நூலாசிரியர், ஜோதிடத் துறையிலும் 25 வருட அனுபவங்களைப் பெற்று, இது குறித்து பல பாடங்களையும் கற்று பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தங்கள் மனதில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இவர் அளித்துள்ள பதில்கள், கேட்பவர்களுக்குப் பெரும் திருப்தி அளித்துள்ளன. அவற்றின் தொகுப்பே, இந்நூல். சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் […]

Read more

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 256, விலை 225ரூ. இந்நூல் சார்ந்த மார்க்கத்தின் செய்திகளுள் சில, பலவற்றை எளிய நடையில் எடுத்துரைக்கும் நூலாகும். இறைவியின் நாம ரூப பேதங்களில் காளிகாதேவி என்பதும் ஒன்று. இந்நூலாசிரியர் தேவிபாகவதம், புராணங்கள், தல வரலாறுகள் போன்றவற்றை திரட்டி கற்று இந்நூலை படைத்துள்ளார். மொத்தம், 47 தலைப்புகளில் வழங்கியுள்ள இவரின் அரிய முயற்சி பாராட்டுக்குரியது. அனுக்ரகத் தாயான அவள் வடிவம் கோர வடிவம்; உபாசகர்களுக்கு வரம் கோர உரிய ஆனந்த சொரூபம். […]

Read more

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்,

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 145ரூ. திருமந்திர பாடல்களில் சிலவற்றுக்கு எளிய விளக்கமும், நடைமுறை உதாரணங்கள் அடங்கிய கட்டுரைகள் இடம் பெற்ற நூல். குறிப்பாக அன்பும் சிவனும், யான் பெற்ற இன்பம், ஒன்றே குலம் ஒருவனே தேவன், இனிய இல்லறம் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ்

திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ், குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 168, விலை 140ரூ. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை மிகச் சரியாக கணித்த தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ். தலைவர்களின் அகாலமரணம், மோசமான இயற்கைப் பேரழிவுகள், உலகப் போர்கள், சண்டைகள், சச்சரவுகள் என்று பல்வேறு அம்சங்களை 16ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படித் துல்லியமாக கணிக்க முடிந்தது என்பதை அலசும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், ஆர். கல்யாண மல்லி, அழகு பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. மனித வாழ்க்கையில் தோன்றும் பல்வேறு பிரச்னைகளையும் எப்படி எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறுபவைதான் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள். குறிப்பாக பெண்ணாசையும், மண்ணாசையும் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது. அவை முறையற்றதாக இருந்தால், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு விளக்கி, மனித வாழ்க்கைக்குரிய அறத்தைப் போதிப்பதால், இவை இன்றும் போற்றப்படுகின்றன. மஹாபாரதம் முடிந்த சமயத்தில்தான் கலியுகம் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்கள், […]

Read more
1 2 3 4