அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, அழகின் நரம்பியல், உளவியல் விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.106, விலை ரூ.50. மனித வாழ்க்கையின் அடிப்படையாகத் தன்னைப் பேணுவதும், தன்னைப் போல் இன்னொன்றைப் பிறப்பிப்பதும் இருக்கின்றன.  இந்த இரண்டும் எல்லா மிருகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், மனிதனிடம் விளையாட்டும், கலை உணர்வும் இருப்பதுதான் மிருகங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் காட்டுகிறது. கலையின் மேற்பூச்சுக்குப் பின் காமம் மறைந்திருக்கிறது. பரதநாட்டியம், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்றவற்றில் மெலிதாகக் காமம் இழையோடுவதைப் பார்க்க முடியும். அவை காம இச்சையின் வடிகால்கள்தானே என்கிறார் நூலாசிரியர். கலையோடு […]

Read more

தத்வமஸி

தத்வமஸி, சு.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. தத்வமஸி என்ற வார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில் சன்னிதி முகப்பில், இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியும். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பது தான் இதன் அர்த்தம். இறைவனும் நாமும் ஒன்று தான் என்ற, அத்வைத தத்துவத்தை விளக்கும் வாசகம். ஆதிசங்கரர் எழுதிய, ‘வாக்கிய விருத்தி’ என்ற நுாலை, ஆங்கிலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்துள்ளார். அதை தமிழாக்கம் செய்துள்ள […]

Read more

தத்வமஸி

தத்வமஸி, பேரா.சு.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 112, விலை 150ரூ. தத்வமஸி என்றவார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில் சன்னிதி முகப்பில், இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியும். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பது தான் இதன் அர்த்தம். இறைவனும் நாமும் ஒன்று தான் என்ற, அத்வைத தத்துவத்தை விளக்கும் வாசகம். ஆதிசங்கரர் எழுதிய, ‘வாக்கிய விருத்தி’ என்ற நுாலை, ஆங்கிலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்துள்ளார். அதை தமிழாக்கம் […]

Read more

ஸ்ரீ ருத்ரம் விரிவுரை

ஸ்ரீ ருத்ரம் விரிவுரை, ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, தமிழில்: க.மணி; , அபயம் பப்ளிஷர்ஸ், பக்.256, ரூ.250 வைதிகர்கள் ஓதும் வேத மந்திரமான ஸ்ரீருத்ரம் என அழைக்கப்படும் சத ருத்ரீயத்திற்கு ஸ்வாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஆங்கில விரிவுரை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு பதம் பிரித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் வெறும் அர்த்தம் சொல்வது என்றில்லாமல், ஒவ்வொரு மந்திரத்தின் பலனும் அதன் அர்த்தமும் அதோடு சேர்ந்த குட்டிக் கதைகளும் வேதாந்த விஷயங்களும் புத்தகத்தை வெகு சுவாரஸ்யமாக்குகிறது. காயிகம், வாசிகம், மானசம் என்ற […]

Read more

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ ருத்ரம், திருக் – திருச்சிய விவேகம், பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி, தமிழில் பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 848, 256, 301, விலை 1000ரூ, 250ரூ, 250ரூ. நம்மிடையே வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்தசிறந்த துறவியான தயானந்த சரஸ்வதி, இந்த நாட்டின் அறிவுச் செல்வமான உபநிஷத், வேதம் ஆகியவற்றின் பருப்பொருளை உலகம் முழுவதும் சென்று, தன் சிறந்த ஆங்கில உரையால் விளக்கிய மகான். ஆயிரம் பேர் கொண்ட விஷ்ணுவை விளக்கும் சஹஸ்ரநாம விளக்கம் ஆன்மிகக்கடல். அதை மொழிபெயர்த்த ஆசிரியர் […]

Read more

நான் உலகம் கடவுள்

நான் உலகம் கடவுள், அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடல், க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.102,  விலைரூ.120. நானும்-உலகமும் சேர்ந்ததுதான் கடவுள். கடவுள் நானாகவும் உலகமாகவும் இருக்கிறார். இது உபநிஷங்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்ற அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடலை நான் உலகம் கடவுள் நூல் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர். காலம்-இடம்-பொருள் எனும் மூன்றாலும் நான் அளவற்றவன். எது அளவற்றதோ, முடிவற்றதோ அதன் பெயர் அனந்தம். எது குறைவற்றதோ அதுவே ஆனந்தம். மனிதனிடம் உள்ள நான் எனும் அக உணர்வு அவனுக்குச் செயல் சுதந்திரத்தை வழங்குகிறது. அவனது […]

Read more

தத்வமஸி

தத்வமஸி – மகாவாக்கிய விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.112, விலை ரூ.150. உன்னத ஞானம் – மோட்சம் கிட்டச் செய்யும் தத்துவ சிந்தனைக்கு வழி வகுக்கிற சொற்றொடர் மஹாவாக்யம் என்று அறியப்படுகிறது. வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் ஏராளமான மஹாவாக்யங்கள் காணக் கிடைக்கின்றன. இவை உயரிய ஞானத்தைப் பெற எளிய வழியாகக் கருதப்படுகின்றன. வேதத்துக்கு ஒன்று என்ற அளவில், ஹைந்தவ தத்துவ விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் குறிப்பிடத்தக்கவையான, பரவலாகப் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மஹாவாக்யங்கள் நான்கு பிரஜ்ஞானம் பிரஹ்மா என்கிற மஹாவாக்யம், ரிக் வேதத்தில் அடங்கிய ஐதரேய […]

Read more

கர்மா தர்மா

கர்மா தர்மா, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.64, விலை ரூ.100. அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருக்கும் நூலாசிரியர், ஆன்மிகம் சார்ந்து இந்நூலை எழுதியுள்ளார். செய்வது அனைத்தும் கர்மம், அதன் பலனை நிச்சயிப்பது தர்மம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புதுப்புது இயற்பியல், ஆகாயவியல் விதிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தோறும் அவர்கள் ஈச்வரனின் இயக்க நியதிகளைத்தான் சிறிது புரிந்து கொள்கிறார்கள். விஞ்ஞானம் என்பதே ஈச்வரனை அறியும் அறிவே. விஞ்ஞானிகள் ஈச்வரனைத்தான் ஆராய்கிறார்கள். ஈச்வரனைப் புரிந்து கொள்வதற்காக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், காஸ்மாலஜி போன்ற படிப்புகளை எல்லாம் […]

Read more

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம், சுவாமி தயானந்த சரசுவதி, தமிழில் பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 1000ரூ. மகாபாரதம் அனுசாசன பர்வத்தில் இடம் பெற்று இருப்பது விஷ்ணு சஹஸ்ரநாமம், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாகக் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம், இந்துக்களின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றதாகும். விஷ்ணுவைக் குறிக்கும் இந்த ஆயிரம் நாமங்களும், அவற்றுக்கு சுவாமி தயானந்த சரசுவதி அளித்த விரிவான விளக்கங்களும் இந்த நூலில் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. விஷ்ணுவின் வழிபாட்டில் ஒவ்வொரு நாமத்துக்கும் என்ன பொருள் என்பதோடு, […]

Read more

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், பேரா. க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 148, விலை 120ரூ. அவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும் உள்ளது. 72 வரிகள் கொண்ட அகவற்பாவுக்கு, ஆசிரியர் பொழிப்புரை, விரிவுரை இரண்டையும் அழகுற அமைத்துள்ளார். அகவுதல் என்றால் அழைத்தல் என்ற பொருளும் உண்டு. இறுதி அடியில், ‘வித்தக விநாயக, உன் மணம் மிக்க திருவடியில் சரண் புகுகிறேன்’ என்று அகவல் முடிகிறது. முதல் இரண்டு வரிகளில் விநாயகரின் திருவடியைச் சிறப்பித்து, இறுதி […]

Read more
1 2