ஆதார் கார்டு A to Z

ஆதார் கார்டு A to Z, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 230ரூ. இந்திய மக்களின் ஆதாரத்திற்கான அடையாளமாக இருக்கும், ‘ஆதார்’ அடையாள அட்டை பற்றி, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமை தமிழிலும், விளக்கங்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார், இதன் ஆசிரியர். ஆதார் அடையாள எண் பெறுவது எப்படி என்பது துவங்கி, ‘ஆன்லைன்’ மற்றும் அலுவலகத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது எப்படி என்பது வரை விபரமாக குறிப்பிட்டு உள்ளார். ஆதார் மையங்கள் எங்கெங்கு உள்ளன; தொலைந்து போனால் மீண்டும் பெறுவது எப்படி […]

Read more

மனம் சொல்லுமே மகிழ்ச்சி

மனம் சொல்லுமே மகிழ்ச்சி, ந.ஸ்ரீதர், மணிமேகலைப் பிரசுரம், பக். 96, விலை 80ரூ. அன்றாட நிகழ்வை சுட்டிக்காட்டி, அதன் மூலம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை, ‘மனம் சொல்லுமே மகிழ்ச்சி’ என்ற நுாலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வழியே காட்டுகிறார். நாளை நிகழவுள்ள நிகழ்வுக்காக, இன்றுள்ள பொழுதை வாழ வழியில்லாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, ‘நம் மனதில் உள்ள குப்பைகள்’ என்ற தலைப்பில் புத்துணர்ச்சி மலரச் செய்யும் பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

உடல் அரசியல்

உடல் அரசியல், ஜெகாதா, மீனாட்சி புத்தக நிலையம், பக்.232, விலை ரூ.200. உடல் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்போம். பேசும்போதும், பேசுவதற்கு மாற்றாகவும் உடல் மொழி உதவுகிறது. இந்த “உடல் அரசியல்’ நூல் கூட ஒருவிதத்தில் உடலின் பேச்சை – உடலின் மொழியை – நாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகிறது. நான் என்று ஒருவர் தன்னை நினைத்துக் கொள்வது அவருடைய சிந்தனை, மனோபாவம் ஆகியவை மட்டுமல்ல, இந்த உடலும் சேர்த்துத்தான் என்பதால் உடலைப் பற்றி தெரியாத விவரங்களை இந்நூல் சொல்லித் தருகிறது. நமது உடலில் உள்ள […]

Read more

சிலம்பொலியார் பார்வையில்

சிலம்பொலியார் பார்வையில், கே.ஜீவபாரதி,  ஜீவா பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. நூலாசிரியர் தொகுத்த”பட்டுக்கோட்டையார் பாடல்கள்' என்ற நூலுக்கும், நூலாசிரியர் எழுதிய புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் மற்றும் அப்துற்-றஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு ஆகிய நூல்களுக்கும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். சிலம்பொலி செல்லப்பனாரின் 85 -ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு நூலாசிரியர் எழுதிய கட்டுரை பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் சிறப்புகளை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக் கூறுகிறார். “மக்களின் இன்றைய தேவைக்கேற்ற புதுமையான […]

Read more

உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து,

உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து, இரா.திருநாவுக்கரசு; இரண்டு பாகங்கள்; குமரன் பதிப்பகம், ஒவ்வொரு பாகமும் பக்.168, விலை ரூ.150. தினமணி இளைஞர்மணியில் தொடராக வெளிவந்த 52 கட்டுரைகளின் நூல் வடிவம். ஒருவர் தன்னையறிந்தால், தன் திறமைகளை, ஆற்றலை அறிந்தால் வாழ்வில் உயர முடியும். மனிதன் உடம்பால் ஆனவன். அவனுக்கு மனம் இருக்கிறது. எண்ணங்கள், குறிக்கோள்கள் இருக்கின்றன. வாழ்வில் முன்னேற திட்டமிட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வேண்டும். கட்டுபாட்டோடு இருக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும். […]

Read more

அறம் கூறும் ஆத்திசூடி

அறம் கூறும் ஆத்திசூடி, துரை. சக்திவேல், மணிமேகலைப் பிரசுரம், பக். 160, விலை 100ரூ அறம் செய விரும்பு முதல், சக்கர நெறி நில் வரையிலான அவ்வையின் நீதி போதனைகளை, புனைப்புக் கதை வடிவில் சித்திரக் காட்சிகளுடன் எளிய நடையில் படைத்துள்ள ஆசிரியர் சக்திவேல் பாராட்டிற்குரியவர். கணினி மயமான இன்றைய வாழ்க்கைச் சூழலில், நன்னெறி புகட்டும் அறக் கருத்துகளை  சிறார்களுக்கு வழங்கும் நல்ல வாழ்வியல் நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள்

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள், எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. உலகம் தோன்றியபோதே தமிழகமும் தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டமும் எப்படி தோன்றியது என்று வரலாறு இருக்கிறது. ஆனால், மதுரை எப்போது தோன்றியது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாவட்டம் என்கின்றனர் சிலர். எனவே, கோவில் மாநகர், அரசியல் நகரம், துாங்கா நகரம், பண்பாட்டு நகரம், கடம்பவனம் என, பல்வேறு […]

Read more

கர்த்தரின் நாமத்தில்

கர்த்தரின் நாமத்தில், சகோதரி லூசி களப்புரா, தமிழில் ஜி.வி.ரமேஷ்குமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 128, விலை 130ரூ. நுாலாசிரியர் ஜி.வி.ரமேஷ்குமாரின் நான்காவது படைப்பு இது. மலையாளத்தில் வெளிவந்த சகோதரி லுாசி களப்புராவின், ‘கர்த்தரின் நாமத்தில்’ என்ற நுாலை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவர் கன்னியாஸ்திரி லுாசி களப்புரா; அவரின் வாழ்க்கை கதையே இந்த நுால். மலையாளத்தில் அவர் எழுதியதை […]

Read more

வீட்டு வைத்தியர்

வீட்டு வைத்தியர், டாக்டர் தி.சே.செள.ராஜன், சந்தியா பதிப்பக வெளியீடு, விலை: ரூ.390 ராஜாஜியின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் தி.சே.செள.ராஜன் சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறை சென்றிருந்த காலகட்டத்தில், பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர் எழுதிய புத்தகம் இது. முதற்பதிப்பு வெளியானது 1945-ல். அவருடன் சிறையில் இருந்த ராஜாஜியே இந்தப் புத்தகத்துக்குச் சுவையான முன்னுரை எழுதியிருக்கிறார். உடல் பாகங்கள் தொடர்பான விளக்கங்கள் தொடங்கி, பல்வேறு நோய்கள் தொடர்பான அறிகுறிகள், நோய்க்கான எளிய மருத்துவ முறைகள், சுகாதார மேம்பாட்டுக்கான எளிய […]

Read more

பெரியார் இன்றும் என்றும்

பெரியார் இன்றும் என்றும், (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்), விடியல் பதிப்பகம், விலை: ரூ. 300. பெரியார் தன் வாழ்நாளில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், ஆற்றிய உரைகள் போன்றவற்றைப் படிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு ஆயுள் வேண்டும்! பெரியார் எழுத்துக்களின் தொகுப்புகள் அனைத்தையும் படிக்க முடியாதவர்களுக்கு இந்தப் புத்தகத்தை நிச்சயம் பரிந்துரைக்கலாம். பெரியார் தொட்ட எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய பெருந்தொகுதி! மிகவும் மலிவான விலை என்பது கூடுதல் வாசகர்களை ஈர்க்கும் நன்றி: தமிழ் இந்து, 18/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 4 691