பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்
பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும், எஸ்.மோதிலால், சைவப் பிரகாச சபை, விலை 450ரூ.
நீராரும் கடல் உடுத்த.. என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைத் தந்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஒரே மகனான பி.எஸ்.நடராஜபிள்ளை பற்றிய அரிய பல தகவல்களை இந்த நூல் கொண்டு இருக்கிறது.
கேரள தலைவர்களில் ஒருவரான பட்டம் தாணுப்பிள்ளையுடன் இணைந்து திருவிதாங்கூர் அரசியலில் பி.எஸ்.நடராஜபிள்ளை எவ்வாறு பெரும் ஆளுமையாக விளங்கினார் என்பதும், அவரது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பணிகள் தொடர்பான தகவல்களும் சிறந்த முறையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன.
பி.எஸ்.நடராஜபிள்ளை தனது இறுதிக் காலத்தில் வறுமையுடன் வாழ்ந்தாலும் கொள்ளைப்பிடிப்புடன் இருந்தார் என்பது படம்பிடித்துக் காட்டப்பட்டு இருக்கிறது. இத்துடன் மனோன்மணீயம் சுந்தரனாரின் வாழ்க்கைக்குறிப்பு, அவர் தமிழில் இயற்றிய இலக்கியங்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 9/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818