நாரணோ ஜெயராமன் கவிதைகள்
நாரணோ ஜெயராமன் கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ.
வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுதி வழியாகச் சிறந்த கவிஞராக அடையாளம் காணப்பட்டவர். அன்றாட வாழ்வின் செக்குமாட்டுத் தன்மை, பழக்கங்களின் சுமைகளிலிருந்து விடுபட்டுப் பறக்க எண்ணிய வலுவான நவீனத்துவக் குரல்களில் ஒன்று இவருடையது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியில் உந்துதல் பெற்ற புதுக்கவிஞர். ‘ஒதுங்கி நின்று, அலட்சியமும், நெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, பரிந்து கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை’ என்று பிரமிள் இவரை வரவேற்றிருக்கிறார்.
அத்தொகுப்புக்குப் பிறகு எழுதிய கவிதைகளையும் சேர்த்து டிஸ்கவரி புக் பேலஸ், ‘நாரணோ ஜெயராமன் கவிதைகள்’ நூலை அழகான முறையில் எஸ்.வைத்தீஸ்வரனின் முன்னுரையுடன் வெளியிட்டுள்ளது.
நன்றி: தமிழ் இந்து, 4/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818