காளி

 காளி, ச.விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், விலை: ரூ.130

அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகள்

நான்கு கவிதைத் தொகுப்புகளும், இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் தந்த ச.விசயலட்சுமி ‘காளி’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் புனைவுலகில் களம் இறங்கியிருக்கிறார்.

ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடலான லண்டாய் கவிதைகளை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இவரது பெரும்பாலான கதைகளில் விளிம்புநிலை மாந்தர்களே மையமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள். சென்னை கூவம் சார்ந்த மக்களின் வாழ்க்கையானது யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளில் பதிவாகியிருக்கின்றன.

இக்கட்டான சூழ்நிலைகளை இவரது பெண் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் விதம் மிகவும் நுட்பமானது. பெண்கள், பெண்ணுரிமை, பெண்ணெழுத்து என்று இயங்கிவந்ததன் வெளிப்பாடு அது.

– கார்த்திகேயன்

நன்றி: தமிழ் இந்து, 25/8/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *