இளமையில் வெல்

இளமையில் வெல், செ.சைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ்., தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்களை ஆற்றல் படைத்தவர்களான உருவாக்க வேண்டும். அதே வகையில் அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், ஐ.பி.எஸ். அதிகாரி செ.சைலேந்திரபாபு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரைத் தொடர், தினத்தந்தி இளைஞர் மலரில் வெளியானபோது, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘பூமியில் புதைத்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகளே […]

Read more

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.604, விலை ரூ.520. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்நூல் கிராம ஊராட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்து தந்திருக்கிறது.கிராம ஊராட்சிகளின் அதிகார எல்லைகள் எவை? ஊராட்சித் தலைவரின், இதர பணியாளர்களின் பணிகள் எவை? குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு என அனைத்தையும் கிராம ஊராட்சி அமைப்பு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை அமைப்பது, அதைப் பராமரிப்பது, மேம்படுத்துவது […]

Read more

வெற்றி எங்கே இருக்கிறது?

வெற்றி எங்கே இருக்கிறது?, உதயை மு.வீரையன், மணிவாசகர் பதிப்பகம், பக்.136; ரூ.100 வாழ்கையில் ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை மிக விரிவாகக் கூறும் நூல்.சிறந்த குறிக்கோள் இருப்பவர்களே சிறந்த மனிதர்களாக விளங்க முடியும். சிறந்த மனிதர்களால் மட்டுமே சிறந்த வெற்றியை ஈட்ட முடியும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். முடிவு எடுத்த பிறகு திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கியே போய்க் கொண்டிருக்க வேண்டும்.கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எனக்குத் […]

Read more

சித்தர் வழி

சித்தர் வழி, அரங்க. இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம், பக்.312, விலை ரூ.200. சித்தர் மரபு குறித்து பொதுநிலையில் பேசப்படுபவை, சித்தர் நெறியின் மெய்ப்பொருள் ரகசியங்கள் குறித்து பேசப்படுபவை, அனுபவ அறிவால் உணரக் கூடிய நூலாக திகழும் திருமந்திரம், சித்தர் நோக்கில் சைவநெறி போன்றவை குறித்த 21 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சித்தர் நெறியின் பன்முகத்தன்மையை விரிவாகப் பேசுவதோடு, அவர்களின் பரிபாஷைகள் குறித்த தொகுப்பு, அவற்றில் ஒரு சிலவற்றுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் ஏன் பரிபாஷைகளைக் கையாண்டனர் என்பதற்கான காரணம் உள்ளிட்டவற்றை தனது கட்டுரைகளில் […]

Read more

உள்ளங்கையில் உடல் நலம்

உள்ளங்கையில் உடல் நலம்,  பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன்,வானவில் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.166.   “நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும் நாம் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டால் நோயிலிருந்து விரைந்து குணமடைய முடியும்” என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் நாம் கொண்டுள்ள பல கருத்துகளை இந்நூல் மாற்றியமைத்துவிடுகிறது. நன்றாகத் தூங்கினால், உடல் நலம் பெறும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, “ஒரு நாளைக்கு 9 […]

Read more

சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில்,

சில பெண்கள் சில அதிர்வுகள், வேத, இதிகாச, புராண காலங்களில்,  ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக்.184, விலை ரூ.140. தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக். 248, விலை 200ரூ. பொற்கால சங்கத் தமிழ் எழுச்சியும், தற்கால சமுதாய வீழ்ச்சியும், எதிர்கால சீர்திருத்த முயற்சியும் கொண்டு தொண்டாற்றும் பேச்சாளர், எழுத்தாளர் பேராசிரியர் தி.இராசகோபாலன். இவரது சிறகடித்த சிந்தனைப் பறவைகள் தடம் பதித்த இதழ்களின் கட்டுரைகள் இந்நுாலில் வலம் வருகின்றன. மாலனின் அணிந்துரை மந்திரச் சாவியாய் நம் மனங்களைத் திறந்து ஆர்வமாய் படிக்க அழைத்துச் செல்கிறது. வாக்களாரின் கடமைகள், பேரிடர் மேலாண்மை, சித்தர்கள், திருமழிசை ஆழ்வார், கபீர்தாசர், அத்திகரி வரதர், பசவேசர், குல்தீப் […]

Read more

நன்மைகளின் கருவூலம்

நன்மைகளின் கருவூலம், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், பாரதி புத்தகாலயம், விலை 150ரூ. வாழ்வில் வெற்றி பெறும் வகையில் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது? பதின்பருவத்தினர் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி மேற்கொள்வது? அந்தப் பருவத்தில் அவர்களுடன் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது உள்பட பயனுள்ள பல தகவல்களை இந்த நூல் தருகிறது. வாழ்வியலுக்குத் தேவையான ஆலோசனைகளை அறிவுரை போல அல்லாமல் கதையைச் சொல்லும் வித்தில் அவற்றைத் தந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் உள்ள கருத்துகள் சார்ந்த நல்ல கவிதையைத் தேர்ந்தெடுத்துக் […]

Read more

போகரின் சப்தகாண்டம் 7000

போகரின் சப்தகாண்டம் 7000, பதிப்பாசிரியர் சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், முதல்பாகம் விலை 500ரூ, இரண்டாம் பாகம் விலை 400ரூ. அமானுஷ்மான சக்திகள் கொண்டவர்கள் என்று பலராலும் நம்பப்படும் சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே வியப்பானவை என்றாலும், சித்தர் போகர் எழுதியதாகக் கூறப்படும் இந்த நூலில் உள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றன. சிவபெருமாள் உமைக்கு அருளிய 7 லட்சம் பாடல்களான ஞானவிளக்கத்தை உமையிடம் இருந்து நந்தியும், நந்தியிடம் இருந்து திருமூலரும், திருமூலரிடம் இருந்து காலாங்கி சித்தரும் அவரிடம் இருந்து போகர் […]

Read more

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. தன்னந்தனி மனிதராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக, உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி நடத்தி, மகத்தான சாதனை புரிந்தவர் வீர மிகு நேதாஜி! சுதந்திரம் பெற ஒரு லட்சம் வீரர்களைத் திரட்டி பிரிட்டிஷாருடன் போரிட்டு, மணிப்பூர் வழியாக வந்து இரண்டு நகரங்களைப் பிடித்து, பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சுபாஷ் போஸ்! இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில், இந்திய தேசிய ராணுவம் எந்த வகையிலும் ஜப்பானையோ, வேறு நாடுகளையோ […]

Read more
1 2 3 62