அலர்ஜி

அலர்ஜி, கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.140 ‘சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும், எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பது பொதுவான மருத்துவ விதி. ஆனால், நடைமுறையில் எவற்றால், எப்போது, எப்படி அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், முன்னெச்சரிக்கையுடன் பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும். அலர்ஜி நோய்களின் கொடிய முகத்தை அவற்றை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள். குறிப்பாக, பனியிலும் குளிரிலும் மழையிலும் ஆஸ்துமா வந்து அலறுபவர்கள் அநேகம் பேர். ‘எக்சீமா’ எனும் தோல் அழற்சி நோயால் உடலெங்கும் அரிப்பு எடுக்கத் தொடங்கினால் […]

Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. இந்திய சுதந்திர வரலாற்றில் அதி முக்கிய இடம் பிடித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு, அதிக அளவில் சர்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாது என்பதை இந்த நூல் சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறது. நாட்டுக்காக சுபாஷ் சந்திரபோஸ் செய்த தியாகங்கள், வீரச் செயல்கள் ஆகியவற்றுடன், அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? அதில் உள்ள மர்மங்கள் என்ன என்பதையும், இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை […]

Read more

ஆச்சார்ய வினோபாவும் விடுதலையும்,

ஆச்சார்ய வினோபாவும் விடுதலையும், நா.பாஸ்கரன், ஜாஸிம் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. வினோபா பாவேவின் எண்ண அலைகளும் எழுச்சியும், சங்கரர், ஞானேசுவரர், காந்தி ஆகிய பெருமகான்களால் எவ்வாறு ஒழுங்குப்படுத்தப்பட்டன, ஒருமுகப்படுத்தப்பட்டன என்பதை இந்நூலில் காணலாம். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள், நாகூர் சா.அப்துர் ரஹீம், அறிவு நாற்றங்கால், பக். 142, விலை 120ரூ. உடல்நலம் முதல், மனித நேயம் வரை அவசியமானது எது? அவசர உலகில் முக்கியம் என்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கும் முட்டாள்தனங்கள் என்னென்ன என்பதை புரியும் வகையில் எளிய நடையில் சொல்லியிருக்கும் புத்தகம். சிறியவர் முதல் பெரியவர் வரை எந்தப் பாகுபாடும் இன்றி அத்தனைபேரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இஸ்லாத்தின் அடிப்படையில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

தமிழா தமிழ் படி

தமிழா தமிழ் படி, கோகிலா தங்கசாமி, ஆக்டீவ் தமிழ் காம், பக். 80, விலை 120ரூ. தமிழைக் கற்பித்தலில் புதிய அணுகுமுறை தேவை. அதைக் குழந்தைப் பருவ கல்வியில் இருந்து துவங்க வலியுறுத்தும் முதல் நுால் இது. வாசிப்பை சொற்களில் சொல்லித் தர வலியுறுத்தும் ஆசிரியர், இருவர் இருவராக கைதட்டியபடி சொற்களை உரக்கக் கூறி வாசிக்கத் துாண்டும் வகையில் வண்ணப்படங்களுடன் வெளியிட்ட முறை புதிய உத்தியாகும். மூன்று வயது முதல், 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உதவும் இப்புத்தகம் ஆரம்பப் பள்ளிகளுக்கு நிச்சயம் […]

Read more

யார் தமிழர்?

யார் தமிழர்?, ஆர்.பி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், விலை 140ரூ. ஆர்யமாம் திராவிடமாம் அத்தனையும் புளுகே’ என துவங்கி, ‘பாரதி பார்வையில் பிராமணர்கள்’ ஈறாக, 13 கட்டுரைகள் பெரும்பாலும் திராவிட இயக்க எதிர்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கியவையாகும். கடந்த, 1965ல் காங்கிரசை வீழ்த்த ராஜாஜி தான் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் ஆடினார் -– பக்., 56. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியை, ராஜ்யோத்சவ நாளாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கொண்டாடவில்லை – பக்., 60. இப்படி […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.ராஜகோபாலன், வானதி, விலை 200ரூ. எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தக்களை துணிந்து ஆணித்தரமாகக் கூறக்கூடிய எழுத்தாளர் என்ற நற்பெயரைப் பெற்ற பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதிய 33 கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய சமுதாயத்தில் நிலவும் அவல நிலை, சித்தர்கள் பெருமை, பத்திரிகைகள் நிலைமை, பாலியல் துன்புறுத்தல்கள், கவிஞர் கண்ணதாசனின் சிறப்பு, ஓட்டு அரசியல், சுற்றுச் சுழலை பாதுகாத்த டாக்டர் பிந்தேஸ்வர் பதக், மத சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம், தீண்டாமைக் கொடுமை, தேவதாசி முறை, மீ டூ இயக்கம் […]

Read more

சேரன் செங்குட்டுவன்

சேரன் செங்குட்டுவன், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, விலை 165ரூ. கற்புக்கரசி, கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலை வரை சென்று அங்கு இருந்து கல் எடுத்து வந்த சேர மன்னர் செங்குட்டுவன் பற்றிய முழு தகவல்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. இமயமலையில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்லை, போரில தோற்கடித்த கனகவிஜயன் தலையில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுவதில், கனகவிஜயன் என்பது ஒரு மன்னர்தான், இருவர் அல்ல என்ற தகவலும் இந்த நூலில் காணப்படுகிறது. வரலாற்றுச் செய்திகளை நாவல் போல எழுதி இருப்பதால் படிக்க சுவாரசியமாக […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், விலை ரூ:80 முத்தத்தின் துயர மொழி, திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை. ‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை […]

Read more

அத்திமலைத் தேவன் பாகம் 1

அத்திமலைத் தேவன் பாகம் 1, காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், விலை 425ரூ. அத்தி வரதர் வரலாறு என்ன? 40 ஆண்டுகளாக, ஏன் தண்ணீருக்குள் இருக்கிறார்? என, ‘காலச்சக்கரம்’ நரசிம்மா, 40 ஆண்டுகளாக திரட்டிய ஆய்வறிக்கை, சுவைபட, சுவாரஸ்யம் குன்றாமல், ‘அத்திமலைத் தேவன்’ என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது. கோவில்கள் நகரமான காஞ்சியில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின், ஆனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி, பக்தர்களுக்கு […]

Read more
1 2 3 13