மாண்புமிகு முதலமைச்சர்

மாண்புமிகு முதலமைச்சர், கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் பெரியபுராணத்தை கதையாக பாடிய சேக்கிழார். அவரது வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் படைக்கப்பட்ட புதினம் இது. சரித்திரப் புதினங்களைப் படைக்க விரும்புவோருக்கு வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், இலக்கியப் புலமையும் இருந்திடல் வேண்டும். புதினத்தைப் படைப்பதற்காகத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் நிலவிய சமூகச் சூழ்நிலை, கலாச்சாரச் செழிப்பு, பழக்க வழக்கங்கள் இவை பற்றிய செய்திகள் தெரிந்திருக்க வேண்டும. இவை அனைத்தோடு, வீரம், காதல், போர்க்களத்தந்திரங்கள் இவற்றைப் […]

Read more

காவிரி நாடன் காதலி

காவிரி நாடன் காதலி, கன்னரதேவன், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், விலை 300ரூ. இந்த சரித்திர நாவலை எழுதி முடிக்க எனக்கு 35 ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நூலாசிரியர் தமிழுலகன். ஆதித்த சோழர் வரலாற்றையும், கன்னரதேவன் வரலாற்றையும் அடிப்படையாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. ஏராளமான கதாபாத்திரங்கள். எனினும் கதையை குழப்பம் இன்றி விறுவிறுப்பாக எழுதியுள்ளார். தமிழ் உணர்வைத் தூண்டும் நாவல். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- கற்றபின் நிற்க, கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. நம் மொழியில் இல்லாத நற்சிந்தனைகள் […]

Read more

திரௌபதி

திரௌபதி, யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி, பக். 368, விலை 200ரூ. பாரதத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் வெறும் கதையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்வையும், அப்போது நிலவிய அதிகாரப் போட்டியையும் வெளிப்படுத்தும் ஆவணம். மகாபாரதம், காலந்தோறும் புதிய வடிவில் மீள்பார்வைக்கும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதினமே இந்நூல். நூலாசிரியர் யார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் மகாபாரக் கதையின் மைய நாயகியான திரௌபதியை ஆதார விசையாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். திரௌபதியின் […]

Read more

பொன் வேய்ந்த பெருமாள்

பொன் வேய்ந்த பெருமாள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. சடையவர்மர் சுந்தரபாண்டியர், மூன்றாம் ராகவேந்திர சோழர், விசயகண்ட  கோபாலன் ஆகிய சரித்திர நாயகர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வரலாற்றுப் புதினம் பொன்வேய்ந்த பெருமாள். சரித்திரக் கதைகளுக்கு அடிப்படைத்தேவை கம்பீரமான நடை. கோவி. மணிசேகரன் இயற்கையாகவே கம்பீர நடையை கைவரப்பெற்றவர். காட்சிகளை வர்ணிப்பதிலும், அசகாய சூரர். அவருடைய இந்த முத்திரைகள், இந்த நாவலிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளன. இதைப் படிக்கும் எல்லோருமே, நல்லதொரு சரித்திர நாவலைப் படித்தோம் என்ற மன நிறைவைப் பெறுவார்கள். நன்றி: தினத்தந்தி, 27/5/2015. […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 448, விலை 335ரூ. கங்கை கொண்ட ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியின் மகளான அம்மங்கையின் வயிற்றில் பிறந்தவர் அபயன். தெலுங்கு ராஜாவான அபயன் சோழ தேசத்து ஆட்சியை எப்படிப் பிடித்தார், பரந்து விரிந்த சோழ தேசத்தை எப்படி ஆட்சி செய்தார் என்பதே கதைக்களம். சோழர்கள் காலத்தில் உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்படவும், நிலையான ஆட்சிக்கும் பயன்பட்டு வந்த திருமணம், எப்படி சோழர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக மாற்றியது, பெண்கள் அரசியலில் எவ்வாறெல்லாம் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்(சமூக நாவல்), தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 150ரூ. ஒரு முழுமையான திரைப்படத்திற்கு தேவைப்படும் குடும்ப நிகழ்வுகள், காதல், வீரம், தியாகம், சோகம், அரசியல் செல்வாக்கும், பணபலமும் நிறைந்த ஆதிக்க சக்தி, இறுதியாக சுப நிகழ்வுகள் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு சமூக நாவல். கதாநாயகி பூவரசி ஒரு டாக்டர். தன்னையும், உடன்பிறப்புகளையும் தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் மறைந்து விடுவதால் அவர்களை ஆளாக்க தன்னை தியாகம் செய்கிறாள். அவளை தன் வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறான் […]

Read more

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள்

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள், மனிதவள மேம்பாடுட நிபுணர் மல்லியம் வெ. ராமன், புத்தகச் சோலை, மயிலாடுதுறை, விலை 80ரூ. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் படிக்க வேண்டிய நூல் இது. மனிதவள மேம்பாட்டு நிபுணரான மல்லியம் வெ. ராமன் வெற்றியின் ரகசியத்தை எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். வெற்றியடைய வேண்டுமானால் முதலில் தேவை வெற்றி மனப்பான்மை. நிதானமாக, பொறுமையாக, அதே சமயம் விடாப்பிடியாகத் தொடர்ந்து லட்சியத்தை நோக்கி நடந்தால், ஒருநாள் வெற்றி சாத்தியமாகும் என்கிறார் ஆசிரியர். இது இவருடைய முதல் நூல் […]

Read more

மணிக்கொடி

மணிக்கொடி, சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 500ரூ. கல்கியின் பொன்விழாப் போட்யில் முதல் பரிசு பெற்ற நாவல் இது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனும் உயரிய கருத்துக்கு முழு வடிவம் கொடுத்து உருவான நாவல். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்று புதினத்தை படைத்திருக்கிறார் நேதிர்லதா கிரிஜா. இப்புதினம், விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் […]

Read more

கங்கை கொண்ட சோழன்

கங்கை கொண்ட சோழன், பாலகுமாரன், விசா பப்ளிக்கேஷன்ஸ், நான்கு பாகங்கள் சேர்த்து  விலை 1630ரூ. மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, மாமன்னராக விளங்கிய ராஜேந்திர சோழனின் வரலாற்றுப் பின்னணியில் மிக சுவாரசியமாக எழுதப் பெற்ற நாவல். சரித்திர நாவல் என்பது தகவல் களஞ்சியம் அல்ல. ஆய்வுக்கட்டுரை அல்ல. அது ஓர் உணர்வுப் பெருக்கு என்று கூறும் இந்த நாவலின் ஆசிரியர் பாலகுமாரன், தனது உணர்வுகளைத் திரட்டி, இந்த சிரித்திர நாவலைப் படைத்து இருக்கிறார். கப்பல்கள் கட்டும் திறன், கடற்பயணம், போர்க்களம் போன்றவற்றின் நுணுக்கங்களை உள்வாங்கி, […]

Read more

கடாரம்

கடாரம், மாயா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 704, விலை 350ரூ. பதினோராம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை அரசாண்ட முகலாம் இராஜேந்திர சோழனின் காலத்தில் இக்கதை பயணிக்கிறது. இராஜேந்திர சோழன் படையெடுத்து கைப்பற்றிய கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரச மரபினர் யார்? என்பவை நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இராஜே3திர சோழன் கடாரம் நோக்கிப் படையெடுத்ததையும் அவனுடைய மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயம் மூலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கடாரம், தற்போதைய மலேசிய தீபகற்பத்தில் இருக்கும் கெடா பகுதி என்பதை அறியும்போது அது தற்போது […]

Read more
1 2 3 4 5