ராபின்சன் குருசோ

ராபின்சன் குருசோ, டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. கடற்பயண ஆசையால் கப்பல் ஏறி பயணித்து, விபத்தில் சிக்கி ஆள் இல்லாத தீவில் தனி ஆளாக ஒதுங்கி, சவால்களைச் சந்தித்து வாழ்ந்த இளைஞன் ராபின்சன் குருசோவின் கதை. பல ஆண்டுகளாக ஏராளமான மக்களின் பெரு விருப்பமாக இருக்கிறது. இந்தக் கதை எளிமையான தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. நீரோட்டம் போன்ற நடை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

காலத்தைச் செதுக்குபவர்கள்

காலத்தைச் செதுக்குபவர்கள், ராம் முரளி, யாவரும் பதிப்பகம், விலை 200ரூ. திரை மேதைகளை அறிவோம் மொழிபெயர்ப்புகளின் வாயிலாகத் திரையுலக உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் ராம் முரளியின் இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இது. திரைத் துறையில் தீவிரமாக இயங்கிய இயக்குநர்களின் வாழ்வை அறிவதன் மூலம் அவர்களது படைப்புகளை நெருக்கமான அணுக உதவும்விதமாக நேர்காணல்களும் கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆன்மிக மற்றும் தத்துவார்த்தக் கண்ணோட்டம் கொண்ட இயக்குநர்கள், அரசியல்ரீதியில் திரைப்படங்களை அணுகியவர்கள், புதிய திரைப்பாணியுடன் வலம்வரும் சமகாலப் படைப்பாளிகள் என மூன்று பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, […]

Read more

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1, தமிழில்: மதுமிதா,சாகித்திய அகாதெமி, பக்.496, விலை ரூ.365. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 34 தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறுகதைகளின் மாந்தர்களை நீங்கள் உங்கள் வீட்டருகே, தெருவில், கடைவீதியில், பொது இடங்களில் சந்திக்கலாம். ஆதரவற்றவர்கள், அனாதைக் குழந்தைகள், ஒருவேளை உணவு கிடைக்காமல் திண்டாடுபவர்கள், அவர்களின் உளவியல்ரீதியிலான சிக்கல்கள் எல்லாவற்றையும் மிகவும் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். எனினும் இக்கதைகளின் ஊடே மனிதநேயமும், பிறருக்காக வாழ்தலும் பிரதானப்படுத்தப்படுகிறது. கிணறு தோண்டியவன் எப்போதோ இறந்து போயிருக்கலாம். ஆனால் அவன் இன்னும் தாகம் கொண்ட வழிப்போக்கர்களுக்கு உயிரளித்துக் […]

Read more

என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்

என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்,  எழுத்திலிருந்து எழுத்தாளரானது – ஆங்கிலத்தில்: ஆங்கிலத்தில் விஜய் சந்தானம், தமிழில் வாஷிங்டன் ஸ்ரீதர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.144, விலை ரூ.120. நூலாசிரியர் தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ – இன் பேரன். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி, நூலாசிரியருக்கு மூளைவாதத் தாக்குதல் ஏற்பட்டது. அதனால் மூளையின் இடது பக்கம் பாதிக்கப்பட்டு, வலது கை, கால் செயலற்றுப் போய்விடுகிறது. பேச முடியவில்லை. எண், எழுத்து எதுவும் நினைவிலில்லை. பிறந்த குழந்தையைப் போல புதிதாக எல்லாவற்றையும் […]

Read more

நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன், ஆங்கில மூலம் உம்பர்ட்டோ ஈகோ, தமிழில் க.பஞ்சாங்கம், அருட்செல்வம் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 128, விலை 125ரூ. இன்று உலகில் புகழ் பெற்ற முதல் இருபது அறிவு ஜீவிகளில் ஒருவர் உம்பர்ட்டோ ஈகோ. நாவலாசிரியர், கட்டுரையாளர், பண்பாட்டாய்வாளர் என, பன்முகத்தன்மை கொண்ட இவர், 30க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். அவரது நுாலிலிருந்து, நான் எப்படி எழுதுகிறேன், நடை, இலக்கியத்தின் சில செயல்பாடுகள், அரிஸ்டாட்டிலின் கவிதையிலும் நாமும், கம்போரேசி ரத்தம், உடல், வாழ்வு, பொதுவுடைமை அறிக்கையின் நடையை […]

Read more

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்,  ஆ.மாதவன், வாலி பதிப்பகம், பக்.160, விலை ரூ.110. மலையாளம், வங்கமொழி, பிரெஞ்ச், ரஷ்யன், இத்தாலி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட 17 சிறுகதைகளைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன். தகழி, மாதவிக்குட்டி, பொன்குன்னம் இல்லியாஸ், கெ.யூ.அப்துல்காதர், மாப்பசான், பால்ஸாக், மாக்சிம் கார்க்கி, பொக்காஷியோ, பிரபாத் குமார் முகர்ஜி ஆகிய புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1956 முதல் 1973 வரை திராவிடன், பகுத்தறிவு, போர்வாள், கண்ணதாசன் ஆகிய சிற்றிதழ்களில் இக்கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொகுப்பில் இடம் […]

Read more

நரகம்

நரகம், டான் பிரவுன், தமிழில் இரா.செந்தில், எதிர் வெளியீடு, பக். 760, விலை 550ரூ. அமெரிக்க எழுத்தாளரான, டான் பிரவுனின், ‘டாவின்சி கோட்’டுக்கு பின் வெளிவந்து, உலக ரசிகர்களை ஈர்த்துள்ளது நரகம். வலுவான கதாபாத்திரங்கள், தந்திரக்குவியலால் பின்னி இருக்கிறார் பிரவுன். ‘தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதை வழிகளும், புராதன உலகின் சதித்திட்டங்களை மூடி மறைத்திருக்கின்றன‘ என, வாசகர்களை நம்ப வைத்து விடுகிறார். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

அரண்மனை

அரண்மனை, தமிழில் இறையடியான், சாகித்ய அகாடமி, விலை 455ரூ. கன்னட எழுத்தாளர் கும்.வீரபத்ரப்பா எழுதிய படைப்புகளில் மிகச் சிறந்த நாவல். இது கன்னட நாவல் உலகின் போக்கையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது. இதில் அரசு விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆளுமை, மக்கள் நம்பிக்கையின் எதிரெதிர்ப் போக்குகள் ஆகியன மிக அழகிய முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. புதுமையான முறையில் மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாவலை, இறையடியான் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 275ரூ. சமஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும், தமிழில் கம்பர் எழுதிய ராமாயணத்துக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. இதுபோல், மாறுபட்ட தகவல்களுடன் வேறு சில ராமாயணங்களும் இருக்கின்றன. பல்வேறு ராமாயணங்களையும் படித்து ஆராய்ந்த தேவி வனமாலி, கேரளாவை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து, அங்கேயே வசித்து வருகிறார். அவர் ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூலை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

காடுகளுக்காக ஒரு போராட்டம்

காடுகளுக்காக ஒரு போராட்டம், சிக்கோ மென்டிஸ், தமிழில் ச. வின்சென்ட், எதிர்வெளியீடு, விலை 120ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023826.html இறுதி சடங்கிற்கு பூக்கள் வேண்டாம். பிரேசிலை சேர்ந்த, சிக்கோ மென்டிஸ் ஆங்கிலத்தில் எழுதி, பேராசிரியர் ச.வின்சென்ட், ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ என, தமிழில் மொழிபெயர்த்த நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இயற்கையை அழிப்போருக்கு, அரசு நிர்வாகம் துணை நிற்பதும், எதிர்ப்பவர்களை கொல்வதும் என்ற உண்மை சம்பவத்தை நூல் விவரிக்கிறது. இயற்கையை காப்பாற்ற போராடி கொல்லப்படும், சிக்கோ […]

Read more
1 2 3 11