வங்கிகள் வழங்கும் சேவைகள்

வங்கிகள் வழங்கும் சேவைகள், M.ராமச்சந்திரன், வசந்த பதிப்பகம், விலை 150ரூ. வங்கியில் உயர் பதவிகளை வகித்தவரும், வங்கி பயிற்சி கல்லூரி பேராசிரியருமான எம்.ராமச்சந்திரன், வங்கிகள் குறித்த பொதுமக்கள் அறிய வேண்டிய தகவல்களை புள்ளி விவரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். இந்த நூலின் விலை 150ரூ. மற்றும் சிறுதொழில் கடன் (:ரூ.100). வியாபாரக் கடன் (ரூ.75), வீட்டுக்கடன் (ரூ70), வாகனக் கடன் (ரூ.60), கல்விக்கடன் (ரூ70), விவசாயக் கடன்(ரூ.60), காசோலைகள் (ரூ120) ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். எல்லாமே, வங்கிப் பணிகள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள […]

Read more

ஃபால்ட் லைன்ஸ்

ஃபால்ட் லைன்ஸ், ஹவ் ஹிடன் ஃப்ராக்சர்ஸ் ஸ்டில் த்ரெட்டன் த வேர்ல்ட் எகானமி, ரகுமாம் ஜி. ராஜன், ஹாப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ், விலை 499ரூ. விரிந்த பார்வையில் உலகப் பொருளாதாரம் சீட்டுக்கட்டுக் கோட்டையைப் போல் 2008-ல் மளமளவெனச் சரிந்த உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை முன்னறிவித்த பெருமைக்குரியவர் ரகுராம்ராஜன். உலகப் பொருளாதாரத்தின் நலிவுற்ற பகுதிகளை சீர்செய்யவில்லை எனில் அதைவிட மோசமான பின்னடைவை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நுகர்வுக் கலாச்சாரத்தையே நம் நாட்டு வளர்ச்சிக்கு ஆதாரமாகக் கொண்டு செயல்படுவது சரியான ஒன்றல்ல […]

Read more

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு, இரா.நடராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 130ரூ. அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும், வாழ்க்கை வரலாற்றையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்த நூல் படம் பிடித்து காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

டிஜிட்டல் பணம்

டிஜிட்டல் பணம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை விரிவாக அலசும் நூல். நிதிச் சமுகத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாக இந்த நூல் புரிய வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 2/8/2017.

Read more

விவசாயியை வாழவிடு

விவசாயியை வாழவிடு, விவசாயின் அழிவு சமூகத்தின் பேரழிவு, மக்கள் அதிகாரம், விலை 10ரூ. விவசாய வருமானத்தைக் கொண்டு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், விவசாயச் சங்கங்கள் முன் வைக்கும் கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு, நிவாரணங்கள் முதலான கோரிக்கைகளால் நிரந்தரத் தீர்வுகள் ஏற்படாது. எனவே, தற்போதைய விவசாயத்தின் மோசமான நிலைக்குக் காரணமாக இருக்கும் அரசின் விவசாயக் கொள்கைகளை மறுபரிசீலனை, செய்ய வேண்டும், நிலச் சீர்த்திருத்தங்கள், பசுமை புரட்சி என்று முன்னெடுத்த திட்டங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், விவசாயம் சார்ந்த தொழில் […]

Read more

பணம் பத்திரம்

பணம் பத்திரம், செல்லமுத்து குப்புசாமி, கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? அந்த சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்?, அதை எப்படி அதிகரிக்கலாம்? என்பது குறித்த பர்சனல் பைனான்ஸ் பற்றி செல்லமுத்து குப்புசாமி எழுதிய நூல். வீடு, தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வது சரியானதா? பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? என்பது குறித்து எளிமையாக விளக்குகிறார். சேமிப்பின் அவசியத்தை விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

முதலீட்டு மந்திரம் 108

முதலீட்டு மந்திரம் 108, நாணயம் விகடன் சி.சரவணன், விகடன் பிரசுரம், விலை 150ரூ. பணத்தை எதில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாகக் கிடைக்கும் என்று விவரிக்கிறது இந்த நூல். ஒருவர் மாதம் ரூ.1000 வீதம் 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கோடீசுவரர் ஆகலாம் என்று கூறுகிறார், இந்த நூலின் ஆசிரியரும், “நாணயம் விகடன்” இதழின் முதன்மை பொறுப்பாசிரியருமான சி. சரவணன். சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறுவதுடன் 108 முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறார். பொருளாதாரம் பற்றிய முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளவும், […]

Read more

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி)

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி), வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 420ரூ. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட “ஜி.எஸ்.டி.” வரி பற்றி முப விவரம் அறிந்தவர்கள் மிகச் சிலரே. ஜி.எஸ்.டி. பற்றி பொதுமக்களிடையே குழப்பங்களும், சந்தேகங்களும் நிலவி வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 501 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை “பொக்கிஷம்” என்ற தலைப்பில் தகவல் களஞ்சியங்களை வெளியிட்டு வரும் வடகரை செல்வராஜ் உருவாக்கியுள்ளார். “ஜி.எஸ்.டி.” பற்றிய சந்தேகங்களை போக்கும் வகையில் 700-க்கும் மேற்பட்ட கேள்வி – பதில்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: […]

Read more

ஜி.எஸ்.டி. ஓர் அறிமுகம்

ஜி.எஸ்.டி. ஓர் அறிமுகம், பாலாஜி பதிப்பகம், விலை 500ரூ. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் எனப்படும் ஜி.எஸ்.டி. 1/7/17 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சரக்குக்கு இந்தியா முழுவதும் ஒரே வரிவிகிதம் தான். இன்னொரு மாநிலத்தில் வாங்கினால் வரி குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனால்தான் ஒரே தேசம் ஒரே வரி எனப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் தவிர எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி பொருந்தும். இந்தச் சட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளை வணிகம் செய்வோர் அனைவருமே தெரிந்து […]

Read more

நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?

நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், விலை 50ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு, 2000 ரூபாய் நோட்டை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியது பற்றி அலசி ஆராய்கிறார், நலந்தா செம்புலிங்கம். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —- கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை, தொகுப்பு சீட் அறக்கட்டளை, விகடன் வெளியீடு, விலை 185ரூ. புத்துணர்ச்சி பெறவும், ஆராக்கியமாகவும் வாழவும் நமது பாரம்பரிய உணவுகள் உதவுகின்றன. அத்தகைய கேப்பை முறுக்கு, சிறுதானிய சத்து உருண்டை, கேழ்வரகு இனிப்பு பணியாரம், […]

Read more
1 2 3 4