வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்

வீட்டில் ஒரு மூலிகை தோட்டம், வை.கண்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 120ரூ. ‘வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருக்கும் வீட்டில் எந்த பகுதியில் எந்த மூலிகையை பயிர் செய்து பயன் பெறலாம்? எப்படி பயிரிட வேண்டும் என்னும் செய்திகளை எளிமையாக விளக்குகிறது இந்நுால். ஒவ்வொரு வீட்டிலும் மூலிகை தோட்டம் அமைப்பதால், சிறு சிறு உபாதைகளுக்காக மருத்துவரை நாடவேண்டிய அவசியமிருக்காது என்ற விழிப்புணர்வை உணர்த்துகிறார் நுாலாசிரியர் கண்ணன். நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை […]

Read more

பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம், மெலின்டா கேட்ஸ்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.344, விலை ரூ.399. மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ், தனது கணவருடன் சேர்ந்து 2000 ஆம் ஆண்டில் பில் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கினார். உலகெங்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவர்களை அதிலிருந்து விடுவிப்பதே இந்த அறக்கட்டளையின் நோக்கம். இந்த அறக்கட்டளைப் பணிக்காக மெலின்டா கேஸ் உலகில் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்த அனுபவங்களை […]

Read more

மதிப்பிற்குரிய மழலைகள்

மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூ மீடியா, விலை 100ரூ. கி.ஆ.பெ. விசுவநாதத்தின் பேத்தியும், மனநல ஆலோசகருமான வெற்றிச்செல்வி, குழந்தைகளுக்காக எழுதி இருக்கும் இந்த நூல், குழந்தைகளுக்கு மட்டும் இன்றி, குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பெற்றோருக்கும் மிக்க பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. தவறு செய்யும் குழந்தைகளை எவ்வாறு திருத்துவது? கதைகளை சொல்லி வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் போன்ற நல்ல தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. குழந்தைகளும் படிக்கும் வகையில் […]

Read more

மதிப்பிற்குரிய மழலைகள்

மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூஸ் மீடியா,  பக்.144, விலை ரூ.100. குழந்தை வளர்ப்பு இப்போது சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளை இயல்பாக வளரவிடாமல் தடுக்கும் கல்விமுறை, செல்பேசி, தொலைக்காட்சி முதலான சமூக ஊடகங்களின் தாக்கம், வேலையின் காரணமாக குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க இயலாத பெற்றோர்கள் எனபல்வேறு சூழல்கள் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. இந்நிலையில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பிறந்தது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளின் மன, அறிவு வளர்ச்சி […]

Read more

ஏழு ராஜாக்களின் தேசம்

ஏழு ராஜாக்களின் தேசம், அபிநயா ஸ்ரீகாந்த், யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.248, விலை ரூ.275. தூத்துக்குடியைச் சேர்ந்த நூலாசிரியர்,கணவரின் வேலை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இரண்டு ஆண்டுகள் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களின் அடிப்படையில், துபாய், ஷார்ஜா, அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன், புஜைரா, ராஸ் அல் கைமா என்ற ஏழு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய நூலை எழுதியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் யார் வேண்டுமானாலும் தொழில் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமீரகக் குடியுரிமை பெற்றவர்களைப் […]

Read more

ராதிகா சாந்தவனம்

ராதிகா சாந்தவனம், முத்து பழனி,  காவ்யா, விலை 270ரூ. 17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான பிரதாப சிம்மனின் அரசவையில் நடனக் கணிகையாக தேவதாசியாக இருந்த முத்து பழனி என்ற பெண், தெலுங்கு மொழியில் படைத்த இந்த நூல், காமம் கொப்பளிக்கும் காதல் இலக்கியமாகப் போற்றப்படுவது ஏன் என்பதை, இந்த நூலில் காணப்படும் உணர்ச்சிகரமான பாடல்களைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. 584 பாடல்களைக் கொண்ட இந்த நூல், முதலில் 1887ல் ஆங்கிலேயர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்டது. சிற்றின்பங்களை மையமாகக் கொண்டு இருந்ததால் தடை […]

Read more

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம், ஜெ.பாஸ்கரன், மணிமேகலைப்பிரசுரம், விலை 100ரூ. சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் சந்தேகமில்லை. சைக்கிள் விட்ட துள்ளலையும், கல்யாணங்களில் ஆனந்தப்பட்டதையும், பெண் பார்த்த அப்பாவித் தனத்தையும், வாழைப்பூ வடை சாப்பிட்ட நாக்கு ரசனையையும், துபாய் அனுபவிப்பையும், லண்டனில் படித்ததையும், அகஸ்தியர் கோவில் அமைப்பையும், அம்மாவின் அரவணைப்பையும், சினிமா மோகத்தையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது இந்நுால். சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் […]

Read more

ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள், தமிழில் எஸ்.ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை புதிய முறையில் எவ்வாறு அணுகி அவற்றுக்குத் தீர்வு காண்பது என்பது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் ஆலோசனைகள் வழங்குவதில் புகழ்பெற்ற தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமர்த்தியின் கருத்துகள் ஏராளம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஒரு சில இடங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், சொற்பொழிவுகள், பேட்டிகள், கேள்வி பதில்கள் என்று பல இடங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட சிந்தனைத் துளிகள் தொகுக்கப்பட்டு, அனைவரும் படிக்கும் வகையில் எளிய முறையில் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more

நிலம் உங்கள் எதிர்காலம்

நிலம் உங்கள் எதிர்காலம் – ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் குறிப்புகள் – சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன், பெரிகாம் பதிப்பகம், பக்.342, விலை ரூ.525. நிலம், வீடு, மனைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும், புரோக்கர்களுக்கும் பயன்படும் நூல். ரியல் எஸ்டேட் தொழில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில், அதைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நிலங்கள், நில ஆவணங்கள் பற்றிய அடிப்படை என்ற முதல் அத்தியாயத்திலேயே நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான மக்களுடைய நம்பிக்கைகளையும் உண்மையான நிலை என்ன என்பதையும் விளக்குகிறார். வில்லங்க சான்றிதழ் என்றால் […]

Read more

ஹோமோ டியஸ்

ஹோமோ டியஸ் – வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு – யுவால் நோவா ஹராரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.494, விலை ரூ.499. வரலாறு என்பதே இதற்கு முன் நடந்தவற்றைப் பற்றிக் கூறுவதாகத்தான் இருக்க முடியும். இந்நூல் நூலின் தலைப்புக்கேற்ப, இனிமேல் நடக்கப் போகின்றவற்றைப் பற்றி பேசுகிறது. உலகமயம், தாராளமயம் உள்ள இக்காலத்தில், உலகின் பழைய கலாசாரம், மதம், சிந்தனை ஆகியவை அதற்கேற்ப மாற வேண்டியதன் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதனால் மாறி வருகிற வாழ்க்கைமுறை, […]

Read more
1 2 3 23