ஒருத்தி இன்னொருத்தி,

ஒருத்தி இன்னொருத்தி, சுப்ரஜா, வாதினி, பக். 568, விலை 599ரூ. நுாலாசிரியர், மாத நாவல் உலகில் கொடி பொறித்து வெற்றியுடன் வலம் வருபவர்! இதில், ஐந்து குறு நாவல்கள் இருக்கின்றன. முதல் நாவலான, ‘வான் கண்டேன்’ ஒரு காதல் கதை. ‘தந்திர பூமி’ – பத்திரிகையாளர் சுதந்திரத்தில் அரசியல் குறுக்கீடு பற்றிப் பேசும். இந்தத் தொகுதியில் உள்ள நாவல்களில் சிறந்தது, ‘பனி விழும் மலர்வனம்!’ ஒரு தொழிலதிபரை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறாள், அந்தப் பெண். கல்யாணம் ஆன பின் தான் தெரிகிறது, அவள் […]

Read more

தம்மம் தந்தவன்

தம்மம் தந்தவன், விலாஸ் சாரங், தமிழில்: காளிப்ரஸாத், நற்றிணை பதிப்பகம், பக்.208, விலை ரூ.260. புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் […]

Read more

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, […]

Read more

கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், விலை 150ரூ. ஒவ்வொரு விநாடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட இளைஞி சோபியாவின் கதையாக எளிய நடையில் நகரும் நாவல். சோபியா யார் எனத் தெரியும் இடத்தில் அறிவியல் புதினமாக புதுமலர்ச்சி பெறுகிறது. கதை என்பதைவிட பாதிக்கப்பட்ட, படுகின்ற பெண்களின் போர்க்குரலாகவே ஒலிக்கிறது. படித்து முடித்ததும் இரக்கமும், ஈனர்கள் மேல் சினமும் ஒரு சேரத் தோன்றுவது நிதர்சனம். நன்றி: குமுதம், 7/8/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

பறையொழிப்பின் தேவை

பறையொழிப்பின் தேவை, வல்லிசை, அழகிய பெரியவன், நற்றிணை பதிப்பகம், விலை 240ரூ. சுப்பிரமணி இரமேஷ் அழகிய பெரியவனின் இரண்டாவது நாவலான ‘வல்லிசை’, பறையொழிப்பின் தேவையை முன்னெடுக்கிறது. சாதிய அடையாளத்துடனே பார்க்கப்படும் பறை இசைக் கருவியானது சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தடையாக இருக்கிறது. அதனால், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் முதலில் பறை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கண்ணியைப் பிடித்துக்கொண்டு இந்நாவல் முன்னேறுகிறது. பறையுடன் தொடர்புடைய ஒரு சமூகத்தின் கசப்பான வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது. தலித்துகளுக்காகப் போராடிய அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உள்ளிட்ட பல […]

Read more

விபரீத ஆட்டம்

விபரீத ஆட்டம், சுப்ரஜா, வாதினி, பக். 128, விலை 120ரூ. நாவல் பேசியிருப்பது சுப்ரஜாவின் திக் திக் திகில் நடனமல்ல, விளையாட்டு; அதுவும் மரண விளையாட்டு. இரட்டை பெண்களில் ஒருத்தி காணாமல் போகிறாள். அவள் தலை மறைந்ததன் ரகசியம் என்ன என்பதை அறிய வரும் அவளின் குடும்பத்தினரை, அடுத்தடுத்து விபரீதங்கள் துரத்துகின்றன. இறுதியில் மர்மம் விடுபடுகிறது. மரணத்திற்கும், மர்ம சம்பவங்களுக்கும் காரணமானதே ஆட்டந்தான் என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. அடுத்தடுத்த சம்பவங்களின் துரத்தலாக கதை அமைந்திருப்பது, இந்நுாலை படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதாக உள்ளது. திரைப்படத்தை […]

Read more

ஆக்கப்படுவதே வாழ்க்கை

ஆக்கப்படுவதே வாழ்க்கை, பிரீத்தி ஷெனாய், தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக்.214, விலை ரூ.235 ஒரு சுயமுன்னேற்ற நூலைப் போன்ற தலைப்பைக் கொண்ட இந்நூல், உண்மையில் சுயமுன்னேற்ற நூல் அல்ல, நாவல். கொச்சினில் உள்ள அங்கிதா என்ற கல்லூரி மாணவி தில்லி ஐஐடியில் படிக்கும் வைபவ் என்பவனிடம் காதல் வயப்படுகிறாள். செல்பேசி இல்லாத அக்காலத்தில் அவனுடன் தொலைபேசியில் பேசுவதே சாதனையாக இருக்கிறது. அங்கிதா பயின்ற கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் அவள் போட்டியிட்டு வெல்கிறாள். பிற கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. […]

Read more

கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், பக்.170, விலை ரூ.150. நிகழ்கால நிகழ்வுகளில் அதுவும் சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுத்திய வலியை எழுத்தின் வழியே அனல் பறக்க நாவலாகத் தந்துள்ளார் நூலாசிரியர். அவரின் முதல் நாவலான இந்தப் படைப்பு ஓர் அறிவியல் புதினம் என்பது கூடுதல் சிறப்பு. அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய விஞ்ஞானி தேவநாதன், பெண் ரோபோ (கண்மணி சோபியா) ஒன்றை உருவாக்கி தமிழ்நாட்டில் உலவ விடுகிறார். கோவை, குன்னூர், கொடைக்கானல் என அது பயணம் செய்கிறது. கூட்டு பாலியல் […]

Read more

நல்கிராமம்

நல்கிராமம், கமலக்கண்ணன் கோகிலன், மணிமேகலைப்பிரசுரம், விலை 250ரூ. இந்த நாவல், நல்கிராமம் என்று தலைப்பிடப்பட்டு இருந்தாலும் தற்போதைய நகரங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பற்றி அதிகமாக பேசும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பொழுதுபோக்காக வெறும் கதையை மட்டும் சொல்லிப்போகாமல், தற்கால நாகரிக உலகில் பாதிக்கப்பட்ட சமூக நலன்கள், மதுவிலக்கு போன்றவை பற்றிய ஆதங்கமான கருத்துகள் கதை நெடுகிலும் வற்புறுத்தப்பட்டு இருக்கிறது. படிக்காத அந்தக் காலத்து பாட்டன் அப்பாவை விட, படித்த தற்காலத்து மக்கள் தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற […]

Read more

வாராணசி

வாராணசி, பா.வெங்கடேசன், காலச்சுவடு, விலை 225ரூ. இந்தியா போன்ற நாடுகளில் வைதீகம் எல்லாவற்றையும் விழுங்கும். புதிய கதைசொல்லலின் உருவத்திலும் வைதீகம் வரும். ‘வாராணசி’ நாவல் வழியாக தன்னைச் சுற்றி ஒரு சுயசிறையைக் கட்டிக்கொண்டிருக்கிறார் வெங்கடேசன். தேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, […]

Read more
1 2 3 55