நானும் என் சூரியனும்

நானும் என் சூரியனும்,  சுப்ர.பாலன், வானதி பதிப்பகம்,  பக்.168, விலை ரூ.150. புலர் காலை நேரத்தில் வானம் பார்க்கும் வழக்கம் பல ஆண்டுகளாய் உள்ள நூலாசிரியரின் உரைநடைக் கவிதை நூல். 2019 மே 11- ஆம் தேதி தொடங்கி 2019 ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரையிலான பதிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. சென்னை, வேலூர், பெங்களூரு, திருச்சி மட்டுமல்ல பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சூரிய தரிசனம் கண்டுள்ளார் நூலாசிரியர். எங்கேயும் ஒரே சூரியன்தான் என்றாலும் அவரது அனுபவங்கள் நாளும் நாளும் புதியன. காலை நேரத்து […]

Read more

சங்கமி

சங்கமி : பெண்ணிய உரையாடல்கள் – தொகுப்பாசிரியர்கள்,  ஊடறு றஞ்சி, புதியமாதவி, காவ்யா, பக்.372, விலை ரூ.400. பெண்கள் சமூகத்தாலும் கூடவே ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. சமகாலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மாறுபடுகின்றன. அதையொட்டி பெண்ணியச் சிந்தனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இலங்கையில் இனப் போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிப் போராடிய பெண்கள், ராணுவத்தால் பாலுறவுத் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், ஆப்கானிஸ்தானத்தில் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளின் தாக்குதலினால் இடம்பெயர்ந்து வேறுநாடுகளில் சென்று வாழும் பெண்கள், சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் […]

Read more

நக்கீரன் இயர்புக் 2019

நக்கீரன் இயர்புக் 2019, நக்கீரன் பதிப்பகம், விலை 160ரூ. சமூக அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமல்லாமல், அறிவுக் கடலில் முத்தெடுக்கும் இதழாக மலர்ந்து மணம் வீசும் நக்கீரனுக்கு, சிகரத்தைத் தொடுமளவிற்கு சிறப்பு சேர்க்கிறது இந்நுால். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல தற்கால நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், விருதுகள், விளையாட்டுகள், உலகச் செய்திகள் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. பொது அறிவு உலகமாகிய இந்நுால், எக்காலத்திலும் மாணவச் செல்வங்களுக்கு பயன் தரும் வகையில் வாழையடி வாழையாக அமைந்துள்ள […]

Read more

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன், தொ.மு.சி.ரகுநாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், விலை 105ரூ. தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் 42 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், அந்தக் குறுகிய காலத்துக்குள் மகத்தான சிறுகதைகளை எழுதி மங்காப் புகழ் பெற்றார் என்பதை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான இந்தப் புத்தகம் சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது…. பிறந்தது முதல் புதுமைப்பித்தன் சந்தித்த சவால்கள், வேதனைகள், அவரது கதைகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகிய அனைத்தும் இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டு இருக்கின்றன. கபாலி, நந்தி, சுக்கிராச்சாரி, கூத்தன் போன்ற […]

Read more

இலக்கிய இணையர் படைப்புலகம்

இலக்கிய இணையர் படைப்புலகம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 175ரூ. கணவர், மனைவி இருவருமே இலக்கியவாதிகளாக இருந்து பல படைப்புகளை வழங்கி இருக்கிறார்கள் என்ற சிறப்பான தகவலை அறிந்து கொள்ள இந்த நூல் வகை செய்து இருக்கிறது. பேராசிரியர் இரா.மோகனும், அவரது மனைவி நிர்மலா மோகனும் ஆக்கிய சிறந்த பல நூல்களுக்கு கவிஞர் இரா.ரவி இணையங்களிலும், வலைப்பூ மற்றும் முகநூலிலும் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார். அந்த மதிப்புரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இரா.மோகன், நிர்மலா மோகன் […]

Read more

கருத்துக் குவியல்

கருத்துக் குவியல், டாக்டர் நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன், முல்லை பதிப்பகம், பக். 168, விலை 150ரூ. நீதித்துறையில் தனி முத்திரை பதித்த நீதியரசரின் சொல்லோவியங்களும் எழுத்தோவியங்களும் அடங்கிய நுல். பல்வேறு சமயங்களில், சட்டம், ஆன்மிகம், இலக்கியம், பெண் உரிமை, பொது நலம், சுற்றுச் சுழல் போன்ற தலைப்புகளில் நீதியரசர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. சட்டத் துறையில் மட்டுமன்றி தான் தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் அரசராக விளங்குவதை படிக்கப்படிக்க உணர முடிகிறது. உதாரணமாக, குழல், யாழ், முழவு இம்மூன்றும், தமிழின் தனிச் சிறப்பான இசைக்கருவிகள். காரணம், தமிழின் […]

Read more

மன அழுத்தமும் ஒரு வரமே

மன அழுத்தமும் ஒரு வரமே, பி.வி.பட்டாபிராம், கொரல் வெளியீடு, விலை 150ரூ. மன அழுத்தம் என்பது ஒரு நோய் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், மன அழுத்தம் என்பது நம்மை ஊக்குவிக்கிறது. ஆகவே இது அனைவருக்கும் அவசியமான ஒன்றே. ஆனால் தகுந்த அளவில் இருக்கும் படி நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான கோணத்தில் சொல்லும்இந்த நூலில், மன அழுத்தம் தொடர்பான அத்தனை தகவல்களும் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் எந்த நிலையில் இருக்கின்றது, அவற்றை சரி செய்து எவ்வாறு என்பது உள்பட […]

Read more

பசும்பொன் களஞ்சியம்

பசும்பொன் களஞ்சியம், தேவரின் சொற்பொழிவுகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா, பக்.656, விலை ரூ.650. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பல கூட்டங்களிலும், தமிழக சட்டமன்றத்திலும் ஆற்றிய 40 உரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்ததும் இந்நூலில் உள்ள பல சொற்பொழிவுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. பிரிட்டிஷாரிடம் இருந்து உண்மையில் நாம் சுதந்திரம் அடையவில்லை என்ற கருத்து […]

Read more

நெஞ்சிருக்கும் வரை

நெஞ்சிருக்கும் வரை…. (நான் சந்தித்த ஆளுமைகள்), ஆர்.எஸ்.மணி, ஆரம் வெளியீடு, விலை: ரூ.180 ஆளுமைகள் முப்பது திண்டுக்கல்லைச் சேர்ந்த இலக்கியச் செயல்பாட்டாளர் ஆர்.எஸ்.மணி தான் வியந்த சமகால ஆளுமைகளைப் பற்றி பேஸ்புக்கில் அவ்வப்போது எழுதிவந்த சிறுகட்டுரைகளின் தொகுப்பு. மூன்று பேர் உட்காரும் அளவுக்குச் சிறிய வீட்டில் வசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் மதுரை நன்மாறன், அவருக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்ஏபி, நாற்பதாண்டுகளாய் எழுத்தும் வாசிப்புமாய்த் தீவிரமாக இயங்கிவரும் பேராசிரியர் அருணன் என்று பொதுவுடைமை இயக்கம் சார்ந்த இலக்கிய ஆளுமைகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் […]

Read more

எங்கள் தாத்தா அறவாணர் அருள்மொழிகள்

எங்கள் தாத்தா அறவாணர் அருள்மொழிகள், அருணன் அறவாணன், தமிழ்க்கோட்டம், விலை 90ரூ. இலக்கியவாதிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரும், நேர்மையின் சிகரமாக வாழ்ந்தவருமான, அறவாணரை நினைவு கூரும் வகையில் பெயரர், பெயர்த்தியர் இந்நுாலை உருவாக்கியுள்ளனர். எங்கள் தாத்தா அறவாணரின் அறமொழி சிந்தனைகள், அமுத யாழினி வாஞ்சையுடன் அழைத்த, ‘தொப்பி’ தாத்தா, அறவாணரின் அயல்நாட்டு பயணங்கள், அறவாணரின் வாழ்வியல், பேராசிரியரின் அரிய பொக்கிஷங்களாகிய நுால்கள் இன்று வரை, அறவாணர் சாதனை விருது பெற்ற சான்றோர்கள், மனைவி தாயம்மாளின், ‘அவர் அன்றி அவள் இல்லை’ உள்ளிட்ட செய்திகள் […]

Read more
1 2 3 56