ஜோதிட சாஸ்திர குறிப்புகள்

ஜோதிட சாஸ்திர குறிப்புகள், செய்யனூர், ஆர்.சுப்பிரமணியன், காளீஸ்வரி பதிப்பகம், விலை 100ரூ. ஜோதிடம் சம்பந்தமான நூல்களில் பெரும்பாலும், சாதாரண மக்களுக்குப் புரியாத பல வார்த்தைகள் இருக்கும் என்ற கோட்பாட்டை மாற்றி, ஜோதிடத்தை மிக எளிய முறையில் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த நூல் எடுத்துக்காட்டாக உள்ளது. அன்றாடம் நாம் கடைபிடிக்க வேண்டிய பல செயல்பாடுகளுக்கு பின்னணியில் உள்ள ஜோதிட சாஸ்திரங்களைக் கொடுத்து இருப்பது, அனைவருக்கும் பயன் அடையும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

சுபயோக சுப முகூர்த்தம் திருமணப் பொருத்த கைடு

சுபயோக சுப முகூர்த்தம் திருமணப் பொருத்த கைடு, எஸ்.அன்பழகன், அன்பு பப்ளிசிங் ஹவுஸ், பக்.384, விலை ரூ.250. திருமணப்பொருத்தம் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திருமணப்பொருத்தங்களான தசவித பொருத்தங்கள், தோஷ சாம்யம், ஜாதகப் பொருத்தம், திருமணத்திற்கு நாள் குறிப்பது போன்றவற்றை எளிய முறையில் ஜோதிடரல்லாதோரும் அறிந்துகொள்ள எழுதப்பட்ட அரிய நூல். ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைக் குறித்தும் அதில் நிற்கும் கிரகங்கள், ஏழாம் ஸ்தானத்தின் மதிப்பு, இந்த ஸ்தானத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை தெளிவு படுத்தியிருக்கும் ஆசிரியர், ஆயுள் ஸ்தானம் குறித்தும் […]

Read more

ஜோதிடக் களஞ்சியம்

ஜோதிடக் களஞ்சியம், கவிஞர் ரா.நக்கீரன், கவிதாலயம், பக்.100, விலை 100ரூ. உங்கள் ஜாதகப் பலன்களை நீங்களே தெரிந்து கொள்ளலாம்’ என்பது, நுாலின் உபதலைப்பு. உதாரணத்திற்கு ஒன்று. ‘ஒருவரது ஜாதகத்தில் சந்திரனும், கேதுவும் சேர்ந்து லக்னத்திற்கு, 2, 6, 8, 12 இடங்களில் காணப்பட்டால், நன்கு ஆராய்ந்து பலன் கூற வேண்டும். ஆயுள் பாவத்தை எட்டாவது இடம் மட்டும் நிர்ணயிப்பதில்லை. 3, 6, 9 இடங்களில் சுக்கிரன் கெட்டிருந்தால், உஷாராகப் பார்க்க வேண்டும். இப்படி, பல பயனுள்ள குறிப்புகள் இந்நுாலில் உள்ளன. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் […]

Read more

23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள்

23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. சூரியன், சந்திரன் உள்ளிட்ட 9 கிரகங்களும், மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரின் உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால் அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்பலன்கள்தான் நடக்கும். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நமது முன்னோர்கள், தோஷ நிவர்த்தி தரும் ஆலயங்கள், பரிகார முறைகளை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருமணத் தடை, குழந்தைப் […]

Read more

ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி

ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி, துரை மலையமான், துரை மலையமான் பதிப்பகம், விலை 22ரூ. மூங்கிற்குடி திருவரங்க அமுதனார் அருளிய ராமாநுஜரின் 108 அந்தாதி அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.   —-   ஆய்வுக்குரிய ஜோதிட நியதிகள், கி.கந்தசுப்பு, மனோன்மணி பதிப்பகம், விலை 240ரூ. ஜோதிடம் என்பது பலிக்கக் கூடியதுதானா, அது அவசியமானதா என்ற கேள்விகளை எழுப்புவோர் பலர். அதற்கெல்லாம் விடையளிக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள்

ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள், டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. ஜோதிடக் கலை பற்றிய சிறந்த நூல் இது. ஜோதிடம் பற்றிய நுட்பங்களை, தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும்படியும் சிறந்த முறையில் எழுதியுள்ளார் டாக்டர் கே.என். சரஸ்வதி. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

சனிபகவானின் பெருமை

சனிபகவானின் பெருமை, ராபர்ட் ஈ.ஸ்வோபோடா, தமிழில்  கீதா ஆனந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக்.272, விலை ரூ.170. சனி துன்பங்களைத் தரக் கூடியவர் என்று கருதப்படுகிறார். சனி தரும் துன்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்று பலர் சோதிடர்களை நாடுகின்றனர். சனி மனிதர்களைப் பாதிப்பதைப் போலவே, மனிதர்களின் நடவடிக்கைகள் சனியின் செயல்களைப் பாதிக்கின்றன என்ற அடிப்படையில்தான் சோதிடர்கள் மனிதர்களுக்குப் பரிகாரங்களைக் கூறுகின்றனர். இந்த நூல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தருகிறது. விக்கிரமாதித்தனை ஏழரை […]

Read more

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம், கருப்பேரி கே.வி.ஆர். கிருஷ்ணசாஸ்திரி, தென்றல் நிலையம், விலை 60ரூ. ஜாதகங்களில் திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றிய நுட்பமான விஷயங்களையும் இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல, மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து டாக்டர் எஸ். ஜீவராஜன் எழுதிய சிறுகதைகள் கொண்ட புத்தகம். சில கதைகள் வியப்படைய வைக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன. பொதுவாகச் சொன்னால், எல்லா கதைகளும் சிந்திக்க வைக்கின்றன. நன்றி: […]

Read more

ஜோதிடவியல்- முதற்பாகம்

ஜோதிடவியல்- முதற்பாகம், கே.கே.பாலேந்தர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஜோதிஷ குருகுலம், பக்.304,  விலைரூ.400. ஜோதிடத்தை முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக படைக்கப்பட்ட நூல் இது. இந்நூலில் முதலில் பஞ்சாங்கம் பாலபாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுகளின் பிரிவுகள், அயனங்கள், ருதுக்கள், மாதங்கள், திதி, நட்சத்திரங்கள், நட்சத்திரங்களின் தன்மைகள் மற்றும் பாதங்கள், ராசி மண்டலம், கரணங்கள், யோகங்கள், ஹோரை, நவக்கிரகங்கள், ராசிகளின் தன்மைகள், தொழில்கள், கிரங்களின் தன்மைகள், காரகத்துவங்கள் அனைத்தையும் சிறப்பாக எளிதாகப் புரியும்படி விளக்கியுள்ளார் ஆசிரியர். இவற்றை பாலபாடமாகக் கற்பித்த பின்னர், லக்னத்தை பற்றியும் லக்னத்தை கணிக்கும் […]

Read more

ஜோதிடவியல் (முதற்பாகம்)

ஜோதிடவியல் (முதற்பாகம்), கே.கே. பாவேந்தர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஜோதிட குருகுலம், பக். 304, விலை 400ரூ. ஜோதிடத்தை முறையாகவும், சந்தேகம் ஏதுமின்றியும் பயில விரும்புவோருக்கு, இந்த நூலை விடச் சிறப்பான ‘கைடு’ கிடைப்பது அரிது என்றே சொல்ல வேண்டும். இன்று ஜோதிடம் பார்க்காதவர்களே கிடையாது என்றே சொல்லலாம். கடவுளை நம்பாத பரம நாஸ்திகர்கள் கூட ரகசியமாக தங்கள் ஜாதகத்திற்கு என்ன பலன் என்று தங்கள் குடும்பத்தவர் மூலம் பார்த்துக் கொள்ளும் காலம்! ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்ள ஒரு தொழில்முறை ஜோதிடரை அணுகாமல் தாங்களே […]

Read more
1 2 3 9