கற்றது விசில் அளவு

கற்றது விசில் அளவு, டாக்டர் ஆர். பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 128, விலை 100ரூ. இந்நுால், பாண்டியராஜன் நடிகராகவும், இயக்குனராகவும் மலர்ந்ததை சொல்லும் சுயசரிதை. ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தன் குடும்பத்தினர் வறுமையில் வாடியதை உருக்கமாகச் குறிப்பிடுகிறார் பாண்டியராஜன். சைதாப்பேட்டையில், ஒரு எளிய குடும்பத்தில், பேருந்து ஓட்டுனரின் மகனாக பிறந்தவர், பாண்டியராஜன். சைதாப்பேட்டை, மாதிரி உயர்நிலைப் பள்ளியில் படித்த போது, அவர் என்.சி.சி.,யில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஒரு ஆண்டு, என்.சி.சி., கேம்ப், சைதையில் அவர்கள் பள்ளிக்கூட வளாகத்திலேயே நடைபெற்றது. கேம்ப் கலை […]

Read more

மலை உச்சியில் மறுபிறப்பு

மலை உச்சியில் மறுபிறப்பு, அருனிமா சின்ஹா, தமிழில் ஆண்டாள் பிரியதர்ஷினி, விலை 140ரூ. ரெயில் பயணத்தின் போது, சங்கிலி திருடர்களுடன் போராடியதால் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இடது காலை இழந்த அருனிமா சின்ஹா என்ற வீராங்கனை, சிகிச்சைக்குப் பிறகு ஊனமுற்ற காலுக்கு செயற்கை கால் பொருத்தி புது வாழ்வு பெற்றதோடு, அந்தக் காலுடன் இமயமலை சிகரம் ஏறி அதன் உச்சம் தொட்ட உண்மையான சாதனை வரலாறு. அவரது வார்த்தைகளால் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் இந்த […]

Read more

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி, இராம்பொன்னு, சர்வோதய இலக்கிய பபண்ணை, விலை 200ரூ. சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை சுய சரிதையாக தானே கூறி இருந்தாலும், அதில் இல்லாத தகவலான பகத் சிங்கை காப்பாற்ற காந்தியடிகள் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் சான்றாதாரங்கள் போன்றவற்றைத் தருவதன் மூலம் இந்த நூல் வித்தியாசமாக உள்ளது. தீண்டாமை ஒழிப்பு, சமயநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி காந்தியடிகள் ஆற்றிய அரும்பணிகளை அழகாகவும் சரளமாகவும் தந்து இருப்பதால் அவற்றை இளைஞர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு […]

Read more

ஒரு துணைவேந்தரின் கதை

ஒரு துணைவேந்தரின் கதை, தன் வரலாறு – பாகம் -3, சே.சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,பக்.512, விலை ரூ.400. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராக இருந்த நூலாசிரியரின் தன் வரலாற்று நூலின் மூன்றாம் பாகம் இந்நூல். அவருடைய ஆராய்ச்சிப் படிப்புக்காக கனடா சென்றது, ஆராய்ச்சிப் படிப்பு முடித்து சென்னைக்குத் திரும்பி வந்து கிண்டி பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியர் பதவி, முதுநிலைப் பேராசிரியர் பதவி வகித்தது, இயக்குநரானது வரையிலான நூலாசிரியரின் அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. கனடாவில் இருந்து சென்னைக்கு வந்த பின்பு வேலை கிடைப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அப்போது […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலை 400ரூ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய சே.சாதிக், தனது விரிவான வரலாற்றை ஏற்கனவே இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். தற்போது மூன்றாம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், அவர் மேல் படிப்புக்காக சென்னையில் இருந்து கனடா நாட்டுக்கு சென்றது முதல் நடைபெற்ற நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. கனடாவில் அவரது வாழ்க்கை, அவ்வப்போது விமான நிலையங்களில் சந்தித்த அனுபவங்கள், சென்னை வந்து பதவி ஏற்றது. பல தடைகளையும் தாண்டி வெற்றி பெற்ற […]

Read more

ஒரு சாமானியனின் சாதனை

ஒரு சாமானியனின் சாதனை, எஸ்.கே. இளங்கோவன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. ‘அரவணைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சமுதாய தொண்டாற்றி வரும் இந்த நூலின் ஆசிரியர், தான் அடிமட்ட நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி உன்னதமான இடத்துக்கு வந்தது எப்படி என்பதை அழகாக பதிவு செய்து இருக்கிறார். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் நல்ல உந்துசக்தியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 27/2/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

ஜீவா நாராண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும்

ஜீவா நாராண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும், முகம் மாமாணி, முல்லை பதிப்பகம், விலை 90ரூ. பத்திரிகை உலகின் பிதாமகராக, இலக்கியத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த, ஜீவா நாராண.துரைக்கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து, 1986 முதல் 1988 வரை எழுதப்பட்ட சுயசரிதையின் தொகுப்பு. பாரதியார், சுப்ரமண்ய சிவா, காமராஜர், ராஜாஜி என்று தான் சந்தித்த பல பிரபலங்கள் குறித்து அவர் சொல்லியிருப்பவை சுவாரஸ்யமான விஷயங்கள். நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று,  கவிக்கோ ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், பக்.216. விலை ரூ.150. இஃது ஒரு தன் வரலாற்று நூல். நூலாசிரியரின் அறுபதாண்டு தமிழ்ப்பணியில் அவருக்கு நேரிட்ட சில நிகழ்வுகளைப் பற்றிய, அவர் சந்தித்த சில மனிதர்களைப் பற்றிய தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று எம்.ஜி.ஆர். கையால் இந்நூலாசிரியர் பொற்பதக்கம் பெற்ற நிகழ்வோடு தொடங்குகிறது இந்நூல். மதுக்கூர் என்ற சிற்றூரில் நடந்த நூலாசிரியரின் திருமணத்திற்கு ம.பொ.சி. நேரில் வந்து வாழ்த்திப் பேசியது, நூலாசிரியர் ஒரத்தநாடு […]

Read more

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை

  வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை,  இஸ்மத் சுக்தாய், தமிழில்: சசிகலா பாபு,  எதிர் வெளியீடு, பக்.404, விலை ரூ.400. இஸ்மத் சுக்தாய் 1911இல் உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். உருது மொழியில் அவர் பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார். பெண்ணியச் சிந்தனைகள் வளராத அக்காலத்திலேயே அவர் சுதந்திரமான கருத்துகளை உடையவராக இருந்திருக்கிறார். அவர் உருதுவில் எழுதிய காகஸி ஹை பைரஹன் என்ற சுயசரிதையின் தமிழ் வடிவம் தான் இந்நூல். வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்தியபோது, அதை மறுத்து பிடிவாதமாக உயர் கல்வி கற்கச் சென்றிருக்கிறார். இஸ்மத் சுக்தாய் தொடக்க […]

Read more

என்னை நான் சந்தித்தேன்

என்னை நான் சந்தித்தேன், ராஜேஷ்குமார்,அமராவதி, பக்.504, விலை ரூ.390. நூலாசிரியர் ஓர் எழுத்தாளராக எப்படி பரிணாமம் அடைந்தார் என்பதை ஒரு விறுவிறுப்பான நாவலுக்கு இணையாக வாசிக்க வைக்கும் நூல். எழுத்துலகில் எதிர்நீச்சல் போட்டதை எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி நூலாசிரியர் சொல்லியிருப்பதால், யதார்த்தம், சுவாரசியத்துக்குக் குறைவில்லை. க்ரைம் நாவலில் மட்டுமின்றி, சமூக நாவல்களும் எழுதி குவித்துள்ள நூலாசிரியர், தனக்கு நேர்ந்த அவமானங்களையும், வெகுமானங்களையும் அவருக்கே உரிய நடையில் தந்துள்ளார். குமுதம் எஸ்.ஏ.பி., ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், சாவி, இதயம்பேசுகிறது மணியன் போன்ற எழுத்துலக […]

Read more
1 2 3 10