கேரக்டர்

கேரக்டர் (பாகம்-1), கலைஞானம், நக்கீரன் வெளியீடு, பக்.336, விலை ரூ.280, (பாகம்-2) பக். 328, விலை: ரூ.280. திரைப்பட கதாசிரியர், நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறன் கொண்ட கலைஞானம் எழுதிய திரையுலக அனுபவங்களின் தொகுப்பு. சென்னை பாண்டிபஜாரில் கார் ஓட்டுநர்கள் 4 பேர் சினிமா கனவுகளுடன் இருந்தார்கள்.அவர்களின் கனவு நிறைவேறியதா… என்பதை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். அந்த 4 பேரில் ஒருவரான பாலகிருஷ்ணன் என்கிற கலைஞானம். கே.பாக்யராஜின் “இது நம்ம ஆளு' படத்தில் ஐயர் வேடத்தில் நடித்து […]

Read more

வேணுவனவாசம்

வேணுவனவாசம், சுகா, தடம் பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. திருநெல்வேலியின் ஆதி பெயர், வேணுவனம்’ என்பது இந்நுாலின் பெயராய் இடம்பெற்றுள்ளது. கதை மற்றும் கட்டுரை வடிவில், நெல்லையின் வட்டார மொழி நடையிலேயே எழுதியுள்ளார் ஆசிரியர் சுகா. இதில் முத்திரை பதித்துள்ள, ‘ராயல் டாக்கீஸ்’ சிறுகதை, ‘விருட்சம்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியது. அந்த கதையின் முதலும், முடிவும் படிக்கும்போதே வலியைத் தருவதாக அமைந்துள்ளது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029578.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு, பேரறிஞர் அண்ணா, அர்ஜித் பதிப்பகம், விலை 110ரூ. தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா எழுதிய சிறுகதைகளைத் தொகுப்புகளில் ஒன்றாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பரிசு என்ற தலைப்பு கொண்ட இந்தத் தொகுப்பில் அண்ணா எழுதிய 18 சிறுகதைகள் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் அண்ணாவின் சமூகக் கண்ணோட்டத்தைக் காண முடிகிறது. தவளையும் மனிதனும் என்ற கதை போன்ற சில கதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்து இருக்கின்றன. அண்ணாவின் எளிய நடை, புத்தகத்தில் உள்ள அனைத்துக் […]

Read more

அக்பர் பீர்பல் கதைகள்

அக்பர் பீர்பல் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், ஒவ்வொரு நூலும் விலை 160ரூ மன்னர் அக்பரின் அரசையில் இருந்த பீர்பல், தனது சமயோஜித புத்தியால் தீர்வு கண்ட பல சம்பவங்கள், கதைகள் ரூபமாக பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றன. அந்தக் கதைகளில் 53 கதைகளைத் தேர்ந்தெடுத்து, சிறுவர்கள் முதல் அனைவரும் ரசித்துப் படிக்கும் வகையில் ஆசிரியர் தந்து இருக்கிறார். இந்த நூலின் ஆகிரியர், முல்லாவின் குறும்புக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், நகைச்சுவைமன்னன் தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகிய நூல்களையும் […]

Read more

உதிரிகளின் கதைகள்

  உதிரிகளின் கதைகள், வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.130 புலம்பெயர்ந்த மக்களின் துயரம் சொல்லில் அடங்காதவை. அவர்களின் செருப்புக்குள் நின்று பார்த்தால்தவிர அதை நாம் முற்றிலும் உணர்ந்துவிட முடியாது. அதைப் பகுதியளவேனும் உணர்த்திவிடும் எத்தனத்தில் உதிக்கிறவைதாம் புலம்பெயர் மக்கள் குறித்த படைப்புகள். நிரூபாவின் ‘இடாவேணி’ அப்படியான கதைகளைத்தான் சொல்கிறது. நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாம்பு இல்லாத பாம்பாட்டி

பாம்பு இல்லாத பாம்பாட்டி, ஸாய் விட்டேகர், அ.குமரேசன், புக்ஸ் பார் சில்ட்ரன், பக்.32, விலை 30ரூ. படிக்கத் தெரியாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு, கதை கேட்பது மிகவும் பிடித்தமானது. வாசிக்கத் தெரியும் போது, அவர்களை வசீகரிக்கக்கூடியது படக்கதைகள். அந்த வகையில், இந்த ஊர்வன பற்றிய காட்டின் கதை, அவர்களை கவரும். ஒற்றுமை உணர்வையும் வளர்க்கும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மகிழம்பூ மணம்

மகிழம்பூ மணம், ஜயந்த் காய்கிணி, கே.நல்லதம்பி, காலச்சுவடு வெளியீடு, பக். 136, விலை 150ரூ. இந்திய மாநிலங்களுக்குள், நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியாக, யாளி அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இலக்கிய பங்களிப்பின் வழியாக இந்த நூல், கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணியை, இந்த நூலில் உள்ள, 11 சிறுகதைகளும் செய்யும், அவை, வாசகர்களின் வாசிப்பை விசாலப்படுத்தும்.   நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

கடல் நிச்சயம் திரும்ப வரும்

கடல் நிச்சயம் திரும்ப வரும், சித்துராஜ் பொன்ராஜ், வம்சி புக்ஸ், பக். 240, விலை 240ரூ. புலம்பெயர் தமிழர்களின் எழுத்துக்கள், தமிழக தமிழர்களின் எழுத்துக்களில் இருந்து மாறுபடுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரை தாயகமாகக் கொண்ட சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய, 18 சிறுகதைகள் இதில் உள்ளன. கதைக்களம் வெவ்வேறாக இருந்தாலும், எல்லா முகங்களிலும் நேசம் அப்பிக்கிடக்கிறது. நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030089.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

இதிகாசம்

இதிகாசம், எஸ்.திவாகர், கே.நல்லத்தம்பி, காலச்சுவடு, பக். 128, விலை 150ரூ. கன்னடத்தில், 1970களில் எழுதப்பட்டு, பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாகி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் சிறுகதைப் போட்டிகளில், முதல் பரிசு பெற்ற, 9 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. சிறுகதைகளின் நிஜம், கனவு சார்ந்த பொருட்களின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வல்லினம் பரிசுக் கதைகள்

வல்லினம் பரிசுக் கதைகள், வல்லினம் பதிப்பகம், விலை: ரூ.130 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பத்திரிகை ‘வல்லினம்’, கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தும் சிறுகதைப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இவை. குடும்ப அமைப்புகள், அதிகாரத் திணிப்புகளால் சிறைபட்டுக் கிடக்கும் வாழ்வைச் சுதந்திரமாக்க விரும்பும் மனிதர்கள் கதைகளின் நாயகர்களாக இருக்கிறார்கள். மலேசிய தமிழ் இலக்கியத்தின் புதிய முகங்கள் அந்த மண்ணிலிருந்து எதைப் பதிவுசெய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இத்தொகுப்பு உதவுகிறது. நன்றி: தமிழ் இந்து, 15/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more
1 2 3 69