நினைவின் பயணம்

நினைவின் பயணம் (கட்டுரைகள்-கவிதைகள்), ஜே.ஜி.சண்முநாதன், விஜயா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120 கோவை கங்கா மருத்துவமனையின் தலைவரான நூலாசிரியர், தனது 82 – ஆம் வயதில் மகாகவி பாரதியின் மானுடம் நேயம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற சிறப்புக்குரியவர். அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மிக எளிமையாகவும், உலகியல் சார்ந்தும் அவர் வெளிப்படுத்திய சிறந்த கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் மிளிர்கிறது. தேசம் அடிமைப்பட்டிருக்கும் காலத்தில்மக்கள் உறங்கிக் கிடப்பது இயற்கை. அது அடிமைப்பட்டதின் விளைவு. ஆனால் விடுதலை […]

Read more

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம், ஜெ.பிரான்சிஸ் கிருபா, படிகம் வெளியீடு, விலை 150ரூ. ரசனை முள் அங்கியை அவிழ்த்தெறிந்துவிட்டு நிர்வாணமாகி துண்டுத் துண்டாகி கொதிக்கும் சாம்பாரில் குதித்து கும்மாளமிட்ட கிழங்குகள் விளைந்த வயல்களிலிருந்து இமெயில்கள் வந்தவண்ணமிருக்கின்றன நடனம் எப்படி இருந்தது எனக் கேட்டு விருந்துண்டு பசியாறிய விருந்தாளிகள் பதிலனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் மிக மிக ருசியாக இருந்ததென்று. கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் […]

Read more

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்,  தமிழில் பா. இரவிக்குமார், ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150ரூ, கொரியக் கவிதைகள் உதிரும் இலைகளின் பாடல் என்ற சீன மொழிபெயர்ப்புக் கவிதை நூலின் மூலம் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமானவர் ப. கல்பனா. அவரும் கவிஞர் பா.இரவிக்குமாரும் சேர்ந்து கொரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பாலான கவிதைகளின் தொனி மென்மையாகவும் சில கவிதைகள் வலியை உரக்கப் பேசுபவையாகவும் உள்ளன. இந்தக் கவிதைகளில் பனி திரும்பத் திரும்ப வருகிறது. நாம் அறியாத ஒரு நிலப்பரப்பை இந்தக் கவிதைகள் […]

Read more

திருக்குறள்களே கவிதையாய்

திருக்குறள்களே கவிதையாய், கோவூர் தணிகை, மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் உரைநடையில் விளக்கம் எழுதி இருக்கும் நிலையில், இந்த நூலில் ஆசிரியர், திருக்குறளுக்கு கவிதை வடிவில் விளக்கம் அளித்து இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. திருக்குறளின் 133 அத்தியாயங்களில், அத்தியாயத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் 133 குறள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிமையான அதே சமயம் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணம் கவிதைகளில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துக் கவிதைகளும் திருக்குறளின் பரிணாமத்தை மேலும் விரிவுபடுத்தி இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]

Read more

குழந்தை வரைந்த காகிதம்

குழந்தை வரைந்த காகிதம், கவிஞர் இளவல் ஹரிஹரன், ஓவியா பதிப்பகம், வலை 100ரூ. தெலுங்கில் சமீப காலமாக நானிலு என்னும் நான்கு வரிக் கவிதை வடிவம், கொடி கட்டிப் பறக்கிறது. இதற்குத் தமிழில் தன் முனைக் கவிதைகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது குழந்தை வளர்ந்த காகிதம் என்ற தலைப்பில் தன் முனைக் கவிதை நூலை முதன்முறையாகப் படைத்து வெளியிட்டு இருக்கிறார் கவிஞர் இளவல் ஹரிஹரன். பத்திரப் பதிவுத்துறையில் மிக உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர், வாழ்வில் தான் கண்டதையும், உணர்ந்ததையும் […]

Read more

அகயாழின் குரல்

அகயாழின் குரல், கனகா பாலன், நண்பர்கள் பதிப்பகம், பக்.106, விலை 120ரூ. நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே சுற்றி சுழன்று வருகின்றன. ‘பகிர்தல் ஏதுமில்லையாயினும் உச்சரித்துக் கொண்டே இருப்பேன்… உன் பெயரை உயிர் வாங்கும் நச்சரிப்பென்று வெறுத்து விடாதே…!’ என்ற கவிதையில், இரண்டு உள்ளங்களுக்கு இடையே உள்ள திகட்ட திகட்ட ததும்பும் அன்பின் அங்கலாய்ப்பை உணர்ச்சி பொங்க சொல்கிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 14/7/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

புவி எங்கும் தமிழ்க் கவிதை

புவி எங்கும் தமிழ்க் கவிதை, தொகுப்பாசிரியர்: மாலன், சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ.160. புவியின் எட்டுத் திக்குகளிலிருந்தும் பெறப்பட்ட கவிதைகள் சிறப்பாக இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நார்வே, இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை பன்முகம் கொண்டதாகவும், அதே நேரத்தில் விரிவின் பொருட்டு செறிவைத் தவறவிடாமல் செழுமை வாய்ந்ததாகவும் ஆக்க நூலாசிரியர் மேற்கொண்ட முயற்சியை கவிதைகளைப் படிக்கும்போது உணர முடிகிறது. இலங்கையில் வசிக்கும் கவிஞர் அபார் தாள் […]

Read more

அகயாழின் குரல்

அகயாழின் குரல், கனகா பாலன், நண்பர்கள் பதிப்பகம், விலை 120ரூ. நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே சுற்றி சுழன்று வருகின்றன. ‘பகிர்தல் ஏதுமில்லையாயினும் உச்சரித்துக் கொண்டே இருப்பேன்… உன் பெயரை உயிர் வாங்கும் நச்சரிப்பென்று வெறுத்து விடாதே…!’ என்ற கவிதையில், இரண்டு உள்ளங்களுக்கு இடையே உள்ள திகட்ட திகட்ட ததும்பும் அன்பின் அங்கலாய்ப்பை உணர்ச்சி பொங்க சொல்கிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மாத்தி யோசி கவிதைகள்

மாத்தி யோசி கவிதைகள், மில்டன், விலை 89ரூ இளம் கவிஞர் மில்டன் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்கிறார் காந்தி. இன்றோ அந்தக் கிராமங்களில் தான் வாழ எவருமில்லை, உன் தலைமுறையை மருத்துவனாக்கு பொறியாளனாக்கு அதற்கு முன் சாதி வெறி இல்லா மனிதனாக்கு பிறருக்கு உதவும் மனிதநேயனாக்கு என்பன போன்ற நெஞ்சை அள்ளும் கவிதைகள். மறுக்கப்பட்ட வாழ்வை அளித்தவன் நீ மறைக்கப்பட்ட வரலாற்றை உரைத்தவன் நீ வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்புச் சட்டை நீ எந்த வேள்வியையும் சட்டை செய்யாத நெருப்புச் […]

Read more

இறகென இருத்தல்

இறகென இருத்தல், செ.கார்த்திகா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 60ரூ. மெல்லிறகாய் வருடி, கனமான பதிவுகளை மனதுக்குள் எழுதும் யதார்த்த கவிதைகள். குழந்தை முதல் தெய்வம் வரை, பாசம் முதல் நேசம் வரை அத்தனையும் இங்கே அவரவர் கனவுக்கும் கற்பனைக்கும் ஏற்ற நடையிலேயே நகர்வது நளினம். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 50