தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள்

தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள், ச.சுபாஷ் சந்திரபோஸ். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., பக். 214. விலை ரூ.175. தொல்காப்பிய எழுத்தியல் தொடர்பான பல கேள்விகளுக்கு இந்நூல் விளக்கமளிக்கிறது. எழுத்தியலில் உள்ள பல சொற்களுக்குத் தீர்வு கூறுகிறது. தமிழ் எழுத்துகளின் வைப்பு முறை, உயிர்மெய், தன்னொற்று மிகுதல், இனவொற்று மிகுதல், எழுத்துகளின் இழப்பு, புணர்ச்சியும் உறழ்ச்சியும், புணர்ச்சி விதி இல்லாப் புணர்ச்சிகள், எழுத்துப் பேறும் சாரியையும், அண்ணவினம் ஆதல் ஆகிய ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. உலகிலுள்ள, எழுத்துள்ள மொழிகள் அனைத்திலுமே ஒன்றிற்கு ஒன்று வரி […]

Read more

தொல்காப்பியம் சங்க இலக்கியம்

தொல்காப்பியம் சங்க இலக்கியம், உரைமேற்கோள் உரைகள், சோ.ராஜலட்சுமி; காவ்யா, பக்.280. விலை ரூ.280. பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்டன. அவ்வாறு பதிப்பிக்கப்பட்ட நூல்களை நாம் புரிந்து கொள்வதற்கு உதவுபவர்கள் உரையாசிரியர்கள். அவ்வாறு உரை எழுதுபவர்கள், உரையை விளக்கத்துக்காக பிற நூல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார்கள். அவ்வாறு எடுத்துக்காட்டும் நூல்களில் உள்ள சில பகுதிகளுக்கு உரையும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றைத் தொகுத்து இந்நூல் ஆராய்ந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கியம் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு மாறுபட்டு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் இந்நூல் விளக்குகிறது. இந்நூல் தமிழ்ப் புலமை […]

Read more

தமிழ் மொழி அடிப்படைகள்

தமிழ் மொழி அடிப்படைகள், முனைவர் பிரகாஷ்.வெ, வேலா வெளியீட்டகம், விலை 40ரூ. மொழி ஆளுமைக்கு! பிழையின்றித் தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் பல நுல்கள் வெளிவந்திருக்கின்றன. இருந்தாலும் கால மாற்றத்துக்கு ஏற்பத் தகவமைக்கப்பட்ட நூல்கள் தேவைப்படுகின்றன. தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆங்காங்கே மொழியில் தடுமாறும் ஆய்வாளர்கள் வரை தமிழ் மொழியை எளிமையான முறையில் பயில தமிழ் மொழி ஒலி அடிப்படைகள் கைகொடுக்கும். நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், பேராசிரியர் இரா.மோகன், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. நெஞ்சை அள்ளும் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பல்வேறு பகுதிகளைச் சுட்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நயம், காப்பியத்திறன் என அனைத்தையும் எளிய தமிழில், இனிய நடையில் பதம் பிரித்து, இதமாய்த் தந்திருக்கும் புத்தகம். படிக்கப் படிக்க சிலம்பின் சிறப்பு மனதுக்குள் மகுடமாய் உயர்கிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027591.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும்

பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும், ப. திருஞானசம்பந்தம், நெய்தல்பதிப்பகம், பக்.228, விலை ரூ.200. யாப்பிலக்கணத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட எட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ் யாப்பியல் குறித்த அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில், பதினெண்கீழ்க்கணக்கு யாப்பியல் ஆய்வு வரலாறு, திருக்குறளில் யாப்பியல் குறித்து அயலக, தமிழக அறிஞர்களின் ஆய்வுகள், கீழ்க்கணக்கு இலக்கியங்களில் உள்ள புதுவகையான இன்னிசை வெண்பாக்கள், தொடை நலன்கள், தமிழில் உள்ள ஓரெதுகையின் வரலாறு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பழந்தமிழ் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் முதலியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. களவழி நாற்பதில் இடம்பெறுகின்ற […]

Read more

கழகத் தமிழ் இலக்கணம்

கழகத் தமிழ் இலக்கணம், கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., பக்.352, விலை ரூ.265. ‘மொழியின் தன்மையை வரையறுத்துக் கூறுவது இலக்கணம் ஆகும். ஒரு மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் இலக்கணம் பயில்வது அவசியமாகும்‘. அந்த வகையில் இந்நூல் தமிழ் மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் உதவும்விதத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து பயிலும் மாணவர்கள் கூட இலக்கணம் என்றாலே சிறிது தயக்கம் கொள்வர். இந்நூலில் எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி ஆகிய ஐந்து இலக்கணங்களும் இன்றைய தலைமுறை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் […]

Read more

கழகத் தமிழ் இலக்கணம்

கழகத் தமிழ் இலக்கணம், கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., பக்.352. விலை ரூ.265. மொழியின் தன்மையை வரையறுத்துக் கூறுவது இலக்கணம் ஆகும். ஒரு மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் இலக்கணம் பயில்வது அவசியமாகும். அந்த வகையில் இந்நூல் தமிழ் மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் உதவும்விதத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து பயிலும் மாணவர்கள் கூட இலக்கணம் என்றாலே சிறிது தயக்கம் கொள்வர். இந்நூலில் எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி ஆகிய ஐந்து இலக்கணங்களும் இன்றைய தலைமுறை மாணவர்கள் புரிந்துகொள்ளும் […]

Read more

தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு

தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு, சந்தியா பதிப்பகம், மு.கஸ்தூரி, பக்.200, விலை ரூ.180. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிற்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் எனப் பலவற்றிலும் யாப்பியல் தொடர்பான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன- மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அவ்வரிசையில் இந்நூலையும் சேர்க்கலாம். இதிலுள்ள ஒன்பது கட்டுரைகளும் யாப்பியல் தொடர்பானவை. செய்யுளில் அமைந்த ஓசை நயத்துக்கு யாப்பமைப்பு எந்த விதத்தில் உதவுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது இந்நூல். தமிழில் உள்ள இலக்கியங்களின் யாப்பியலை ஆராய்வதன் மூலம் அந்தந்த கால யாப்பியல் வளர்ச்சிகளை வரலாற்று நோக்கில் […]

Read more

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.296, விலை ரூ.200. தொல்காப்பியம்தான் தொன்மையான முதல் இலக்கண நூலாகத் திகழ்கிறது. எம்மொழி இலக்கணத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு மட்டுமே உண்டு. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் அதிகாரங்களைக் கொண்டது தொல்காப்பியம். இந்நூலிலும் முப்பெரும் அதிகாரங்கள் உள்ளன. எழுத்திலக்கணத்தில், எழுத்துகள் உருவாக்கம், எண்ணிக்கை, மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மாத்திரை, போலி முதலியவற்றைக் கூறும் எழுத்தியல் பற்றியும்; பகுபதம், பகாபதம் போன்ற பகுபத உறுப்புகள், உறுப்பிலக்கணம் போன்றவற்றைக் கூறும் பதவியல் பற்றியும்; எழுத்துப் புணர்ச்சி […]

Read more

மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ ‘காபி’க்கு தமிழில் என்ன பொருள்; முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி ஆகியவற்றில் வரும், ‘ஆளி’ எதைக் குறிக்கிறது; நள்ளிரவு என்ற சொல்லில், ‘நள்’ என்பது என்ன? உள்ளிட்ட பல சொற்களுக்கு இலக்கணம் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர்,16/7/2017.

Read more
1 2 3 5