திருவாசகப் பயணம்

திருவாசகப் பயணம்: முதல் சுற்று (சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல் விளக்கவுரை)- அ.நாகலிங்கம், திரு.வி.க. பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திருவாசக விளக்கவுரை வகுப்புகள் நடத்தியதன் தொடர்ச்சியாக நூலாசிரியர், திருவாசகத்தில் உள்ள சிவபுராணம், கீர்த்தித் திருவகவல் ஆகிய இரு அகவல்களுக்கு மட்டுமான விளக்கவுரையை முதல் சுற்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். சிவபுராணம் 62-ஆவது வரியில் இடம்பெறும் “மாசு அற்ற சோதி” என்பதற்கு, “பெளதிக ஒளிகள் மலர்வதற்கு விறகு, எண்ணெய், திரி, கம்பிகள், கண்ணாடிக் குமிழ் (பல்ப்) முதலிய ஏதேனும் ஒரு மாசு பற்றுக்கோடாக […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 164, விலை 170ரூ. இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள். மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நுால் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு […]

Read more

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள்

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள், ஸ்ரீதர் சாமா, விருட்சம் வெளியீடு, விலை 90ரூ. காஞ்சி மகா பெரியவரின் கருணை மொழிகளையும் பக்தர்கள் வாழ்வில் அவர் நடத்திய அற்புதங்களையும் சொல்லும் புத்தகம். பலருக்கும் தெரிந்த, தெரியாத விஷயங்களின் தொகுப்பு. படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. பண்பும் பக்தியும் மனதுக்குள் மலர்கிறது. நன்றி : குமுதம், 25/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கந்தன் கதை

கந்தன் கதை, இரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலை 450ரூ கந்தபுராணம் என்ற பெயரைக் கேட்டவுடன், புராணம் எல்லாம் நமக்கு எதற்கு என்று தள்ளிவிடும் இளைய தலைமுறையினரும், கந்தனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இந்தப் புத்தகம், நாவல் வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. கந்தபுராணத்தில் விடுபட்டுப் போன பக்கங்களைக் கற்பனை கலந்து, அவற்றை கந்தபுராணத்துடன் இணைத்து இந்த நாவலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார். இந்த நாவலில் ஆனமீகக் கருத்துகளை சொல்வதோடு, அவற்றை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, சம்பவங்களைச் சொல்லி இருப்பதால் படிக்க ருசிகரமாக […]

Read more

சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 120ரூ. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதிதாக மாலை போட்டு, விரதமிருந்து அய்யப்பனை காணத் தயாராகியிருப்பர். இவர்களுக்கு எல்லாம் சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றி அவர்களது குருசாமி நிறைய சொல்லியிருந்தாலும், அதையும் தாண்டி மனதில் பல சந்தேகம் இருக்கும். எல்.முருகராஜ் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால், புத்தகம் முழுவதும் பல வித்தியாசமான வண்ணப் படங்கள் பொக்கிஷம் போல நிறைந்து உள்ளன. வரும், 2020 மகர விளக்கு தரிசனம் வரை என்ன விசேஷம், எப்போது […]

Read more

108 வைணவ திவ்ய தேசங்கள்

108 வைணவ திவ்ய தேசங்கள், பா.பெருமாள், சங்கர் பதிப்பகம், பக். 680, விலை 600ரூ. பக்தியில் ஆழ்ந்து, பரந்தாமனைப்பாடி பரவசம் அடைந்த ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்கள், திவ்ய தேசங்கள் எனப்படும். வைணவ திவ்ய தேசங்கள் 108. பூத உடலோடு காணும் பேறு பெற்ற தலங்கள் 106. இந்த, 106 திவ்ய தேசங்களையும் வழிபட்ட பின், பெருமாளே வந்து மற்ற இரண்டு திவ்ய தேசங்களையும் தரிசனம் செய்வித்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் என்பது தலையாய வைணவ கொள்கையாகும். 107 திருப்பாற்கடல்; 108 திருப்பரமபதம் ஆகும். […]

Read more

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை, சு.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், பக்.496, விலை ரூ.400. வான்மீகத்தில், இராம – இராவண யுத்தத்தின்போது, போரின் நிலையைக் காண வருகின்றார் மாமுனிவர் அகத்தியர். போரினால் சோர்வும் துயரமும் கொண்டிருக்கும் இராமனுக்கு அவர் உபதேசித்த வெற்றி மந்திரம்தான் “ஆதித்ய ஹ்ருதயம்”. சூரியதேவனின் பலத்தையும் ஆற்றலையும் பெற்றுத் தரும் இந்த மந்திரத்தை நாளும் மும்முறை ஓதினால், வெற்றி உறுதி என்று அருளிச் செய்கிறார் அகத்திய முனிவர். சிதம்பரத்தில் தமிழாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் சு. அரங்கநாதன். விபத்தில் […]

Read more

நபிகளார் வரலாறு

நபிகளார் வரலாறு, ஆயிஷா பதிப்பகம், விலை 350ரூ. மாமேதை இப்னு கஸீர் (ரஹ்) எழுதிய வரலாற்றுத் தொகுப்பு முதலும் முடிவும் என்ற அரபு நூலாகும். இது மிகவும் பிரபலமான நூல். இந்த நூலை ஆயிஷா பதிப்பகத்தார் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த நூலில் நபிமார்கள் வரலாற்றுப் பகுதி முதல் மூன்று பாகங்களிலும், இஸ்ரவேலர்கள், முற்கால அரபியர்கள் வரலாறு நான்காம் பாகத்திலும் இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் பாகத்தில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு தொடங்குகிறது. இந்த நூல் நபிகளாரின் வரலாற்றைக் […]

Read more

64 யோகினிகள் மர்மங்கள்

64 யோகினிகள் மர்மங்கள், வேணுசீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலை 275ரூ.. சக்தி வழிபாட்டில் அம்பாளின் முக்கியமான பரிவார தேவதைகளாக இருப்பவர்கள் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும், மொத்தமாக 64 யோகினிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது என்றும் தகவல் தெரிவிக்கும் நூல், யோகினிகள் பற்றிய மர்மங்களை விளக்கும் ஆன்மிக ஆய்வு நூலாக விளங்குகிறது என்று கூறலாம். 64 யோகினிகள் எனப்படுபவர்கள் யார் யார்?, அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? பக்தர்களுக்கு அவர்கள் எவ்வாறு உதவி செய்கிறார்கள்? என்ற விவரமும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. யோகத்தல் திறன் பெற்ற ஆண்கள் […]

Read more

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம் பதிப்பகம், விலை 400ரூ. புராணங்கள், இதிகாசங்களில் ராதாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் ஆத்மசாதர்கள் எளிதில் புரிந்து பயனுரும் வகையில் நூலாக்கியுள்ளார் ஓங்காரநந்தா. நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 106