நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம்

நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம், மோகன் சுந்தரராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.240, விலை ரூ.150. மரபணு பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இப்போது பெரிய அளவில் வளர்ந்துவிட்டன. பாக்டீரியாவின் மரபணுவில் வேறுபாடுகள் தோன்றி மருந்துகளைச் செயலிழக்கக் செய்துவிடுகிறது. ஆர்டெமிசினின் மருந்து, பென்சிலின் ஆகியவை ஒரு நோயாளியின் உடலில் செயல்படாமல் போவது இதனால்தான். நமது உடலில் வலி தோன்றுவதற்குக் காரணமான மரபணு எஸ்என்பி -9 ஏ. இது உடலில் சோடியம் செல்லும் பாதைகளில் ஒன்றான என்ஏவி 1.7 என்பதை ஒழுங்குபடுத்துகிறது. இந்தப் பாதையைச் செயலிழக்கச் செய்துவிட்டால், கொதிக்கும் […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு.

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு., க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.170, விலை ரூ. 150. உலகில் உயிரினம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கான பதிலை விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு செல் உயிரியாகத் தோன்றிய உயிரினம், பலவித பரிணாமங்களை அடைந்து இன்றைய மனித வடிவை அடைந்திருக்கிறது என்பது பரிணாமக் கொள்கை.,ஆயினும் இதை மறுதலிப்பவர்களும் உண்டு. உலகம் உருண்டை என்பதை ஏற்கவே பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறகு பொது சார்பியல் கோட்பாடு உருவாகி இன்றைய நவீன உலகிற்கு வழி சமைத்தது. அதேபோல டிஎன்ஏ மூலக்கூறுகள் குறித்த […]

Read more

மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்

மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள், கு.வை.பாலசுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. விலங்குகளை பார்ப்பதும், அவற்றை பற்றி கேட்பதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். வனவிலங்கு பூங்காவுக்கு செல்வதை அனைவரும் விரும்புவர். பல மிருகங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட நமக்கு எதுவும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், காண்டாமிருகம், யானை, நீர் யானை, ஒட்டகசிவிங்கி, கடமா என்னும் காட்டெருமை, கடுங்கால் ஒட்டகம் ஆகிய விலங்குகள் பற்றி விபரமாக, தெளிவாக, எளிய நடையில் ஆசிரியர்கள் […]

Read more

மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம், நவீன இதழியல் கையேடு, சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக்.216, விலை ரூ.225. செல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட் போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும். யார் வேண்டுமானாலும் செல்போன் மூலம் செய்திகளைப் பிறருக்குப் பரப்பலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கான அடிப்படைகளை வரையறுத்து விளக்குவதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. செல்பேசியின் மூலம் […]

Read more

சங்ககால வானிலை

சங்ககால வானிலை, முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன், முக்கூடல், பக். 272, விலை 300ரூ. வானிலையும் காலநிலையும்தான் மனிதன் முதல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வரை அத்தனையும் தோன்றக் காரணம். வானிலை குறித்து சங்ககாலத்திலேயே ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனை உணர்த்தும் வகையில் சங்க இலக்கிய நூல்களில் கோள்களின் இயக்கம் முதல், மேகம், மழை, இடி, மின்னல், வெப்பசலனம் என்று வானிலை சார்ந்த அத்தனை விஷயங்களும் இடம் பெற்றிருப்பதை உதாரணங்களுடன் விளக்கும் நூல். நம் முன்னோரின் வானிலை அறிவு(வியல்) நுட்பம் ஆச்சரியப்படவைக்கிறது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் […]

Read more

21 லெசன்ஸ் ஃபார் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி

21 லெசன்ஸ் ஃபார் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி, யுவால் நோவா ஹராரி, பெங்க்வின் ராண்டம் ஹவுஸ், விலை: ரூ.799 குரங்கினத்திலிருந்து உருவான மனித இனம் பற்றிப் பேசிய ‘சேப்பியன்ஸ்’, கூரறிவு வாய்ந்த மனிதனின் எதிர்காலம் பற்றிப் பேசிய ‘ஹோமோ டூஸ்’ ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து வரலாற்றறிஞர் யுவால் எழுதியுள்ள இந்நூல் இன்றைய உலகின் சவால்களை அலசுகிறது. இன்றைய உலகின் அறிவுத் திறனோடு கூடவே அதன் மூடத்தனங்களையும் விரிவாக இந்நூலில் அலசுகிறார். தினமும் கண்விழித்த நேரத்திலிருந்து உறங்கச் செல்லும் நேரம் வரை நம்மை ஆட்டுவிக்கும் தொழில்நுட்பங்கள், பேதங்கள் […]

Read more

ஓரம்போ

ஓரம்போ, மாடும் வண்டியும், முனைவர் த.ஜான்சி பால்ராஜ், என்சிபிஎச், விலை 130ரூ. மாட்டு வண்டியில் மண் வாசனையோடு பயணப்பட்ட நாட்களை நினைவூட்டுகிறது இந்நூல். நூலாசிரியர் மாட்டு வண்டியை அக்குஅக்காக ஆய்ந்து நூலை எழுதியிருக்கிறார். மாட்டு வண்டியின் அமைப்பு, வகைகள், வெவ்வேறு பயன்பாடுகள், ரேக்ளா வண்டிகள், தண்ணீர் கொண்டுவரும் நகரத்தார் பகுதி வண்டிகள், வண்டியின் முக்கிய பாகமான சக்கரங்களின் உராய்வைக் குறைக்கும் மை தயாரிப்பு, வண்டி மாடுகளின் வகைகள், அவற்றின் நோய்களுக்காகப் போடும் சூட்டின் அடையாளங்கள் வண்டிகளைத் தயாரிக்கும் மரத்தச்சர்கள், சக்கரங்களுக்கு இரும்பு வளையம் மாட்டும் […]

Read more

காற்றின் அலை வரிசை

காற்றின் அலை வரிசை, ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம், தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ. வானொலிகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்வதன் வாயிலாக ஒரு காலகட்டத்தையே நாம் அறிந்துகொள்ள முடியும். வானொலிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஜெய்.சக்திவேல் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், ஹாம் ரேடியோ குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. ஹாம் ரேடியோ என்பது என்ன, அதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, ஹாம் ரேடியோவுக்கான உரிமைகளை எப்படிப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அரிதாக அறியப்பட்ட ஹாம் ரேடியோவானது தகவல்தொடர்பு, பொழுதுபோக்கோடு […]

Read more

ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம்

ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம், தமிழில்: எஸ்.எம்.கார்மேகம், முல்லை பதிப்பகம், பக்.96, விலை ரூ.30 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 37 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் ஹாரி மில்லர். அவர் புகைப்படக் கலை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய தொடர், தமிழில் தினமணி கதிர் இதழில் 26.3.1995 முதல் 1.6.1995 வரை வெளிவந்தது. அதனுடைய நூல் வடிவம்தான் இந்நூல். விலை உயர்ந்த காமிராவை வைத்து ஒருவர் நல்ல புகைப்படங்களை எடுத்துவிட முடியாது. நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படம் எடுப்பவர் காமிராவை எப்படிக் கையாள வேண்டும் என்று […]

Read more

சங்க கால வானிலை

சங்க கால வானிலை,  கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், பக்.272, விலை ரூ.300. நவீன வானிலையியல் காற்றைப் பற்றி, மேகத்தைப் பற்றி, மழையைப் பற்றி, காலநிலையைப் பற்றி, வானிலை பற்றி வைத்துள்ள அறிவியல் வரையறைகள் நூலில் விளக்கப்படுகின்றன. அந்த வரையறைகளுக்குப் பொருந்துவிதமாக சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தகவல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக காற்றைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.  வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்றை வாடை, வடந்தை, ஊதை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை ;கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை கோடை எனவும், தெற்கில் […]

Read more
1 2 3 18