திரிசங்கு நரகம்

திரிசங்கு நரகம், இரா. ஜெயப்பிரகாசம், பொற்செல்வி பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. செவி வழி செய்தி எப்படி இனிமை சேர்க்கிறதோ, அதேபோல் கடல் கடந்து ஆகாய வழியில் அயல்நாடு பயணம் செய்து, மறக்க முடியாத நினைவுகளை பகிர்வது புதுமை சேர்க்கிறது. ஆங்கிலம் என் தாய்மொழி அல்ல; அது தெரிந்தும் இம்மொழி பேச மாட்டேன் எனச் சபதமிட்டு, பயணத்தின் போது உடல் நலிவுற்று, பாரிஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் நேர்ந்த மருத்துவமனை அனுபவங்களின் தொகுப்பு இந்நுால். நன்றி: தினமலர், […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், ஏ.ஆர்.எஸ்., ஏ.ஆர்.சினீவாசன் வெளியீடு, விலை 200ரூ. ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்துகொண்டே, சின்னத்திரை, வெள்ளித்திரை, நாடக மேடை ஆகியவற்றில் நடிகராக இருந்து பிரபலமான ஏ.ஆர்.எஸ். என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.சீனிவாசன், கலைத்துறையில் தன்னுடன் பணியாற்றியவர்கள் பற்றியும், அவர்களுடன் பழகிய 50 ஆண்டுகால அனுபவங்களையும் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சோ, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்ற பலருடன் கொண்டு இருந்த நட்பின்போது நடைபெற்ற ருசிகரமான நிகழ்வுகளை அவர் வெளியிட்டு இருக்கும் விதமும், கலைத்துறையில் சிலர் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை அவர் தந்து […]

Read more

நெஞ்சோடு கிளத்தல்

நெஞ்சோடு கிளத்தல், பாதசாரி, தமிழினி பதிப்பகம், விலை 70ரூ. ‘மீனுக்குள் கடல்’ தொகுப்புக்குப் பிறகு நீள்மௌனத்தில் ஆழ்ந்திருந்த பாதசாரி புதிய உற்சாகத்துடன் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என்று எந்த வகைக்குள்ளும் அடங்காத பாதசாரியின் மனநிழல் குறிப்புகள் வரிசையில் சமீபத்திய வரவு இது நன்றி: தி இந்து, 10/1/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நூலிலிருந்து… – நாகா

நூலிலிருந்து… – நாகா, ஸ்ருதி பதிப்பகம், பக்.288, விலை 200ரூ. நூல்களுடன் நட்புக் கொண்டு அவற்றுடன் நீண்டகாலமாக பழகிவரும் நாகா என்ற நாகசந்திரன், தனது அனுபவங்களையும், தான் படித்த நூல்களையும் பற்றியும், தன்னைக் கவர்ந்த ஆளுமைகள் குறித்தும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டவற்றின் தொகுப்புதான் இந்நூல். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டவுடன் களமிறங்கி போக்குவரத்தைச் சீர்படுத்திய தொழிலதிபரைச் சந்தித்த அனுபவம், விபத்தில் சிக்கியவர்களை உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது, சிக்னல் நெரிசலில் தானம் செய்வதைப் பற்றிய நூலாசிரியரின் கருத்து, அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று சாலை விதிகளை […]

Read more

வானமே எல்லை

வானமே எல்லை, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 170ரூ. விறுவிறுப்பான நடையில் வாழ்க்கைச் சம்பவங்களை சுவை குன்றாமல் தரும் இந்நுாலாசிரியர், தம் வாழ்க்கை அனுபவங்களைச் சிறு சிறு துணுக்குகளாக, சிறு குறிப்புகளாகப் படைத்து அளித்துள்ளார். எதையும், மெல்லிய நகைச்சுவையோடு சொல்லக்கூடிய இந்த எழுத்தாளரின் சிந்தனை, பல கோணங்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கோள்களாகப் பயன்படும் விதத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கருத்தை உணர்த்திச் செல்வது, நம் சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது. ‘காதலைச் சொல்லத் தான் வார்த்தை தேவை: அதைத் துய்க்க மவுனம் போதும்; […]

Read more

நின்று துடித்த இதயம்

நின்று துடித்த இதயம், பெண்ணும் இருதய அறுவை சிகிச்சையும், அகிலா, ஐரிஸ் பதிப்பகம், விலை 100ரூ. மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட அனுபவம் இதய நோய் அறுவை சிகிச்சைக்குள்ளானது குறித்த தனது அனுபவங்களை ஒருவித சுயஎள்ளலுடன் எழுதியிருக்கிறார் கவிஞரும் சிறுகதையாளருமான அகிலா. இதய நோய் என்றவுடன் அய்யோ என்று பயந்துவிடாமல், அதை எப்படி சாதுர்யமாக எதிர்கொண்டார் என்பதை ‘நின்று துடித்த இதயம்’ நூலில் பதிவு செய்துள்ளார். பெண்ணுக்கே உரித்தான மனத்துணிவுடன் தனது உடல், மனப் பிரச்சினைகளை எதிர்கொண்டது குறித்து இயல்பான மொழியில் எழுதியுள்ளார். பைபாஸ் […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், தொகுப்பாசிரியர் தீபம் எஸ்.திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், பக். 160, விலை 110ரூ. அகர முதல எழுத்து’ என, கடவுளுக்கு நிகராக எழுத்தை போற்றுகிறது, உலக பொது மறையான திருக்குறள்! கூர்மையான ஆயுதத்தை விட பலம் வாய்ந்தது, பேனா முனையால் எழுதும் எழுத்து என்பதை அனைவரும் அறிவோம். உலக மாந்தர் ஒவ்வொருவரது வாழ்க்கை, சிலருக்கு வரலாறாகவும், பலருக்கு செய்தியாக கேட்கவும் படிக்கவும் உதவுவது, எழுத்தாளர்களின் படைப்புகளாகும். நிகழ்வுகளை, நம் கண்முன் சுவாரசியமாக நிறுத்துவதில் துவங்கி, நாளும் பொழுதும் நம் சிந்தனையை துாண்டுவது […]

Read more

அறம் செய்ய விரும்புவோம் – அகரம் விதைதிட்ட வெற்றிக் கதை

அறம் செய்ய விரும்புவோம் – அகரம் விதைதிட்ட வெற்றிக் கதை, அகரம் அறக்கட்டளை, பக்.128, விலை ரூ.90. நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யாவின் முன்முயற்சியினால் 2006 ஆம் ஆண்டில் அகரம் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக உயர் கல்வி கற்க முடியாமல் போகும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு அகரம் விதைத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 1961 மாணவ, மாணவிகள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளைக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, […]

Read more

நன்றியன்

நன்றியன், வா.மு.சே.திருவள்ளுவர், தமிழ்மணி புத்தக பண்ணை, விலை 250ரூ. கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல நாடுகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட வா.மு.சே. திருவள்ளுவர், தனது அனுபவங்களை, அழகிய தமிழில் பதிவு செய்து இருக்கிறார். இதனைப் படிப்பதன் மூலம், உலகத் தமிழர்களின் ஆற்றல், அறிவு, சாதனை, கருணை, இலங்கைத் தமிழர்களின் வேதனை போன்ற பல அம்சங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

இளசையாரின் இலக்கிய பயணம்

இளசையாரின் இலக்கிய பயணம், முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, புகழ் பதிப்பகம், பக். 136. படைப்பாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நுாலாசிரியர், ஆராய்ச்சியாளர், கிருபானந்த வாரியாரால் பாராட்டப்பட்ட நகைச்சுவை மாமன்னர், ஆன்மிக அறிஞர், அகில இந்திய வானொலி இயக்குனர், கவிஞர், நாடக ஆசிரியர், மகாகவி பாரதியாக வேடமிட்டுத் தோன்றும் நடிகர், பல வெளிநாடுகளில் தமிழின் புகழைப் பரப்பியவர் போன்ற பன்முகம் கொண்ட இலக்கியவாதியின் சுயசரிதையைக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more
1 2 3 4