கம்பர் சில கண்ணோட்டம்

கம்பர் சில கண்ணோட்டம், சு.அட்சயா, காவ்யா, பக்.167, விலை ரூ.170. கம்பனை வித்தியாசமான கோணங்களில் இந்நூல் அணுகுகிறது. கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள இசைக் கருவிகளைப் பற்றிய விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரை, தற்கால உளவியலில் நினைவின் வகைகளாகக் கூறப்படும் நினைவின் பகுதியை மனத்திருத்தல், மீட்டுக் கொணர்தல் அல்லது மீட்டறிதல் ஆகிய கோட்பாடுகள் கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருப்பதைக் கூறும் கம்பரின் உளவியல் சிந்தனைகள் கட்டுரை நம்மை வியக்க வைக்கின்றன. கம்பராமாயணத்தில் கூறப்படும் நீர்வளம், நெல் வளம், மன்னரின் நல்லாட்சி, மக்களின் இன்ப வாழ்வு, மாதர்களின் மாண்பு ஆகியவற்றைப் பற்றிய […]

Read more

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம், தேவகாந்தன், வடலி வெளியீடு, பக்.232, விலை ரூ.230. இன்று நடப்பவை நேற்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்கின்றன. ஈழத்தில் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதும் அதற்கு விதிவிலக்கல்ல.கி.பி.1800-க்கு முன்பு யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் டச்சுப் படையினர் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், அந்தப் படைவீரர்களை தமிழ் மக்கள் கொன்றழித்ததும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு இடையில் இருந்த சாதி மோதல்கள் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. அது தாழ்ந்த சாதிப் பிரிவினர் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது. […]

Read more

திருவள்ளுவர் 2050 ஆண்டுகள்… அடைவுகள்

திருவள்ளுவர் 2050 ஆண்டுகள்… அடைவுகள், நூல் உருவாக்கக் குழு பொறுப்பாளர், பொழிலன், பாவலரேறு தமிழ்க்களம், பக்.984, விலை ரூ.900. திருக்குறள் தொடர்பான 2050 காலச் செயல்பாடுகளை இந்நூல் தொகுத்து வழங்கியிருக்கிறது. திருக்குறள் தோன்றிய காலத்தை ஆராயும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. திருவள்ளுரின் அறம், அரசியல், அவர் காட்டும் தமிழர் வாழ்வியல், வள்ளுவரின் கடவுள் சிந்தனை ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் கட்டுரைகள், திருக்குறள் சமணம் சார்ந்ததா? புத்த மதம் சார்ந்ததா என ஆராயும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் வைதீகக் கருத்துகள், சைவ சித்தாந்த கருத்துகள், […]

Read more

கற்கோயிலும் சொற்கோயிலும்

கற்கோயிலும் சொற்கோயிலும், மா.கி.இரமணன், பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ. ஆசிரியர் மா.கி.இரமணன், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் என்று மிளிர்பவர். ஆம். அதற்கு அவர் எழுதிய கவிதையே சான்று. வாழ்வதற்குப் பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற வரிகள், ஆழ்ந்த சிந்தனையைத் துாண்டும். உண்மையான பூங்கொடி மணக்கத்தானே செய்யும் நுாலின் பெயரே, முதல் கட்டுரையின் தலைப்பாக உள்ளது. ஐந்தெழுத்தை நெஞ்சழுத்தி எழுதிய அனைத்துக் கட்டுரைகளும், கன்னித் தமிழின் களி நடனம், சிந்தனை ஊற்றின் சிகரம் எனலாம். இந்தக் கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் […]

Read more

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன், ஜெய்சூர்ய குமாரி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 250ரூ. சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில் இருபது வயது இளைஞர்கள் சமூக வலைத்தள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்துகொண்டிருக்க, பதினெட்டாம் நுாற்றாண்டில் அதே இளம் வயதில் ஒரு ஒப்பற்ற மாவீரனாக விளங்கிய நெப்போலியனின் நிகரற்ற வரலாறே இந்நுால்! இத்தாலியைப் பூர்விகமாகக் கொண்ட நெப்போலியன் குடும்பம் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட கார்சிகா தீவுக்கு குடிபெயர்ந்த காலகட்டத்தில், பிரெஞ்சுக்காரர்க்கும் ஒற்றுமையற்ற கார்சிகா தீவினர்க்கும் இடையே கடும் போராட்டம் நிலவிய சூழல்களும், தொடர்ந்த பிரெஞ்சுப் புரட்சிக் […]

Read more

உயிர் வளர்க்கும் திருமந்திரம்

உயிர் வளர்க்கும் திருமந்திரம், கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 180ரூ. திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப் பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதிவரும் கட்டுரைகளின் முதல் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து,  21/9/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

லைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி

லைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி, தொகுப்பு ஓ.பி.ஸ்ரீவத்சவா, ரீலிசம் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு, விலை 395ரூ. கன்னட சினிமாவின் புதுயுக விற்பன்னர்களில் தலைசிறந்தவரான கிரிஷ் காசரவல்லி திரைப்படங்கள் வழியாகத் தனித்துவம் மிக்க சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்திய விதம் குறித்துப் பேசும் புத்தகம் இது. 1975-ல் தொடங்கி 2015 வரை சுமார் 40 ஆண்டுகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் என மொத்தம் 18 படைப்புகளை மட்டுமே வழங்கியிருந்தபோதிலும், காசரவல்லியின் படைப்புகள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாக இன்றும் நீடிப்பவை. சரவல்லி கன்னட இலக்கியத்தின் ஆழத்தை, […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, விலை 190ரூ. பாவனையற்ற கதைகள் ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த […]

Read more

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம், ஜெ.பிரான்சிஸ் கிருபா, படிகம் வெளியீடு, விலை 150ரூ. ரசனை முள் அங்கியை அவிழ்த்தெறிந்துவிட்டு நிர்வாணமாகி துண்டுத் துண்டாகி கொதிக்கும் சாம்பாரில் குதித்து கும்மாளமிட்ட கிழங்குகள் விளைந்த வயல்களிலிருந்து இமெயில்கள் வந்தவண்ணமிருக்கின்றன நடனம் எப்படி இருந்தது எனக் கேட்டு விருந்துண்டு பசியாறிய விருந்தாளிகள் பதிலனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் மிக மிக ருசியாக இருந்ததென்று. கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் […]

Read more

ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம்

ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம், எஸ்.ஜி.ஜெயராமன், பக்.196, விலை ரூ.195. படைப்பு ஆற்றல்களாக விளங்கும் குண்டலினி, ஜீவசக்தி, பிராண சக்தி ஆகிய மூன்றும் ஒன்று கூடி மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதார ஆற்றல்களாக விளங்குகின்றன. இந்த மூன்று ஆற்றல்களும் மனித உடலில் முறையாகச் செயற்படும்போது மனிதர்களை நோய்கள் நெருங்குவதில்லை. ஆனால் இந்த ஆற்றல்கள் மனிதர்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை என்றால் நோய் வாய்ப்படுவார்கள். அப்போது  பிரபஞ்சத்தில் உள்ள உயிராற்றல்களை மனித உடல் தன்னுள் ஈர்த்துக் கொண்டால், நோய்களிலிருந்து விடுபட முடியும். இதற்கான வழிகளை புத்தரின் கடைசிப் […]

Read more
1 2 3 7