சோழன் ராஜா ப்ராப்தி

சோழன் ராஜா ப்ராப்தி, எஸ்.எஸ். சிவசங்கர், அந்திமழை, விலை 140ரூ தமிழக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தனது அரசியல் வாழவிலும் அன்றாட நடைமுறையிலும் சந்தித்துப் பழகியவர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர், இளையராஜா, சோழ மன்னர் ராஜராஜன் உள்பட பலர் தன் மீது ஏற்படுத்திய தாக்கத்தை சிறந்த கட்டுரைகளாக ஆக்கித் துந்து இருக்கிறார். அரசியல்வாதி என்றாலும், கட்சி அரசியல் வாடை எதுவும் இல்லாமல் அவர் தந்து இருக்கும் கட்டுரைகள், அனைத்து தரப்பினரும் படித்து ரசிக்கும் வகையில் உள்ளன. […]

Read more

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல், போல் ஜோசப், மணிமேகலைப் பிரசுரம், விலை 180ரூ. “இந்த நோய்க்கு இது தான் மருந்து, சாப்பிடுங்கள்” என்று கூறி அனுப்பிவிடுவது மட்டும் மருத்துவம் அல்ல என்பதையும், மருத்துவம் என்பது உளவியல் சார்ந்த பல அம்சங்களையும் உள்ளடக்கியது என்ற கருத்தையும் இந்த நூலைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. மருத்துவம் படித்துப் பட்டம் பெற்று கனடா நாட்டில் பணியாற்றும் போல் ஜோசப் என்ற மருத்துவர், தற்கால மக்களுக்குத் தேவையான பயனுள்ள பல மருத்துவ உளவியல் ஆலோசனைகளை இந்த நூலில் தந்து இருக்கிறார். […]

Read more

மாத்தி யோசி கவிதைகள்

மாத்தி யோசி கவிதைகள், மில்டன், விலை 89ரூ இளம் கவிஞர் மில்டன் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்கிறார் காந்தி. இன்றோ அந்தக் கிராமங்களில் தான் வாழ எவருமில்லை, உன் தலைமுறையை மருத்துவனாக்கு பொறியாளனாக்கு அதற்கு முன் சாதி வெறி இல்லா மனிதனாக்கு பிறருக்கு உதவும் மனிதநேயனாக்கு என்பன போன்ற நெஞ்சை அள்ளும் கவிதைகள். மறுக்கப்பட்ட வாழ்வை அளித்தவன் நீ மறைக்கப்பட்ட வரலாற்றை உரைத்தவன் நீ வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்புச் சட்டை நீ எந்த வேள்வியையும் சட்டை செய்யாத நெருப்புச் […]

Read more

எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை

எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை, வெ.ராம்குமார், வைகை பதிப்பகம், விலை 200ரூ. பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரில் பலர், ஆர்வம் காரணமாக எழுத்தாளர்களாகவும் பரிணமிக்கிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர்களை அறிமுகப்படுத்துவது போல அவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டித் தந்து இருக்கிறார் ஆசிரியர். வளரும் நிலையில் உள்ள எழுத்தாளர்களையும் எழுத்துலகுக்கு வரத்துடிப்பவர்களையும் ஊக்கப்படுத்தும் வண்ணம் இந்த நூல் அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 15/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ். ஏ.ஆர்.சீனிவாசன் வெளியீடு, பக். 296, விலை 200ரூ. இந்நூலாசிரியர் நாடகம், சினிமா, சின்னத்திரை போன்றவற்றில் பிரபலமானவர். வக்கீலுக்குப் படித்தவரும் கூட. இவர் தனது 50 வருட கலைத்துறை அனுபவத்தை அமுதசுரபி இதழில் தொடராக எழுதியபோது அது வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்நூலில் தனக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு அனுபவத்திலிருந்து தொடங்கும் ஆசிரியர், அடுத்து சிவாஜி, ஜெயலலிதா, சோ, நாகேஷ், மனோரமா, இயக்குனர் ஸ்ரீதர், எம்.எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், வாலி, கே.பி. சுந்தராம்பாள், சின்னப்பதேவர், சந்திரபாபு, சிவக்குமார் என்று […]

Read more

தெய்வத்தின் குரலமுதம்

தெய்வத்தின் குரலமுதம், ஆர். பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. கண்கண்ட தெய்வமாக இருந்து ஏராளமான ஆன்மிக சாதனைகளைச் செய்தவர் என்று காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளை பக்தர்கள் போற்றிப் பாராட்டுவது மிகச் சரியான கருத்து என்பதை, இந்த நூலைப் படிக்கும் போது உணரமுடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரிச்சினைகள் பற்றி காஞ்சிப் பெரியவர் வழங்கிய அமுத மொழிகளை அவரது சரளமான பேச்சு நடையிலேயே தொகுத்துத் தந்து இருப்பதால், அவரே நம் முன் அமர்ந்து உரையாற்றுவது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. மோர் […]

Read more

சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம்

சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம்,தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், தொகுதி 1, பக்.296, விலை ரூ.190, தொகுதி 2; பக்.720; விலை ரூ.450. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கல்யாணசுந்தரம் சட்டமன்றத்தில் 1952 முதல் 1956 வரை ஆற்றிய உரைகள் முதல் தொகுதியாகவும், 1957 முதல் 1961 வரை ஆற்றிய உரைகள் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவரின் பிரச்னைகளும், சாலை வசதி,தண்ணீர்ப் பிரச்னை, மருத்துவவசதி, விவசாயம், கல்வி, மொழிப் பிரச்னை என அனைத்தும் […]

Read more

அருந்தவப்பன்றி

அருந்தவப்பன்றி, பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், விலை 140ரூ. மகாகவி பாரதியாரை அருந்தவப்பன்றி என்ற அடைமொழியுடன் அழைக்கும் இந்தப் புத்தகத்தின் தலைப்பு, சிலருக்கு வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் அந்தச் சொல், தன்னைப் பற்றி பாரதியாரே கூறிய சொல் என்பதை இந்த நூல் மூலம் அறியும் போது வியப்பாக இருக்கிறது. பாரதியார் சில காலம் கவிதைகள் ஏதும் எழுதாமல் மிகுந்த துயரத்தில் வாழ்ந்து வந்தார். அவருடன் இருந்த கவிதை தேவி அவரை விட்டுப் பிரிந்ததாகவும், சில ஆண்டுகள் கழித்து கவிதை தேவி தன்னை அடைந்த […]

Read more

இணைந்த மனம்

இணைந்த மனம், மிருதுலா கர்க், தமிழில்: க்ருஷாங்கினி, வெளியீடு: சாகித்ய அகாடமி, விலை: ரூ.395 மூன்று பெண்களின் கதை சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்தி, ஆங்கில எழுத்தாளர் மிருதுலா கர்க், இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றி இந்தியில் எழுதிய ‘மிலிஜூல் மன்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர், சிறுகதையாளர் க்ருஷாங்கினி இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார். 1950-களில் பிறந்த குல்மோஹர், மோக்ரா ஆகிய சகோதரிகளையும் அவர்களது தோழியையும் சுற்றி நடக்கும் கதை இது. மாறும் […]

Read more

ஜென் பாடங்கள்

ஜென் பாடங்கள், தொகுப்பு யோமே எம்.குபோஸ், தமிழில் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.238, விலை 180ரூ. ஜென் தத்துவங்களை விளக்கும் நூல். குருவிடம் மாணவத்துறவிகள் கேள்விகள் கேட்பதும், அதற்கு குரு பதில் சொல்வதும் என்கிற முறையில் ஜென் தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஜென் வாழ்க்கை மற்றும் இறப்பைப் பற்றி பேசுவதால் அது மதமே. ஆனால் இயற்கையைக் கடந்த, காரணகாரிய விதிக்கு அப்பாற்பட்ட ஒரு தனி இருத்தலின் மீது நம்பிக்கை வைக்காமல், சுவர்க்கம் அல்லது நரகம் போன்ற கோட்பாடுகள் இல்லாமல் ஜென் இருக்கின்றது. பெரும்பாலான மதங்கள் […]

Read more
1 2 3 5