பேசும் வரலாறு

பேசும் வரலாறு, அ.கே.இதயசந்திரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. முக்தா சீனிவாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இந்நூலாசிரியர், பின்னர் இயக்குநராக வளர்ந்து, இன்று தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர் சங்கத்தின் இணைச்செயலாளராக உள்ளார். இவர் வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜாஜ சோழனின் வரலாற்றுச் சாதனைகளை இந்நூலில் பதிப்பித்துள்ளார். இந்நூல் நாவல் இல்லை. ஆனால் நாவலைப் படிப்பது போல ஆவலைத் தூண்டும் நூல். சரித்திர காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்தான் சிறப்பு மிக்க மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். காரணம் இவர்களிடம் ஆட்சித்திறமை மட்டுமின்றி, […]

Read more

அகப்பறவை

அகப்பறவை, பூங்குழலி வீரன், அகம் பதிப்பகம், விலை 100ரூ. மரங்களைப் பாடுதல் மரங்கள், மழை, கவிதை குறித்த அனுபவங்கள் இவற்றால் ஆனது மலேசியக் கவிஞர் பூங்குழலி வீரனின் அகப்பறவை என்னும் இக்கவிதைத் தொகுப்பு. மரங்களை தன் உறவுகளாகவும், அவற்றின் பதியன்களை பிரியத்தோடும் நோக்கும் இவரது உலகில் இலைகள் வீழ்வதும் சூரியன் மேற்கே வீழ்வதும் ஒருங்கே நிகழ்கையில் அன்பு முகிழ்கிறது. தொலைபேசியில் இருக்கும் எண்களில் இருந்து இறந்தவர் யாராவது அழைத்துவிடும் அச்சம் மட்டும் அவ்வப்போது வந்து போகிறது -என்கிறார் பூங்குழலி. நம் தொலைபேசியில் இருக்கும் இறந்துபோனவர்களின் […]

Read more

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம், எஸ்.சென்ன கேசவ பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 480, விலை 300ரூ. இறையன்பர்கள், சான்றோர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் ஆகியோர் அருளிய சமய தத்துவங்கள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நாளிதழ்கள், வார இதழ்கள், திங்களிதழ்கள், ஆண்டு மலர்கள் ஆகியனவற்றில் இடம் பெற்ற இந்து சமயம் தொடர்பான செய்திகள் முதலியனவற்றை நிரல்பட தொகுத்து, ஆங்காங்கே குறிப்புகளையும், விளக்கங்களையும் தந்து நுாலாக்கிய ஆசிரியரின் அளப்பரிய முயற்சி பாராட்டுக்குரியது. ‘இறைவனைக் காண இயலாது; உணர முடியும்’ என, விளக்கியுள்ள பாங்கும், ராமகிருஷ்ண […]

Read more

இரண்டாம் சுற்று

இரண்டாம் சுற்று, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.வி.தமிழ் பதிப்பகம், பக். 256, விலை 240ரூ. நீண்ட காலமாய் பயணம் செய்யும் தமிழ் நெடுஞ்சாலையில், பேச்சுப் போட்டிக்கு அடித்தளமிட்ட குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம். குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று கலெக்டராக பணி. முன்கூட்டியே போட்ட மொட்டையால் முகவரியாக மாறிய முகம். அரவிந்த் என்றோர் அற்புதம், கோராபுட் பக்கம் தான் சிகாகோ, அந்தரத்தில் ஊஞ்சல், பஸ்தர் என்னும் தாய்மடி, உலகத்தை முத்தமிட்டவர், எல்லையற்ற பிரபஞ்சம் உள்ளிட்ட அரிய செய்திகள் அடங்கிய பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: […]

Read more

மக்களும் மரபுகளும்

மக்களும் மரபுகளும், நா.வானமாமலை, என்.சி.பி.எச்.(பி) லிட், பக். 150, விலை 100ரூ. மானிடவியல், இன வரைவியல் போன்ற துறை வழியாக ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறு, பண்பாட்டுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், இந்த நுால், தமிழ்ப் பழங்குடியினரின் பண்பாட்டுத் தொடர்பிலான செய்திகளை விரிவாகப் பேசுகிறது. இந்த நுாலில் உள்ள பன்னிரு கட்டுரைகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டிருப்பதோடு, அரிய பல தகவல்களைத் தொகுத்துக் கூறியிருக்கிறது. இதைப் பதிப்பித்திருக்கும் நா.வானமாமலை அரிதின்முயன்று இதைத் தொகுத்துள்ளார். கட்டுரைகளை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தேடல் முயற்சியுடன் […]

Read more

பறவை போல் வாழ்தல் வேண்டும்

பறவை போல் வாழ்தல் வேண்டும், இ.தனுஷ்கோடி, தமிழ்வாணி பதிப்பகம், பக். 102, விலை 70ரூ பறவை போல் வாழ்தல் வேண்டும் எனும் இந்த நுாலில், 34 பறவைகளின் வாழ்க்கைச் செய்தியை, திரட்டியுள்ளார் என்பது, இந்த நுாலை வாசிப்பவர்களுக்குத் தெரியும். அன்பால் இணை பிரியாத அன்றில் பறவை, காக்கை, சிட்டுக்குருவி, கிளி, புறா, குயில், மயில், ஆந்தை போன்ற பல பறவைகளின் குணங்களையும், அதன் வாழ்க்கை, வாழும் சூழலையும் அருமையாக கூறியிருக்கிறார் ஆசிரியர். சேர்ந்து வாழும் காதல் பறவைகள், அடிக்கடி முத்தமிட்டு ஆனந்தம் கொள்ளும். தன் […]

Read more

புதுச்சேரி சித்தர்கள்

புதுச்சேரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. வேதபுரி, அகத்தீசுவரம் என்று புதுச்சேரி போற்றப்படுகிறது. பாடல் பெற்ற கோவில்கள் இங்கு இல்லை. ஆனாலும் அரவிந்தர், அன்னை, பாரதியார் போன்றவர்களால் புனிதம் சேர்ந்தது புதுச்சேரிக்கு. ஞானபூமியில் தோன்றிய 47 சித்தர்களை அரும்பாடுபட்டு இந்நுாலாசிரியர் தொகுத்து விரிவாக எழுதியுள்ளார். பாரதியார், பல சித்தர்களுடன் பழகியவர் என்றும், அவர்கள் பற்றி பாடல்கள் பாடியவர் என்றும் முன்னுரையில் கூறியிருப்பது மிக முக்கியத் தகவலாகும். புதுச்சேரி சித்தர் ஆய்வில், இளைஞர்கள் ஆர்வமுடன் இருப்பதாக எழுதியுள்ளது, எதிர்கால நம்பிக்கை தருகிறது. அகத்தியர் […]

Read more

ஆண்பிரதியும் பெண் பிரதியும்

ஆண்பிரதியும் பெண் பிரதியும்,  சமயவேல், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.160, விலை ரூ.150. பல்வேறு சிற்றிதழ்களில், இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளும், கரீபியக் கவிஞர் டெரெக் வால்காட் பற்றியும், தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன் பற்றியும் எழுதப்பட்ட அஞ்சலிக்குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ந.முத்துசாமி, எஸ்.இராமகிருஷ்ணன், சோ.தர்மன், அய்யப்ப மாதவன், சி.மோகன், லீனா மணிமேகலை, சந்திரா, பெருந்தேவி என தமிழ் இலக்கிய வாசகர்களால் நன்கறியப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றியும், யுகியோ […]

Read more
1 4 5 6