அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இந்த உலகில் குழந்தைத்தனம்தான் கள்ளமற்றது. விருப்பு வெறுப்புகள் சாராதது. பயமற்றது.யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதது. ஆனால், குழந்தைத் தனத்துடன் இருப்பதை அறியாமை என்றும் அதிலிருந்து விடுபடுவதுதான் நல்லது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தவறு, அப்படிப்பட்ட அறியாமையில் இருந்து விடுபட்டு, மீண்டும் களங்கமற்ற தன்மைக்கு மாறுவது எப்படி என்பதையெல்லாம் ஓஷோ சொன்னவற்றை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், சுவாமி சியாமானந்த். பல தேடுதல்களுக்கு விடைதரும் தெளிவான புத்தகம். நன்றி: குமுதம்,19.9.2018.   இந்தப் புத்தகத்தை […]

Read more

சந்தித்ததும் சிந்தித்ததும்

சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 200ரூ. ஒவ்வொரு கனிக்குள்ளும் ஒரு விதை இருப்பதைப் போலவே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நிச்சயம் ஒரு கதை இருக்கும். மனதால் பழகினால் அந்தக் கதையை நாம் படிக்கலாம். அப்படி, தான் பார்த்த, தன்னோடு பழகிய மனிதர்களிடம் இருந்து படித்த கதைகளை, சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய எளிய நடையில் எழுதியிருக்கிறார் இறையன்பு. ஒவ்வொரு பக்கமும் பல முகங்களின் அனுபவங்களாக, நகர்கின்றன. முழுமையாகப் படித்து முடித்ததும் நாமே அவர்களோடு பழகியதுபோன்ற உணர்வும், நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் இப்படிப்பட்ட அனுபவங்கள் […]

Read more

சினிமாக்காரர்கள்

சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. சினிமா! வெளியே இருந்து பார்க்கும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் மாயாஜாலம். இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை நம்மைக் கட்டிப்போடும் இந்தக் கனவு உலகிற்கான கதைக் கரு எப்படிப் பிறக்கிறது? அது எப்படிக் கதையாக உருவாகி, காட்சிகளாக வசனங்கள் பேசி, வடிவமைப்பாகவும், இசையாகவும், இயக்கமாகவும் இன்னபிறவாகவும் உருமாறி சினிமாவாகப் பிறக்கிறது என்பதைப் படிப்படியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெயபாரதி. சினிமாவின் திரையில் தெரியாத இன்னொரு முகம். நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737465.html இந்தப் […]

Read more

பெருவெளியில் சிறுதுளிகள்

பெருவெளியில் சிறுதுளிகள், கவிஞர் லெ.முருகேசன், அகநி வெளியீடு, விலை 80ரூ. துளித் துளிக் கவிதைகளை புத்தகம் முழுக்கத் தூவியிருக்கிறார். கவிதை மழையில் நனைந்த சிலிர்ப்பு மனதை ‘ஜில்’ ஆக்குகிறது. நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத தனி இடம் பெற்ற மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு ஏராளமான நூல்களாக வெளிவந்துள்ளன. அதனை மொத்தமாகப் படிப்பதைவிட துணுக்குகளாகப் படித்தால் சுவைபட இருக்கும் என்பதால், மகாத்மாவின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களில் 200 அம்சங்களைத் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு, மணிமேகலை பிரசுரம், விலை 150ரூ. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் எம்.ஜி.ஆரின் பிறப்பு, வளர்ப்பு, பள்ளி வாழ்க்கை, வறுமையால் படிப்பை கைவிட்டு நாடகத்தில் சேர்ந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டது. பின்னர் அவரின் திரையுலக பிரவேசம், திருமண வாழ்க்கை, அண்ணாவுடன் நட்பு, புதிய கட்சி தொடங்கியது, முதல் அமைச்சரானது, மறைவு உள்ளிட்டவை விரிவாக கூறப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் படிப்படியாகவும், சுவைபடவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறு வயதில் […]

Read more

தணிகாசல புராணம்

தணிகாசல புராணம், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, விலை 100ரூ. 18-ம் நூற்றாண்டில் திருத்தணியில் வாழ்ந்த திருத்தணிகைக் கந்தப்பையர் இயற்றிய தணிகாசல புராணம், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் குறிப்புரை முதலியவற்றுடன் 1939-ம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. இப்போது 2 வது பதிப்பாக வெளிவந்துள்ளது. திருத்தணி முருகன் புகழ் பாடும் இந்த நூலில் உள்ள பாடல்களின் பதங்களுக்கு அடிக்குறிப்புடன் விளக்கம் கொடுத்து இருப்பதால், எளிதாக புரிந்து படிக்க முடிகிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர், ஆலிவர் சேக்ஸ், தமிழில் பேராசிரியர் ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக். 327, விலை 320ரூ. ஆங்கிலேய நரம்பியல் வல்லுனர், அறிவியல் வரலாற்று ஆசிரியர், எழுத்தாளரான ஆலிவர் உல்ப் சேக்ஸ், மருத்துவ உலகில் சந்தித்த அனுபவங்களை பல நுால்களாக தந்திருக்கிறார். அதில், நரம்பியல் கோளாறுகளால் மறதி நோய்க்கு ஆளானவர்கள் குறித்து, ‘தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்’ என, ஆங்கிலத்தில் அழகிய நாவலாக தந்துள்ளார். இந்த நுாலை தமிழில் படிக்க, அலுப்புத்தட்டாத வகையில் அதே பாணியில் […]

Read more

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, ரவிபிரகாஷ், உங்கள் ரசிகன் பதிப்பகம், விலை 420ரூ. இந்நுாலில், 50 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதில், சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள், கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற பாணியிலான கதைகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியருக்கு, எழுத்துலகில் நட்பு வட்டாரம் அதிகம் என்பதை, தன் ஒவ்வொரு கதைக்கும், ஒரு பிரபலத்திடம் முன்னுரை கேட்டு, அதை பயன்படுத்தியிருக்கிறார். ரா.கி.ரங்கராஜன் முதல், இயக்குனர் ராஜு முருகன் வரை, கதைக்கு முன்னுரை தந்துள்ளனர். ‘சாவி வார இதழில், எட்டு ஆண்டுகளில், 150 சிறுகதைகள் […]

Read more

மூலிகைக் காற்று வீசட்டும்

மூலிகைக் காற்று வீசட்டும், ஜெ.ஜெய வெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.110, விலை 100ரூ. சுற்றுச்சூழல் மாசாகி வரும் இக்காலத்தில் சுத்தமான காற்று எங்கே கிடைக்கிறது? தனிமனித முயற்சியால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என, இந்த நுால் மூலம் வழிகாட்டுகிறார், சித்த மருத்துவரான டாக்டர் ஜெயவெங்கடேஷ். ராசிக்கு பொருத்தமான மரத்தையோ, குலதெய்வத்தின் தலவிருட்சத்தையோ வீட்டில் நட்டு பராமரியுங்கள். மூலிகைச் செடிகளை வளருங்கள். சுத்தமான மூலிகை காற்று உங்களை சுற்றி வீசும் என்கிறார். நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், வேதங்களில் தாவரங்கள் என அபூர்வமான தகவல்களுடன் தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]

Read more
1 2 3 4 5 6