போராளியின் காதலி

போராளியின் காதலி, வெற்றிச்செல்வி, சோழன் படைப்பகம், எண்10, 6வது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை 78, விலை 120ரூ.

தமிழ் ஈழப்போரின் இறுதி நாட்களில் இலங்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நாவலாக அளித்துள்ளார் ஆசிரியர். எத்தனை எத்தனை இடர் இன்னல்கள் அங்கு வாழும் தமிழ் மக்கள் அடைந்துள்ளனர். படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தரையில் கிடப்பதில் பிணங்கள் எவை? உயிர் இருக்கும் உடல்கள் எவை? என கண்டுபிடிப்பதே சிரமமாகிப்போனது என்ற வரிகள் அடங்கிய கடைசி அத்தியாயங்களை படிக்கும்போது இதயம் கனக்கிறது. அழகான காதலோடு தொடங்கி, மயான அமைதியாய் முடிந்துள்ளது நாவல்.  

—-

 

மனைவி அமைவதெல்லாம், மதுராந்தகம் குமார், ஸ்ரீசக்தி பப்ளிகேஷன்ஸ், 8, ரங்கன் தெரு, மதுராந்தகம் 603306, விலை 30ரூ.

19 சுயமுன்னேற்றக் கட்டுரைகள் அடங்கிய சிறு நூல்.  

—-

 

விடுபூக்கள், தொ. பரமசிவன், கயல் கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-865-7.html

சமூகத்தில் மக்கள் கவனியாது விட்டுவிட்ட பொருட்கள் மற்றம் நிகழ்வுகளை கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை நூல் இது. செய்யுள் மேற்கோள்களுடன் எழுதப்பட்டுள்ள நூலை படிக்கும்போது அடடே அப்படியா என கூறு வைக்கிறது. நன்றி; தினத்தந்தி, 14/8/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *