ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், விவேகானந்தன் இனியன் சம்பத், கல்பனாதாசன், இனியன் சம்பத் பதிப்பகம்,  விலை 659ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-0.html

சிறந்த சிந்தனையாளரான சம்பத், ஈ,வெ,ரா. குடும்ப வாரிசு. அத்துடன் தி.மு.க. வளரும் காலத்தில் அண்ணாதுரையின் வலது கரமாக இருந்தவர். தி.மு.கவில் சிந்தனையாளர் என்ற முத்திரையுடன் கருத்துக்களை எடுத்துச் சொல்லி இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக இருந்தவர். பாராளுமன்றத்தில், தமிழக வளர்ச்க்காக குரல் கொடுத்தவர். திராவிட நாடு சாத்தியமில்லை என்று அண்ணாதுரையிடம் வாதிட்டவர். கிடாக்காதுன்னு தெரிஞச பிறகு அது மோசடியல்லவா? அண்ணாதுரையிடம் நேரில் கேட்டார். அப்போது அண்ணாதுரை பதிலாக திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று வெறியேற்றிவிட்டோம். இப்போது இல்லை என்று சொன்னால் தொண்டன் படுத்துவிடுவான். அதனாலே படிப்படியா உணர்த்தி பின்னர் விட்டுவிடலாம் என்றார். தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்று சட்டை கிழிந்து வெளியேறிய சம்பத், அண்ணாதுரைக்கு எழுதிய கட்டுரையும் இதில் உண்டு. அரசியல் வாதிகளுக்கு சொந்தப் பெயரை மாற்றிடும் வகையில் பெயருக்கு முன் அடைமொழி தேவையில்லை என்ற அவரது ஆழமான கருத்து, உட்பட பல தகவல்கள் உள்ளன. திராவிட இயக்கம் குறித்த ஒரு விசாலமான உண்மைப் பார்வையைக் கொண்ட நூல். சம்பத் எழுத்துக்கள், அவரது பேச்சு சிடி இந்த நூலுடன் தரப்படுகிறது. -பாண்டியன்.

 —

பன்னிரு ஆழ்வார்கள் 108 திவ்யதேசம் திருயாத்திரை, சூலூர் கலைப்பித்தன், சூலூர் கலைப்பித்தன், கோவை 641402, பக்கங்கள் 370, விலை 250ரூ.

ஆழ்வார்கள் பன்னிருவரின் வரலாறும், அவர்கள் பாடியருளிய, 108 திவ்ய தேசங்களின் வரலாற்றுச் செய்திகளும் இந்நூலில் தெரிவித்துள்ளனர். எளிய தமிழ்நடையும், இன்றியமையாத திவ்வியப் பிரபந்த பாசுரங்களும், திருக்குறள், புறநானூறு போன் நூல்களின் ஒப்பீடும் நூலிற்கு அழகு சேர்க்கின்றன. நல்ல தாளில், நன்கு அச்சிட்டுள்ள இந்நூல் படித்து பாதுகாத்து வைக்க வேண்டிய நூலாகத் திகழ்கிறது. நன்றி: தினமலர், 24 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *