ஸ்ரீ ரமண மகரிஷி

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக். 344, விலை 160ரூ.

To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-512-0.html

இந்தியத் திருநாட்டின் பெருமைகளுள் குறிப்பிடத்தக்கது, ஞானியர் பலர் தோன்றி, மக்களை நெறிப்படுத்தியதாகும் என்பர். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர், வடநாட்டில் தோன்றியதுபோல, ராமலிங்க சுவாமிகள், பட்டினத்தார் போன்றவர்கள் தென்னாட்டில் தோன்றி பெருமை சேர்த்தனர்.

அண்மையில் வாழ்ந்து மக்களை நெறிப்படுத்திய ஸ்ரீரமண மகரிஷியும் இன்றியமையாத மகான் ஆவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது.

ஸ்ரீரமணரின் இளம் வயது தோழனான ரங்கன் மீது பகவான் கொண்ட பிரியமும், ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (மகா பெரியவாள்), பால் பிரண்டனை, ஸ்ரீரமணரிடம் அனுப்பி, ஆன்ம ஞானம் பெறச் செய்ததும் போன்ற நுட்பமான செய்திகள், படிக்கப் படிக்கப் பரவசம் தருகின்றன.

நான் யார்? என்ற மூலப்பொருளை அறிவித்த ஸ்ரீரமணரின் இந்த வரலாற்று நூலை, அனைவரும் படித்துப் பயன் அடையலாம்.

-டாக்டர் கலியன் சம்பத்து.

 

—-

 

கடலங்குடியின் தேவி பாகவதம், குருபிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 100ரூ.

ஸ்ரீதேவி பாகவத புராணம் மிக எளிமையான, அழகான தமிழ் நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் சற்று பெரிய எழுத்தில் வெளியிட்டிருந்தால் வயதானவர்களும் சிரமமின்றிப் படிக்க வசதியாக இருந்திருக்கும்.

-சிவா.

நன்றி: தினமலர், 15/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *