தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு, சி. சரவணன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, பக். 184, விலை 80ரூ.

To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-845-6.html

ஸ்பானிய நாட்டுக் குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு
பொருள் கி.மு. 40,000ல் செய்யப்பட்டதாய்க் கண்கிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் பயன்பாடு
அவ்வளவு தொன்மையானது.

உலக அளவில் தங்கத்தைப் பயன்படுத்துவ்தில் நாம்தான் நம்பர் ஒன் பேர்வழிகள். சென்ற
2010லம் ஆண்டில் மட்டும் தங்கத்தில் 1லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு
செய்திருக்கிறோம் நாம். இன்றைய நிலையில் பங்குச்சந்தை மியூச்சல் பண்ட், ரியல்
எஸ்டேட் போன்ற முதலீடுகளில் நம் மக்களுக்கு அதிக நம்பிகையில்லை, பெரும்பாலோர்
தங்கத்தில்தான் முதலீடு செய்ய விரும்புகிறனர் உன்பதே நிதர்சனம். இது நேரத்திற்கு
ஏற்ற புத்தகம்.

தங்க முதலீட்டை லாபகரமாகச் செய்யும் வழிமுறைகள், தங்க நகை வாங்கும்போது
கவனிக்க வேண்டியவை, தங்கத்தைப் பாதுகாக்கும் முறைதான், என விரிவாக
தரப்பட்டுள்ள நூல்.

-சிவா.

நன்றி: தினமலர் 16/10/11

 

—-

 

அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை-2012, ஹீலர் பாஸ்கர், ப்ரவாகம் பப்ளிகேஷன்ஸ், 23/31, ராமலிங்கசாமி தெரு, அம்மாப்பேட்டை, சேலம் 636003, பக். 319, விலை 200ரூ.

அலோபதி, ஆயுர்வேதிக், அக்குபஞ்சர் என்று உலகில் எத்னையோ மருத்துவம் உள்ளன. ஆனால் இந்த அனாடமிக் மருத்துவம் முற்றிலும் வித்தியாசமானது. இதில் மருந்தோ, மருத்துவரோ தேவையில்லை என்கிறார் இந்நூலாசிரியர். பொதுவாக நோய் இரண்டு வகையானது.

ஒன்று நம் உடலுக்குள் தானாகத் தோன்றுவது. அதாவது சர்க்கரை நோய், தைராய்டு, ரத்த அழுத்தம், ஸைனஸ், ஆஸ்த்துமா, கேன்ஸர்… என்று நூற்றுக்கணக்கில் உள்ளன.

இரண்டாவது வெளியில் இருந்து வருபவை. அதாவது விபத்துக்கள் மூலம் ஏற்படுகிறவை. இந்த வகையான நோய்க்கு, இந்த அனாடமிக் சிகிச்சை பலன் அளிக்காது. அதற்கு அலோபதியையோ, மற்ற மருத்துவத்தையோ உடனடியாக அணுகவேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர்.

இதில் முதல் வகையான நோய்கள்தான் உலகில் 95 சதவிகிதம் உள்ளன என்று கூறும் ஆசிரியர், இவை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரு திரவம் நமக்குள் உள்ளது. அந்தத் திரவம் எது? அதைச் சுரக்கும் சுரப்பியின் பெயர் என்ன? அது எப்படி அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது? அதை எப்படிச் சுரக்க வைப்பது என்ற விபரங்களை நாம் தெரிந்து கொண்டால், நமக்கு நாமே வைத்தியராகி, நோய்நொடி அண்டாத வாழ்க்கையை வாழலாம் என்கிறார். இந்த விபரங்களை இந்நூலில் மிக விளக்கமாக விவரித்துள்ளார்.

தவிர, இது உலகில் அனைவருக்கும் எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக டௌன்லோடு செய்து கொள்ள www.anatomictherapy.org என்ற வெப்சைட் முகவரியையும் தந்துள்ளார். இது, சி.டி.யாகவும் கிடைக்கிறது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 15/5/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *