நற்றிணை பதிப்பகம்

கடைத்தெருக் கதைகள்

கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆ. மாதவன் தமிழ்ச் சிறுகதை உலகில் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர். இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, அன்றைய சிற்றிதழ்களில் வெளியானவை. மறுபதிப்பு காண்பதும் இவை வெளியான சிற்றிதழ்களும் இத்தொகுப்பின் சிறப்புக்கு சாட்சியங்கள். திருவனந்தபுரத்தில் அங்காடி வீதியில் கடை வைத்திருந்தவர் பார்க்க நேர்ந்த மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையில் நேர்ந்த, நேர்ந்திருக்கக்கூடிய, நேர்ந்திருக்க வேண்டிய சம்பவங்களின் நீட்சிதான் […]

மனத்தோட்டத்து மலர்கள்

மனத்தோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்கள் எப்போதுமே ருசிகரமானவை. முன்னணியில் இருந்த, இருக்கும் பிரபலங்களை பேட்டிக்காக நேரடியாக சந்தித்து அளவளாவிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் தனது இனிய அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் கொற்றவன். தமிழ் சினிமாவில் கலை இயக்கத்தில் கொடிகட்டிப் பறந்த பா. அங்கமுத்து தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. கட்சியின் கொடியை வடிவமைத்தவர் என்ற தகவல் ஆச்சரியமூட்டுகிறது. ஸ்டண்ட் இயக்குனர் என். சங்கர், எம்.ஜி.ஆர். மீது […]

சார்வாகன் கதைகள்

சார்வாகன் கதைகள், சார்வாகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 544, விலை 400ரூ. சார்வாகனின் 41 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் கொண்ட தொகுப்பு. சார்வாகன் எழுத்தாளர் மட்டுமல்ல. தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவைச்சிகிச்சைத் துறையில் உலகப் புகழ்பெற்ற மருத்துவரும் ஆவார். இந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். இவரின் எழுத்து வன்மை தொடர்பாக அசோகமித்திரன், மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே.கிரானின், சாமர் செட் மாம் எனத் தொடங்கி […]

மொழிப்போர்

மொழிப்போர், ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நடத்திய மொழிப்போர், மற்றுமொரு சுதந்திர போராட்டமாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. […]