தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ. தெரியாத விஷயம் எல்லாம் தமிழ் சினிமாவின் பழைய சங்கதிகள்தான். சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சுவாரசியமான சாற்றின் துளிகள்தான். ஆனால் மரணமசாலா எழுத்தைக் கடைப்பிடிப்பதில் நிபுணரான பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் கைவண்ணத்தில் எடுத்தால் வைக்கவே முடியாத விதத்தில் எழுதப்பட்டிருக்கும் நூல்தான் தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் ஆரம்ப கட்டம், தோல்வியிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், சறுக்கி விழுந்து காணாமல் போன நொடிகள் என எதெல்லாம் படிக்க ஆர்வமாக […]

Read more

ஜமீன் கோயில்கள்

ஜமீன் கோயில்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, சூரியன் பதிப்பகம், விலை 140ரூ. ஜமீன்தார்கள் என்றாலே ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகாரத் தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததையும், பாரம்பரியமான ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததையும் விளக்குவதுதான் இப்புத்தகம். நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026627.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நான் உங்கள் ரசிகன்

நான் உங்கள் ரசிகன், மனோபாலா, சூரியன் பதிப்பகம், விலை 180ரூ. ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த இந்த சூப்பர் ஹிட் தொடர், திரையுலகில் கால் பதிக்க முற்படும் / பாடுபடும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை 200ரூ. எதை நம்புவது என்று தெரியாமல் எல்லா தரப்பையும் நம்பி, அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து சகல மருந்துகளையும் உட்கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இந்த அறியாமையை இந்நூல் போக்குகிறது. நன்றி: குங்குமம், 12/1/2018.  

Read more

தமிழ்நாட்டு நீதிமான்கள்

தமிழ்நாட்டு நீதிமான்கள், கோமல் அன்பரசன், சூரியன் பதிப்பகம், விலை 190ரூ. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறை வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், பக்கம் 304, விலை ரூ.200. நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஒரு மருத்துவர் கூறும் நோய் குறித்தோ, பரிந்துரைக்கும் சிகிச்சை குறித்தோ நோயாளிக்கு சந்தேகம் வரும்போது, வேறு மருத்துவரிடம் மறுஆலோசனை கேட்கத் தயங்குவோருக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்துவது , நோய் வரும் முன்னர் காக்கும் வழிகளை எடுத்துச் சொல்வது ஆகியவையே இந்த நூலின் முக்கிய சாராம்சமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் முக்கியமான நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள், சிகிச்சையளிக்கும் […]

Read more

உயிர்ப்பாதை

உயிர்ப்பாதை, கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் – பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க ஜப்பான் முற்பட்டதும், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்ததையும் சுவாரசியமான நடையில் விளக்கும் நூல். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

எனக்குரிய இடம் எங்கே

எனக்குரிய இடம் எங்கே?, ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. கல்விச் சீர்திருத்தம், அதற்கு தேவைப்படுகிற சுதந்திரம், அதற்குண்டான சிந்தனைகள் என எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பேராசிரியர் மாடசாமி இதில் எடுத்துரைப்பது மிக எளிய வகை. ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்? அது ஆசிரியரின் இடமா? மாணவனின் இடமா? ஆசிரியர் இடம் எனில், மாணவனுக்குரிய இடம் எங்கே? இப்படிக் கேள்விகளை எழுப்பி, பள்ளிகளையும், கல்லூரிகளையும் பிரியமாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளை இந்த நூலில் அவர் ஆராய்கிறார். மாணவர்கள் தங்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் […]

Read more

நூறு வயது வாழ நூறு உணவுகள்

நூறு வயது வாழ நூறு உணவுகள், ஆர். வி. பதி. அழகு பதிப்பகம், விலை 140ரூ. நீண்ட நாட்கள் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. அப்படிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் பழங்கள், கீரைவகைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற நூறு வகையான உணவு முறைகளையும், அதன் பயன்பாடுகளையும் இந்த நூலில் ஆர். வி. பதி எடுத்துக்கூறியுள்ளார். நோய்கள் வராமல் தடுக்கவும், உடலைச் சீராக வைத்துக் கொள்ளவும் இந்த நூல் பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —-   […]

Read more

ஸ்ரீ அரவிந்த் அன்னை

ஸ்ரீ அரவிந்த் அன்னை, எஸ். ஆர் . செந்தில் குமார், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மிரா அல் – பாஸாவாக பிறந்த பெண் குழந்தை, இந்தியாவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையாக மலர்ந்த விதத்தை கூறுகிறது இந்நூல். கருவிலே திருவுடன் பொலிந்து பிறந்து வளர்ந்த காலத்தில் தாம் தெய்விக குழந்தை என்பதை நிரூபித்தார், மிரா. பின்பு அல்ஜீரியா சென்று தியான் என்பவரிடம் சித்துக்கலை பயின்றார். ஒருமுகப்பட்ட மனதின் வலிமை குறித்து மிராவின் ஆராய்ச்சிகள், சோதனைகள் பவுத்த […]

Read more
1 2 3 4