மருத்துவக் கையேடு

மருத்துவக் கையேடு, மணிமேகலை பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17. விலை 100ரூ.

சர்க்கரை நோய், காசநோய், பெண்களின் கர்ப்பகாலம், ஜீரணகோளாறுகள், நரம்புக்கோளாறு, இப்படி பலதரப்பட்ட நோய்கள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேள்வி பதில் வடிவத்தில் எழுதியுள்ளார் டாக்டர் எஸ். ஜீவராஜன். மொத்தம் 503 கேள்வி பதில்கள். அனைவருக்கும் பயன்தரக்கூடிய மருத்துவ நூல் விலை 100ரூ.

இதே நூலாசிரியர் எய்ட்ஸ் இல்லா இனிமையான உலகம் என்ற நூலையும் எழுதியுள்ளார். விலை 75ரூ.

—-

 

வின்ஸ்டன் சர்ச்சில் 100, ராம்பிரசாந்த், 105/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 50ரூ-

வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது அவருடைய மகள் குடித்துவிட்டு லண்டன் முக்கிய வீதி ஒன்றில் கலாட்டா செய்துகொண்டு இருந்தாள். அவளை வேடிக்கை பார்க்க பெருங்கூட்டம் கூடியதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சர்ச்சில் அவளை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், இந்த செய்தியை எல்லா பத்திரிகைகளிலும் வெளியிடச்செய்தார்.

வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய 100 சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து எழுதிஉள்ளார் ஆசிரியர் கோபி சரபோஜி.

 

—-

உலக வெப்ப உயர்வும், உருகி வரும் பனிமலைகளும், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 90ரூ.

பூமி வெப்பமயமாகி வருவதால் ஏறப்டும் தீங்கு குறித்து மக்களுக்கு விவரிக்கும் புத்தகம் இது. மனிதன் இயற்கை வளங்களை சுரண்டுவதால் தற்போது ஆண்டுதோறும் உலகின் சராசரி வெப்பநிலை உயர்ந்துவருகிறது. அதன் காரணமாக மனித குலமும் பூமிப்பந்தும் இதுவரையில் சந்திக்காத அளவில் பருவநிலை மாற்றங்களையும் இயற்கை பேரழிவுகளையும் சந்தித்து வருகிறது.

மின்சார உற்பத்தி போக்குவரத்து வாகனங்களின் ஓட்டம் போன்றவற்றுக்காக நாம் மிக அதிக அளவில் பெட்ரோலியம், நிலக்கரி ஆகிய எரிப்பொருட்களை எரிப்பதால் காற்று மண்டலம் நச்சு வாயுக்களினால் மாசு அடைகிறது.

உலக வெப்பத்தை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மாற்று எரிசக்தி தேவை குறித்தும் விளக்கி கூறுகிறார் ஆசிரியர் வேணு சீனிவாசன்.

—–

 

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 150ரூ

To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-493-4.html

நாட்டுக் கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் பெரும் லாபம் ஈட்ட முடியம் என்பதையும், நாட்டுக் கோழி வகைகள், கோழிகளுக்கு வரும் நோய்கள், அதைத் தடுக்கும் முறைகள் ஆகியவற்றையும் இந்த நூலில் கால்நடை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் முனைவர் கு. நாகராசன் விரிவாக எழுதியுள்ளார்.

இந்த நூல் கோழி வளர்ப்பில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களுக்கு சிறந்த கையேடு.

நன்றி: தினத்தந்தி, 07 மார்ச் 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *